என்ன ஒரு கண்டுபிடிப்பு!
ரேஷ்மாவின் கண்கள் ஒரு பழங்கால டிரஸ்ஸிங் டேபிளில் பதிய, அவள் அதை விருப்பத்துடன் வாங்கினாள். அதின் டிராயரைத் திறந்தபோது, அதில் ஒரு தங்க மோதிரமும், சில குடும்பப் புகைப்படங்களும், அதின் பின்னால் பெயர், இடம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. மோதிரத்தை கண்டெடுத்த அவள், அதின் உரிமையாளரிடம் ஒப்படைக்க விரும்பினாள். புகைப்படத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க எண்ணிய ரேஷ்மா, முகநூலைப் பயன்படுத்தினாள். உரிமையாளரைக் கண்டுபிடித்த, அவள் அந்த மோதிரத்தை திருப்பி ஒப்படைத்தபோது, அந்த மோதிரம் தனது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து என்றும், இழந்த மோதிரத்தைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் உரிமையாளர் கூறினார்.
2 இராஜாக்கள் 22:8இல், இல்க்கியா “கர்த்தருடைய ஆலயத்தில் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டபோது” ஒரு அசாதாரணமான காரியத்தை கண்டுபிடித்தார் என்று வாசிக்கிறோம். “கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக” (வச. 5) ஜோசியா ராஜாவால் அறிவுறுத்தப்பட்டதால், அதை பழுதுபார்க்கும் முயற்சியில் அங்கிருந்த உபாகம புத்தகத்தைக் கண்டெடுத்தனர். “ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது” அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார் (வச. 11). யூதேயாவிலுள்ள திருச்சபையைப் போலவே, தேவனையும் அவர் அருளிய வேத வசனங்களைப் படிப்பதும் கீழ்ப்படிவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. மனந்திரும்பிய ராஜா, ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை அகற்றி, தன் தேசத்தை சீர்திருத்தத்திருக்கு வழிநடத்தினான் (23:1-24).
இன்று தேவனுடைய ஞானத்தையும் போதனையையும் வெளிப்படுத்தும், உபாகமம் புத்தகத்தையும் சேர்த்து 66 புத்தகங்கள் நமது வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளது. அவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை மாற்றி, நம் வழிகளைச் சீர்திருத்துவார். இன்று வேதாகமத்தின் வாழ்க்கையை மாற்றும் கதையில் மூழ்கி, வாழ்நாள் முழுவதும் ஆராய்வதற்கான ஞானத்தைக் கண்டறிவோம்.

ஒரு தாழ்மையான உணவு
பூனேவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு அமெரிக்க மிஷனரியை மற்ற தன்னார்வலர்கள் இரவு உணவிற்கு அழைத்தனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு உணவகத்திற்குச் சென்று, அவர்கள் ஏழு பேர் இருக்கும்போது ஐந்து உணவுகளை ஆர்டர் செய்தனர்.
“எவ்வளவு தவறான எண்ணம்,” மிஷனரி நினைத்தார். ஆனால் உணவுகள் வந்தவுடன் உணவு சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும் மிஷனரிக்கு ஐந்து விதமான சுவையான உணவுகளை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எந்த உணவையும் வீணாக்கவில்லை. இது ஒரு தாழ்மையான பாடமாக இருந்தது. அவள் ஊழியம் செய்ய ஒப்புக்கொண்ட கலாச்சாரம் அவளுக்கு இன்னும் புரியவில்லை. தனித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்க வாழ்க்கை முறை போலல்ல, இந்தியாவில் வாழ்க்கைமுறையானது, சமூகத்தில் வாழ்வது என்பதை அவள் கற்றுக்கொண்டாள். ஒருவரின் உணவையும் பொருட்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்கிறார்கள். அவளுடைய வழி அதை விட சிறந்தது அல்ல; சற்று வித்தியாசமாக இருந்தது. “என்னைப் பற்றி நான் அறிந்துகொள்ள இது உதவியாக இருந்தது” என்று அவள் ஒப்புக்கொண்டாள். அவளுடைய சொந்த பாரபட்சங்களை அடையாளம் கண்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்வது, அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு அவளுக்கு மிகுந்த உதவியாயிருந்தது.
