நல்ல மேய்ப்பன்
பாஸ்டர் வாரன், தமது தேவாலயத்தில் ஒரு நபர் தம் மனைவி மற்றும் குடும்பத்தைக் கைவிட்டார் என்று கேள்விப்பட்டபோது, அவரோடு பேசும்படி தற்செயலாக அந்த மனிதரைச் சந்திக்க உதவுமாறு தேவனிடம் கேட்டார். தேவன் செய்தார்! வாரன் ஒர் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அருகிலுள்ள சாவடியில் அந்த மனிதரைக் கண்டார். "பசியோடிருக்கும் எனக்கும் இடம் உண்டா?" என்று அவரிடம் கேட்டார், சீக்கீரமாக அவர்கள் ஆழமாகப் பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஜெபித்தனர்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் தமது மந்தையை மேய்ப்பேன் என்று கூறியது போல; ஒரு போதகராக, வாரன் தமது தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மேய்ப்பனாகச் செயல்பட்டார். தேவன் தம்முடைய சிதறிய ஆடுகளைத் தேடி, அவற்றை மீட்டு, ஒன்று சேர்ப்பதாக வாக்களித்தார் (எசேக்கியேல் 34:12-13). "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்" என்றும், "காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டு (வருவேன்)" என்றும், "எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்" என்றும் சொன்னார் (வ. 14–16). தம் ஜனங்களின் மீதான தேவனின் அன்பு இந்த ஒவ்வொரு உருவகத்திலும் எதிரொலிக்கிறது. எசேக்கியேலின் வார்த்தைகள் தேவனின் எதிர்கால செயல்களை எதிர்நோக்கியிருந்தாலும், அவை தேவனின் நித்திய இதயத்தையும் மேய்ப்பனாக வெளிப்படப்போகும் இயேசுவையும் பிரதிபலிக்கின்றன.
நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகி, நம்மை மீட்டு, நல்ல மேய்ச்சலில் அடைக்கலம் தருகிறார். ஆடுகளுக்காகத் தம்முடைய உயிரைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பரை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் ஏங்குகிறார் (பார்க்க யோவான் 10:14-15).

மிகவும் தனிமையானவன்
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். ஆதியாகமம் 39:21
ஜூலை 20, 1969 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் இறங்கும் விண்ணூர்தியிலிருந்து வெளியேறி, சந்திரனின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்கள் ஆனார்கள். ஆனால் அப்பல்லோ 11க்கான கட்டளை பிரிவின் ஊர்தியில் பறந்து கொண்டிருந்த அவர்களின் குழுவில் மூன்றாவது நபரான மைக்கேல் காலின்ஸைப் பற்றி நாம் நினைப்பதில்லை.
சந்திரனின் மேற்பரப்பைச் சோதிக்க அவரது அணியினர் ஏணியில் இறங்கிய பிறகு, காலின்ஸ் சந்திரனின் தொலைதூரப் பக்கத்தில் தனியாகக் காத்திருந்தார். அவர் நீல், பஸ் மற்றும் பூமியில் உள்ள அனைவருடனும் தொடர்பில் இல்லை. நாசாவின் பணிக் கட்டுப்பாடு, "ஆதாமிற்குப்பின் மைக் காலின்ஸ் போலத் தனிமையை எவருமே அறிந்திருக்கவில்லை" என்று கூறியது.
நாம் முற்றிலும் தனியாக உணரும் நேரங்கள் உள்ளன. உதாரணமாக, யாக்கோபின் மகன் யோசேப்பு, இஸ்ரவேலிலிருந்து எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவனுடைய சகோதரர்கள் அவனை விற்றபின் எப்படி உணர்ந்தான் என்று கற்பனை செய்து பாருங்கள் (ஆதியாகமம் 37:23-28). பின்னர் அவன் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்டதன் மூலம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டான். (39:19-20).
அருகில் எங்கும் குடும்பம் இல்லாத அந்நிய தேசத்தில் யோசேப்பு சிறையில் எப்படி உயிர் பிழைத்தான்? இதைக் கவனியுங்கள்: "அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து" (வச. 20-21). ஆதியாகமம் 39ல் உள்ள ஆறுதலான இந்த உண்மையை நான்கு முறை நினைவுபடுத்தப்படுகிறோம்.
