நான் மணி சத்தம் கேட்டேன்
1863 ஆம் ஆண்டு, ஹென்றி வாட்ஸ்வர்த் லாங்பெல்லோ எழுதிய "கிறிஸ்துமஸ் தினத்தன்று மணியோசைக் கேட்டேன்" என்ற பாடல், பொதுவான கிறிஸ்துமஸ் பாடலை போன்றதல்ல. கிறிஸ்துமஸின் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டிய வரிகளில், புலம்பலும், அழுகையும் இருந்தது. "விரக்தியில் நான் தலைகவிழ்ந்தேன், பூமியில் சமாதானம் இல்லையென்றேன், வெறுப்பு வலிதாய் உள்ளதால், அது பூமியிலே சமாதானம் என்ற பாடலை பரிகசிக்கிறது". எனினும் இந்த புலம்பல், நம்பிக்கைக்கு நேரே பயணித்து "தேவன் மரித்துவிடவில்லை, அவர் தூங்கவும் இல்லை, தீமை தோற்று சத்தியம் மேற்கொண்டு, மனுஷர்மேல் பிரியமும் பூமியிலே சமாதானமும் உண்டாகும்" என வாக்குறுதி அளிக்கிறது.
புலம்பலிலிருந்து நம்பிக்கை தோன்றும் இந்த வகையான வேதத்தின் புலம்பல், சங்கீதங்களிலும் காணப்படுகின்றது. சங்கீதம் 43 இல், சங்கீதக்காரன் தனக்கு எதிராய் வரும் சத்துருக்களைக் குறித்துப் புலம்புவதில் துவங்குகிறது (வ.1) மேலும், அவனுடைய தேவன் அவனை மறந்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது (வ.2). ஆனால் சங்கீதக்காரன் புலம்பிக்கொண்டே இருக்கவில்லை; தன்னால் முழுவதுமாய் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் தான் நம்புகிற தேவனை நோக்கி, "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." (வ.5) என்று பாடுகிறான்.
நமது வாழ்விலும் புலம்புவதற்கு அநேக காரணங்கள் உண்டு, அவைகளை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அந்தப் புலம்பல் நம்மை நம்பிக்கையின் தேவனுக்கு நேரே நடத்த நாம் அனுமதித்தால், நமது கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகும்.

நலமானதைப் பற்றிக்கொள்ளுதல்
எங்கள் காரை அந்த திறந்தவெளியில் நிறுத்திவிட்டு, அதைக் கடந்து எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் ஒட்டுத் துத்திகள் (பர் மலர்கள்) எங்கள் ஆடையில் ஒட்டிக்கொள்ளும். குளிர்காலத்தில் இது வாடிக்கையானதுதான். இந்தச் சிறியத் தாவரங்கள் தங்களைக் கடப்பவர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் எங்குவேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு, உதிரும்வரை அங்கேயே நிலைத்திருக்கும். அருகாமையிலும், உலகெங்கிலும்கூட விதையைப் பரப்பும் ஒட்டுத் துத்திகளின் இயற்கை வழிமுறை இது.
என்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தாவரங்களை அகற்றும்போதெல்லாம், "நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்" (ரோமர் 12:9) என்று விசுவாசிகளை அறிவுறுத்தும் இயேசுவின் செய்தியை நினைத்துக்கொள்வேன். மற்றவர்களிடம் அன்பு கூறுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிறரிடம் காணப்படும் தீமையானவற்றைப் புறந்தள்ளி, நன்மையான காரியங்களைப் பற்றிக்கொண்டால், ஆவியானவரின் வழிநடத்துதலால் நமது அன்பில் "மாயமற்றவர்களாய்" இருக்க முடியும் (வ.9).
இந்த ஒட்டுத் துத்திகளை லேசாக அகற்ற முடியாது, அவ்வளவு வலுவாக ஒட்டியிருக்கும். நாமும்கூட நன்மையானவற்றையே நோக்கிப் பார்க்க வேண்டும். நமது சிந்தையை தேவனின் இரக்கம், தயவு மற்றும் கற்பனைகள் ஆகியவற்றில் பதிய வைக்கும்போது, அவருடைய பெலத்தால் நாமும் மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பில் கட்டப்பட முடியும். நமது தேவைகளைக் காட்டிலும் பிறர் தேவைகளை முன்னிலைப்படுத்தி, நாம் "ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்க" (வ.10) தேவனே நமக்கு உதவி செய்வார்.
அந்த ஒட்டுத் துத்திகள் எரிச்சலூட்டுபவைதான், எனினும் அவைகள் எனக்கு அன்பிலே பிறரைப் பற்றிக்கொண்டிருக்கவும்; தேவனின் வல்லமையால் "நன்மையானவைகளை" (வ.9, பிலிப்பியர் 4:8–9) இறுகப் பிடித்துக்கொள்ளவும் நினைவூட்டின.

