
தேவனுடைய ராஜ்யம்
என்னுடைய தாயார் அவருடைய வாழ்நாளில் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், சிறு பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிப்பதில் அதிக ஆர்வம் காண்பித்தார். தேவையில்லாத செலவு என்று சிறுவர் ஊழியத்திற்கு சபை ஓதுக்கிய நிதியை தடைசெய்ய சிலர் முயற்சி செய்தபோது, தன்னுடைய கருத்துவேறுபாட்டை எனது தாயார் வெளிப்படையாய் முன்வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். “என்னுடைய பிரசவகாலத்தில் ஒரேயொரு கோடைவிடுமுறையில் மட்டும் இந்த ஊழியத்தை நான் தவிர்க்கநேரிட்டது, அவ்வளவுதான்” என்று என் தாயார் என்னிடத்தில் கூறியிருக்கிறார். என்னுடைய கணக்கின்படி, எனது தாயார் தொடர்ந்து 55 ஆண்டுகள் இந்த ஊழியத்தை சபை மூலமாக செய்து வருகிறார்.
இயேசு சிறுபிள்ளைகளைச் சந்திக்கும் சுவிசேஷத்தின் பிரபலமான சம்பவம் மாற்கு 10ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவை நெருங்கவிடாமல் சீஷர்கள் தடைசெய்தனர். அதைக் கண்டு இயேசு விசனமடைந்தார் என்று மாற்கு பதிவுசெய்கிறார். அத்துடன் தன் சீஷர்களை நோக்கி, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (வச. 14) என்று கடிந்துகொள்கிறார்.
சார்லஸ் டிக்கன்ஸ் இப்படியாக எழுதுகிறார், “இந்த சிறுவர்களை நான் நேசிக்கிறேன்; தேவனால் அருளப்பட்ட இந்த புதிய வரவுகள் நம்மை நேசிப்பது சாதாரண விஷயம் கிடையாது.” அதேபோன்று மூத்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பிலிருந்து சிறுவர்களை இடறப்பண்ணுகிற செயல்களைச் செய்யாமல் கவனமாய் இருப்பதும் சாதாரண விஷயமல்ல.

உன் பெயர் அவருக்கு தெரியும்
வெகுநாளாய் நாங்கள் போகாமல் இருந்த எங்கள் திருச்சபைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து நானும் எனது கணவரும் போகத் தீர்மானித்தோம். மக்கள் எங்களை எப்படி நடத்துவார்கள்? மறுபடியும் எங்களை எப்படி வரவேற்பார்கள்? எப்படி நேசிப்பார்கள்? சபையை விட்டுச் சென்றதை மன்னிப்பார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலே பதில் கிடைத்தது. சபைக்குள்ளே நாங்கள் நுழைந்தபோது, எங்கள் பெயர்கள் தொடர்ந்து எங்கள் காதுகளில் ஒலித்தது. “பாட்! டான்! உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி!” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றனர். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிறுவர்களுக்காய் எழுதிய புத்தகமொன்றில், “வாசகர்களே, இந்த சோகமான உலகத்தில், நீங்கள் விரும்பும் நபர் உங்களை பேர்ச்சொல்லி அழைப்பதைக் காட்டிலும் இன்பம் வேறொன்றுமில்லை” என்கிறார்.
தேவன் அதேபோன்று ஒரு உறுதியை இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுத்துள்ளார். நாங்கள் தற்காலிகமாக வேறொரு திருச்சபையைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனை விட்டு விலகினார்கள். ஆனாலும் தேவன் அவர்களை மீண்டும் வரவேற்றார். அவர் ஏசாயா தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பி, “பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன் ; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்” (ஏசாயா 43:1) என்று உறுதிகொடுத்தார்.
இந்த உலகத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாய், பாராட்டப்படாதவர்களாய், கவனிக்கப்படாதவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவன் நம் ஒவ்வொருவரையும் பேர்பேராய் அறிந்திருக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (வச. 2). இது இஸ்ரவேலுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் அல்ல. இயேசு தன்னுடைய வாழ்க்கையையே நமக்காய் பலியாய் கொடுத்துள்ளார். அவருக்கு நம்முடைய பெயர்கள் தெரியும். ஏன்? அன்பில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.