பேதுரு, மற்றவர்களை பணிவுடன் நடத்தவேண்டிய இந்த பாடத்தை திருச்சபைத் தலைவர்களுக்கு கற்பித்தார். “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல” (1 பேதுரு 5:3) என்று மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார். இளைஞர்களுக்கு? “உங்கள் பெரியவர்களுக்கு அடிபணியுங்கள்; நீங்கள் அனைவரும் மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்” (வச. 5) என்று ஆலோசனை கூறுகிறார். மேலும் “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று வலியுறுத்துகிறார். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (வச. 6). இன்று அவருக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக தாழ்மையுடன் வாழ அவர் நமக்கு உதவுவாராக.

தேவையற்ற விருந்தினர்கள்
ஷில்பாவும் அஜய்யும், ஒரு அழகான இடத்தில் அற்புதமான தேனிலவைக் கொண்டாடினர். இருப்பினும் அவர்கள் வீடு திரும்பியபோது, அஜய்யின் பாதங்களில் ஒரு விசித்திரமான அரிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தம்பதியினர் தொற்றுநோய் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிய ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட கொப்புளங்கள் மூலம் அவரது கால்களுக்குள் புகுந்துவிட்டதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். ஒரு எதிர்பார்ப்புடன் துவங்கிய தேனிலவு, தேவையற்ற விருந்தினர்களுடனான ஒரு சவாலான போரில் முடிவடைந்தது.
பாவத்தை எதிர்த்துப் போராட தேவனிடம் உதவி கேட்காவிட்டால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவரது கனவு, பாவம் மற்றும் முரட்டாட்டம் என்னும் தேவையற்ற விருந்தினர்களுடன் போராக மாறும் என்பதை தாவீது அறிந்திருந்தார். இயற்கை உலகில் தேவன் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறார் (சங்கீதம் 19:1-6) என்றும், தேவனுடைய போதனையில் ஞானத்தை அடைந்து (வச. 7-10), காணப்பட்ட அவரது ஞானத்தை அறிவித்த பிறகு, தன்னுடைய கீழ்ப்படியாமை என்னும் ஆணவ எண்ணங்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்படி, தாவீது தேவனிடம் உதவி கேட்கிறார். “மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்; துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்” என்று எழுதுகிறார் (வச. 12-13). பாவம் என்ற தொற்று நோய் தன்னைத் தாக்காமல் இருக்க தன்னிடம் மனித வளம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். எனவே, அவர் ஞானமாக தேவனிடம் உதவி கேட்டார்.
தேவனை கனப்படுத்தும் விதத்தில் வாழ நினைக்கும் நம்முடைய வாழ்க்கையானது, பாவத்தினால் தடைசெய்யப்படவில்லை என்பதை நாம் எவ்விதம் உறுதிசெய்துகொள்ள முடியும்? நம் கண்களை அவர் மீது வைத்திருப்போம். நம் பாவத்தை ஒப்புக்கொண்டு மனந்திரும்புவோம். தேவையற்ற ஆவிக்குரிய ஒட்டுண்ணிகள் நம் வாழ்க்கையை சிதைக்காமல் இருக்க, தெய்வீக உதவியை நாடுவோம்.

பயணிக்கும் கருணை
இந்தியா முழுவதுமான சாலைப் பயணம், சில ஆபத்தான சாலைகளில் உங்களை அழைத்துச் செல்லும். முதலில், ஜம்மு காஷ்மீரில் “கில்லார்- கிஷ்த்வார் சாலை” உள்ளது. வடமேற்கு நோக்கிச் சென்றால், குஜராத்தின் டுமாஸ் கடற்கரைக்கு அருகில் நீங்கள் ஒரு பயங்கரமான அதிர்வை அனுபவிக்கக்கூடும். மத்திய இந்தியாவை நோக்கி மேலும் பயணிக்கும்போது, சத்தீஸ்கரின் பஸ்தாரில் ஓய்வெடுப்பதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அது ஒரு ஆபத்தான இடம். நீங்கள் தெற்கு நோக்கிச் செல்லும்போது, தமிழகத்தின் பயங்கரமான கொல்லிமலைச் சாலையை அடைவீர்கள். நீங்கள் ஒருவேளை பயணம் செய்யாவிட்டாலும், இவைகள் இந்திய தேசத்தின் புவியமைப்பில் இருக்கக்கூடிய அபாய சாலைகள்.
சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் இப்படித்தான் இருக்கும். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் கடினமான வாழ்க்கையை நாம் எளிதாக அடையாளம் காண முடியும் (உபாகமம் 2:7). வாழ்க்கை கடினமாக இருக்கலாம். அதற்கு இணையான மற்ற காரியங்களை நாம் காண்கிறோமா? நாம் நமது சொந்த பயணத்திட்டத்தை உருவாக்குகிறோம். தேவனின் வழியிலிருந்து திசை மாறுகிறோம் (1:42-43). இஸ்ரவேலர்களைப் போலவே, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பற்றி நாம் அடிக்கடி முணுமுணுக்கிறோம் (எண்ணாகமம் 14:2). நமது அன்றாட கவலையில், நாமும் தேவனின் நோக்கங்களை சந்தேகிக்கிறோம் (வச. 11). இஸ்ரவேலர்களின் கதை நம் சொந்தக் கதையில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.
நாம் அவருடைய வழியைப் பின்பற்றினால், ஆபத்தான சாலைகள் நம்மை அழைத்துச் செல்லும் இடத்தை விட மிகச் சிறந்த இடத்திற்கு அவர் நம்மை அழைத்துச்செல்வார் என்று தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம் தேவைகள் ஒன்றும் குறைவுபடாது (உபாகமம் 2:7; பிலிப்பியர் 4:19). இதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தும், அதைச் செய்யத் தவறிவிடுகிறோம். நாம் தேவனின் பாதையை பின்பற்ற வேண்டும்.
இன்னும் சில மணிநேரம் காரில் பயணம் செய்தால், பயமுறுத்தும் கொல்லி மலையிலிருந்து “கடவுளின் சொந்த நாடு" என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பசுமையான மற்றும் அமைதியான வயநாடுக்கு உங்களை அழைத்துச் செல்லும். தேவன் நம் பாதைகளை வழிநடத்த அனுமதித்தால் (சங்கீதம் 119:35), அவருடன் மகிழ்ச்சியுடன் பயணிப்போம். இது ஆசீர்வாதமான ஒரு பாதை!

அன்பு இல்லாமல் பயனில்லை
எனது ஸ்பெஷல் ஆர்டர் மேஜைக்கான துண்டுகளை பெட்டியிலிருந்து எடுத்து என் முன் வைத்த பிறகு, ஏதோ சரியாக இல்லை என்பதை நான் கவனித்தேன். மேஜை அனைத்து அம்சங்களும் இருந்தது, ஆனால் அதின் கால்களில் ஒன்றைக் காணவில்லை. ஒரு கால் இல்லாமல், என்னால் மேஜையை வடிவமைக்க முடியவில்லை. அது பயனற்றதாகிவிட்டது.
ஒரு முக்கிய பகுதியைக் காணவில்லையெனில் உபயோகமாக இல்லாமல் இருப்பது மேசை மட்டுமல்ல. 1 கொரிந்தியர் புத்தகத்தில், பவுல் தனது வாசகர்களுக்கு ஒரு அத்தியாவசியமான முக்கியப் பகுதி அவர்களிடம் காணவில்லை என்பதை நினைவூட்டினார். விசுவாசிகள் பல ஆவிக்குரிய வரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களிடத்தில் அன்பு இல்லை.
தனது கருத்தை வலியுறுத்த மிகைப்படுத்தப்பட்ட மொழியைப் பயன்படுத்தி, பவுல் எழுதினார். அவருடைய விசுவாசிகளுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பொருளையும் கொடுத்தாலும், அவர்கள் விருப்பத்துடன் கஷ்டங்களை அனுபவித்தாலும், அன்பின் அடிப்படையின்றி, அவர்களின் செயல்கள் அனைத்திற்கும் எந்த வித பிரயோஜனமும் இல்லை (1 கொரிந்தியர் 13:1-3). எப்போதும் பாதுகாக்கும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அன்பின் அழகை விவரிக்கும் வகையில், அவர்களின் செயல்களில் அன்பை எப்போதும் பிரதிபலிக்கவேண்டுமென்று பவுல் அவர்களை ஊக்குவித்தார் (வச. 4-7).
நாம் நம்முடைய ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும்போது, ஒருவேளை நம்முடைய விசுவாச சமூகங்களில் கற்பிக்க, ஊக்குவிக்க அல்லது சேவை செய்ய, அன்பு பிரதானமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இது ஒரு கால் இல்லாத மேஜை போன்றது. அது வடிவமைக்கப்பட்ட உண்மையான நோக்கத்தை அடைய முடியாது.