டிம்மி ஒரு குட்டி பூனை, அதின் உரிமையாளர் அது குணமடைய இயலாதவாறு நோயுற்றிருப்பதாக நினைத்து அதை விலங்குள் காப்பகத்தில் விட்டார், அந்த பூனைக்குட்டி மீண்டும் ஆரோக்கியம் பெறும்படியாக கவனிக்கப்பட்டு, கால்நடை மருத்துவரால் தத்தெடுக்கப்பட்டது. பின்னர் அது முழுநேர காப்பகவாசியாக ஆனது, இப்போது தனது நாட்களை அறுவை சிகிச்சையிலிருந்து அல்லது ஒரு நோயிலிருந்து மீண்டுவரும் பூனைகள் மற்றும் நாய்களுக்கு “ஆறுதலளிக்கும்” வகையில் – தனது நாட்களை செலவிடுகிறது.

இந்த கதை, நம்முடைய அன்பான தேவன் நமக்காக என்ன செய்கிறார் என்பதற்கும், அதற்கு பதிலாக மற்றவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கும் ஒரு சிறிய உதாரணம். நம்முடைய நோய்களிலும் போராட்டங்களிலும் அவர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார், மேலும் அவர் தம்முடைய பிரசன்னத்தினால் நம்மைத் ஆறுதல்படுத்துகிறார். 2 கொரிந்தியரில் அப்போஸ்தலனாகிய பவுல் நம் தேவனை “இரக்கத்தின் பிதா, சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்” என்று அழைக்கிறார் (1:3). நாம் ஊக்கம் இழக்கும்போது, மனச்சோர்வில் உள்ளபோது அல்லது தவறாக நடத்தப்படும்போது, ​​அவர் நமக்காக இருக்கிறார். நாம் ஜெபத்தில் அவரிடம் திரும்பும்போது, ​​அவர் “சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு  ஆறுதல்செய்கிறவர்” (வச.. 4).

ஆனால் 4 வது வசனம் அங்கு முடியவில்லை. கடுமையான துன்பங்களை அனுபவித்த பவுல் தொடர்கிறார், “எந்தவொரு பிரச்சனையிலும் இருப்பவர்களை நாம் தேவனிடமிருந்து பெறும் ஆறுதலால் ஆறுதல்படுத்த முடியும்.” நமது பிதா நம்மை ஆறுதல்படுத்துகிறார், அவருடைய ஆறுதலை நாம் அனுபவிக்கிறபோது, ​​மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க நாம் திராணியுள்ளவர்களாக்கப்டுகிறோம்.

நமக்காக துன்பப்பட்ட இரக்கமுள்ள இரட்சகர், நாம் அவதிப்படுகிற துன்பத்தை விட அதிகமாக நம்மை ஆறுதல்படுத்துகிறார் (வச.. 5). அவர் நம்முடைய வலியில்  நமக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கும் அவ்வாறே செய்ய நம்மை தயார்படுத்துகிறார்.