காணாத ஆச்சரியம்
திருமதி. கூட்ரிச்சின் சிந்தையில் பல ஆண்டுகளாய் அவள் கடந்து வந்த சவால்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்துவந்து போய்கொண்டிருந்தது. நீரோட்டத்தை பார்வையிட்டபடி ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையேட்டில் எழுதத்துவங்கினாள். “என்னுடைய பிரியமான நாற்காலியில் அமர்ந்து, என் கால் தரையில்பட, என் இருதயம் காற்றில் பறந்தது. சூரியஒளியில் மின்னிய நீரோட்டம் தொடர்ந்து ஓடுகிறது - எங்கே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே – உம்முடைய அளவில்லா ஆசீர்வாதத்திற்காகவும் அழிவில்லா அன்பிற்காகவும் நன்றி! அது எப்போதும் என்னை மெய்சிலிர்க்கப் பண்ணுகிறது – காணமுடியாத ஒருவரை இந்த அளவிற்கு நான் நேசிக்கிறேனே, அது எப்படி?” என்று மெய்மறந்து எழுதினாள்.
அப்போஸ்தலர் பேதுருவும் இந்த ஆச்சரியத்தை அனுபவித்துள்ளார். அவர் இயேசுவை தன் சொந்த கண்களினால் பார்த்திருக்கிறார். ஆனால் அவருடைய நிருபத்தை வாசித்தவர்கள் பார்த்ததில்லை. “அவரை நீங்கள் காணாமலிருந்தும்… அவரிடத்தில் விசுவாசம் வைத்து... சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூருகிறோம் (1 பேதுரு 1:8). அவருடைய கட்டளையின்பேரில் அல்ல மாறாக, பரிசுத்த ஆவியின் துணையினாலே (வச. 11) நாம் அவரை நேசிக்கிறோம்; அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்றும் அறிகிறோம்.
நம்மைப் போன்றவர்கள் மீது அவர் அக்கறை செலுத்துகிறார் என்பதை வெறும் கேள்விப்படுவது மட்டுமல்ல நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய காணப்படாத ஆச்சரியமான பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியையும் முழுமையாய் அனுபவிப்பது.

நீ யார்?
எங்கள் காணொலிக் காட்சியின் தலைவர், “காலை வணக்கம்!” சொன்னார். நானும் பதிலுக்கு “ஹலோ” சொன்னேன். ஆனால் நான் அவரைப் பார்க்கவில்லை. காணொலியில் என்னுடைய தோற்றம் எனக்கு இடைஞ்சலாய் இருந்தது. நான் இப்படியா இருக்கிறேன்? அந்த காணொலி கூடுகையில் எங்களோடு இணைந்த மற்றவர்களின் சிரித்த முகங்களையும் பார்த்தேன். அது அவரவரின் தோற்றத்தை சரியாய் காண்பித்தது. ஆக, இது நானாகத்தான் இருக்கமுடியும். நான் சற்று எடையைக் குறைக்கவேண்டும்; முடிவெட்ட வேண்டும்.
பார்வோனுடைய எண்ணத்தில் அவன் மேன்மையானவனாய் தெரிந்தான். அவன் “ஜாதிகளுக்குள்ளே.. பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்.. பெருந்தண்ணீர்களில் முதலையை” போன்று இருந்தவன் (எசே. 32:2). ஆனால் தேவனுடைய பார்வையில் அவன் யார் என்பது அறிவிக்கப்படுகிறது. அவனுடைய சரீரத்தை மிருகஜீவன்களுக்கு இரையாக்குவான் என்றும், “அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன் ; அவர்களின் ராஜாக்கள்…மிகவும் திடுக்கிடுவார்கள்” (வச. 10) என்றும் உரைக்கிறார். தன்னைக் குறித்து மேன்மையான எண்ணத்திற்கு பார்வோன் தகுதியுள்ளவன் இல்லை.
தேவன் நம்முடைய பாவத்தை பார்க்கும்பார்வையில் நாம் நம்மை பார்க்காத வரையில், நம்முடைய ஆவிக்குரிய தோற்றம் நமக்கு அழகாய் தெரியலாம். தேவனுடைய பரிசுத்த வரையறைக்கு ஒப்பிடும்போது, நம்முடைய “நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசா. 64:6). ஆனால் தேவன் நிஜமான வேறொன்றை நம்மில் பார்க்கிறார்: அவர் இயேசுவைப் பார்க்கிறார், இயேசுவில் நம்மைப் பார்க்கிறார்.
உன்னுடைய தோற்றத்தைக் குறித்து சோர்ந்துபோயிருக்கிறாயா? உன்னுடைய தோற்றம் உண்மையில் நீங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசுவை நம்பினால், அவரில் நிலைத்து, அவருடைய பரிசுத்தம் உன்னை மூடும்படி செய்யலாம். அப்போது, நீ கற்பனை செய்ததைக் காட்டிலும் அழகாய் தெரிவாய்.