நம் புகலிடம் விரைதல்
சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அணிகளிலிருந்த சிறுவர்களின் இளைய தம்பி, தங்கையினர் எல்லாரும் அந்தப் பள்ளியின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அபாய சங்கு ஒலிக்க, உடற்பயிற்சி கூடத்தில் விளக்குகள் ஒளிர்ந்தன. தாழ்வாரத்திலிருந்த சிறுபிள்ளைகள் பயத்துடன் உடனே உடற்பயிற்சி அறைக்கு விரைந்து, தங்கள் பெற்றோரைத் தேடினர்.
தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் எச்சரிக்கை மணி எதேச்சையாக இயக்கப்பட்டிருந்தது. ஒரு ஆபத்து என்றவுடன் அந்தப் பிள்ளைகள் சற்றும் தயக்கமின்றி, தங்கள் பெற்றோரின் அரவணைப்பிற்கு ஓடியது என்னைச் சிந்திக்க வைத்தது. பயப்படும் நேரத்தில் பாதுகாப்புணர்வையும், உத்தரவாதத்தையும் அருளுபவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒருக் காட்சியாகவே கண்டேன்.
தாவீது மிகவும் பயந்த நேரத்தை வேதாகமம் பதிவிடுகிறது. சவுலும், திரளான சத்துருக்களும் அவரை விரட்டி வந்தபோது (2 சாமுவேல் 22:1), தேவன் அவரைப் பாதுகாத்தார், தேவனின் உதவிக்காக தாவீது நெகிழ்ச்சியாகத் துதிப்பாடல் பாடினார். அவர் தேவனை, " என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.'' (வ.2). என்றழைக்கிறார். "பாதாளக் கட்டுகள்" மற்றும் "மரணக்கண்ணிகள்" (வ.6 ) அவரை வேட்டையாட, தாவீதோ தேவனை நோக்கி அபயமிட்டார், அவருடைய கூப்பிடுதல் தேவனின் செவிகளில் ஏறிற்று (வ.7). இறுதியில் தாவீது, அவர் என்னை விடுவித்தார் (வ.18, 20, 49) என அறிவிக்கிறார்.
பயமும், குழப்பமும் சூழும் நேரத்தில் நாமும் நம் கன்மலையிடம் விரையலாம் (வ.32). நாம் தேவனுடைய நாமத்தில் அபயமிடுகையில், அவர் மட்டுமே நமக்குத் தேவையான புகலிடத்தையும் அடைக்கலத்தையும் (வ.2–3) அருளுகிறார்.

சுமையைக் குறையுங்கள்
நாங்கள் புதிதாய் ஆரம்பித்த வேதாகம வகுப்பிற்கு வந்த ஒரு சகோதரி தொடர்ச்சியான துயரங்களைச் சந்திக்கையில், நாங்கள் எங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எங்களை அறியாமலேயே பகிர்ந்துகொள்ளத் துவங்கினோம். தந்தையின் மரணம், விவாகரத்திற்குப் பின் வந்த திருமண நாள் நினைவுகள், செவிடாய்ப் பிறந்த குழந்தை, அவசர சிகிச்சைப் பிரிவில் பிள்ளையின் போராட்டம் என தனியாக சுமக்கக் கூடாததாகிய பாரங்களை, ஒவ்வொருவரும் எவ்வளவாய் பாதிக்கப்பட்டோமோ, அவ்வளவாய் வெளிப்படையாய்ப் பேசினோம். ஒன்றாய் நாங்கள் அழுதோம், ஜெபித்தோம். அந்நியர்களாய் அறிமுகமான அந்தக் குழு, சிலவாரங்களிலேயே நெருங்கிய நண்பர்களின் குழுவாய் மாறியது.
இன்றும் சபையென்னும் சரீரத்தின் அங்கமான விசுவாசிகள், மற்றவர்களின் துயரங்களினூடே அவர்களுக்கு ஆழமாகவும், நெருக்கமாகவும் உதவ முடியும். கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் எனும் உறவில் இணைய நீண்டகால பழக்கமோ, கருத்து ஒற்றுமையோ தேவையில்லை.
மாறாக, பவுலின் அழைப்பின்படி நாம் , "ஒருவர் பாரத்தை ஒருவர் (சுமக்கிறோம்)" (கலாத்தியர் 6:2). தேவனின் பெலனைச் சார்ந்துகொண்டு நாம் கவனித்துக் கேட்கிறோம், பரிதவிக்கிறோம், இயன்ற உதவியைச் செய்கிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நாம் "யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை(செய்ய)" (வ.10) வாய்ப்புகளை நாடலாம். நாம் அவ்வாறு செய்கையில் “தேவனிடத்திலும் பிறரிடத்திலும் அன்புகூருதல்” என்னும் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவதாக (வ.2) பவுல் கூறுகிறார். வாழ்வின் சுமைகள் பாரமானவை தான், ஆனால் அந்தச் சுமையைக் குறைக்கவே தேவன் நமக்குச் சபையென்னும் குடும்பத்தை அளித்துள்ளார்.

துரித உணவு உற்சாகம்
அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?
அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், "போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் "(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).
மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.