ரோஹித்தின் பெற்றோர்கள் அவனை ஷீலாவிடம் ஒப்படைத்தபோது அழுதான். இது அவனது அம்மாவும் அப்பாவும் அவனை அங்கே விட்டுவிட்டு ஆராதனைக்கு சென்றதால் குழந்தை பருவத்திலிருக்கும் அவனுக்கு முதல் ஞாயிறு பள்ளி – அவன் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. அவன் நன்றாக இருப்பான் என்று ஷீலா அவர்களுக்கு உறுதியளித்தார். அவள் அவனை பொம்மைகளாலும் புத்தகங்களாலும் ஆறுதல்படுத்த முயன்றாள், ஒரு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தாள், சுற்றி நடந்தாள், அசையாமல் நின்றாள், அவனுக்கு என்ன வேடிக்கையாக இருக்குமோ அதை பேசினாள். ஆனால் எல்லா முயற்சியும் அதிக கண்ணீரையும் மற்றும் சத்தமான அழுகையையும் ஏற்படுதியது. பின்னர் அவள் அவன் காதில் ஐந்து எளிய சொற்களைக் கிசுகிசுத்தாள்: “நான் உன்னுடன் இருப்பேன்.” அமைதியும் ஆறுதலும் விரைவாக வந்தது.

சிலுவையில் அறையப்பட்ட அந்த வாரத்தில் இயேசு தம் நண்பர்களுக்கு இதேபோன்ற ஆறுதலான வார்த்தைகளை வழங்கினார்: “பிதா. . . உங்களுக்கு உதவவும், என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்”(யோவான் 14: 16-17). அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் இந்த வாக்குத்தத்தை  அவர்களுக்குக் கொடுத்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” (மத்தேயு 28:20). இயேசு விரைவில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தார், ஆனால் அவர் ஆவியானவரை தம் மக்களுக்குள் “தங்கி” மற்றும் வாழ அனுப்புவார்.

நமக்கு கண்ணீர் வழியும் போது ஆவியியானவரின் ஆறுதலையும் சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். நாம் என்ன செய்வது என்று யோசிக்கும்போது அவருடைய வழிகாட்டுதலைப் பெறுகிறோம் (யோவான் 14:26). தேவனைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளும்படிக்கு அவர் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் திறக்கிறார் (எபேசியர் 1: 17-20), நம்முடைய பலவீனத்தில் அவர் நமக்கு உதவுகிறார், நமக்காக வேண்டுதல்செய்கிறார் (ரோமர் 8: 26-27).

அவர் என்றென்றும் நம்முடன் இருக்கிறார்.