அவளது கல்லூரி கைப்பந்து அணியில், என் பேத்தி வெற்றியின் கொள்கை ஒன்றை கற்றுக்கொண்டாள். பந்து தன் வழியில் வந்தபோது, ​​எந்த நிலையிலும், அவளால் “பந்தை சிறப்பாக” விளையாட முடியும். தந்திரங்களை பயன்படுத்தாமலும், குற்றம் சாட்டாமலும், சாக்கு சொல்லாமலும், ஒரு சிறந்த சூழ்நிலையில் தனது அணியினரை கொண்டுச்செல்லும் ஒரு ஆட்டத்தை அவளால் ஆட முடியும் என்பதே. எப்போதும் இருக்கும் நிலைமையை மேம்படுத்துங்கள்.

தானியேலும் மூன்று எபிரேய நண்பர்களும் பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சரால் சிறைபிடிக்கப்பட்டபோது தானியேலின் பதிலும் அதுதான். அவர்களுக்கு புறமத பெயர்கள் வழங்கப்பட்டாலும், எதிரிகளின் அரண்மனையில் மூன்று வருட “பயிற்சி” எடுக்கும்படி கட்டளையிடப்பட்டாலும், தானியேல் ஆத்திரமடையவில்லை. அதற்கு பதிலாக, ராஜாவின் உயர்ரக  உணவையும் திராட்சரசத்தையும் சாப்பிடுவதன் மூலம் தேவனின் பார்வையில் தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம் என்று அவர் அனுமதி கேட்டார். இந்த சுவாரஸ்யமான வேதத்தின் சம்பவம் காட்டுவது போல், மரக்றிகளையும் தண்ணீரையும் மட்டும் பத்து நாட்கள் சாப்பிட்ட பிறகு (தானியேல் 1:12), தானியேலும் அவருடைய நண்பர்களும் “ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது” (வச.. 15).

மற்றொரு முறை, நேபுகாத்நேச்சார் தானியேல் மற்றும் அரண்மனை ஞானிகள் அனைவரையும் ராஜாவின் குழப்பமான சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் சொல்ல முடியாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மீண்டும் மிரட்டினார். மீண்டும், தானியேல் பீதியடையவில்லை, ஆனால் “பரலோக தேவனிடமிருந்து” இரக்கம் கோரினார், மறைபொருள் அவருக்கு ஒரு தரிசனத்தில் வெளிப்பட்டது (2:19). தேவனைப் பற்றி தானியேல் அறிவித்தபடி, “ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது” (வச.. 20). சிறைப்பிடிக்கப்பட்ட காலம் முழுவதும், தானியேல் எதிர்கொண்ட மோதல்களுக்கு மத்தியிலும் தேவனிடம் சிறந்ததை நாடினார். நம்முடைய தொல்லைகளிலும், நாம் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, அதை தேவனிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நிலைமையைச் சிறப்பாக மாற்றுவோம்.