நீங்கள் தனியாக உணர்கிறீர்களா அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறீர்களா? "நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசுவால் வாக்குப்பண்ணப்பட்ட தேவனின் பிரசன்னத்தின் உண்மையைப் பற்றிக் கொள்ளுங்கள். இயேசு உங்கள் இரட்சகராக இருப்பதால், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.

என்னால் கற்பனை செய்யத்தான் கூடும்
ஆராதனை பாடல் குழுவினர் "என்னால் கற்பனை செய்ய மட்டுமே முடியும்" என்ற பாடலை பாட தொடங்கியபோது, நான் ஒரு பெண்ணின் பின்னால் தேவாலய பீடத்தில் அமர்ந்தேன். அந்த பெண்ணின் இனிமையான குரல் என்னுடன் இசைந்துபோக, என் கைகளை உயர்த்தி நான் தேவனைத் துதித்தேன். அவளுடைய சரீர பெலவீனங்களைப் பற்றி என்னிடம் சொன்ன பிறகு, அவளுடைய வரவிருக்கும் புற்றுநோய் சிகிச்சையின் போது நாங்கள் ஒன்றாக ஜெபம் செய்ய முடிவு செய்தோம்.
சில மாதங்களுக்குப் பிறகு, வனிதா என்னிடம் தன்னுடைய மரண பயத்தைப் பற்றிச் சொன்னாள். அவளது மருத்துவமனை படுக்கையில் சாய்ந்துகொண்டு, அவளது தலைக்கு அருகில் என் தலையைச் சாய்த்து, மெல்லிய குரலில் ஜெபித்து, அமைதியாக எங்கள் பாடலைப் பாடினேன். சில நாட்களுக்குப் பிறகு வனிதா இயேசுவை நேருக்கு நேர் ஆராதிக்கையில், அவள் எப்படி இருப்பாள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
அப்போஸ்தலராகிய பவுல் மரணத்தை எதிர்நோக்கியிருந்த தமது வாசகர்களுக்கு ஆறுதல் தரும் உறுதியை அளித்தார் (2 கொரிந்தியர் 5:1). நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் அனுபவிக்கும் துன்பங்கள் வேதனை நிறைந்தவைதான், ஆனால் நம்முடைய நம்பிக்கையானது பரலோக வாசஸ்தலத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதுவே இயேசுவுடனான நம்முடைய நித்திய வாழ்வு (வ. 2-4). அவருடன் வாழும் நித்திய ஜீவனுக்காக ஏங்கும்படி தேவன் நம்மை வடிவமைத்திருந்தாலும் (வ. 5–6), அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் இப்போது அவருக்காக வாழும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே தரப்பட்டுள்ளன (வ. 7-10).
நாம் இயேசுவைப் பிரியப்படுத்த வாழ்கையில், அவர் திரும்பி வருவதற்காக அல்லது நம்மை வீட்டிற்கு அழைப்பதற்காகக் காத்திருக்கும்போது, அவருடைய நிலையான பிரசன்னத்தின் சமாதானத்தில் நாம் மகிழ்ச்சியடையலாம். நாம் பூமிக்குரிய உடலை விட்டு நித்தியத்தில் இயேசுவோடு சேரும் தருணத்தில் நாம் என்ன அனுபவிப்போம்? நாம் கற்பனை செய்ய மட்டுமே முடியும்!
உன் பெயர் என்ன?
முதல் கணவர் இறந்த பிறகு ஜீனா மறுமணம் செய்து கொண்டார். அவளுடைய புதிய கணவரின் குழந்தைகள் அவளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது அவரும் இறந்துவிட்டதால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ வீட்டில் தங்கியதற்காக அவளை வெறுக்கிறார்கள். அவளுடைய கணவன் அவளுக்காக ஒரு சிறிய தொகையை விட்டுச் சென்றான்; அவள் தங்கள் ஆஸ்தியைத் திருடுகிறாள் என்று அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஜீனா மிகவும் சோர்ந்துவிட்டாள், மேலும் அவள் வெறுத்தும் போனாள்.
நகோமியின் கணவர், குடும்பத்தை மோவாபுக்கு மாற்றினார். அங்கு அவரும் அவர்களது இரண்டு மகன்களும் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி தம் மருமகள் ரூத்தைத் தவிர, வெறுங்கையுடன் பெத்லகேமுக்குத் திரும்பினார். நகரமே கலங்கி, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள் (ரூத் 1:19). "எனது இனிமையானவள்" என்று பொருள்படும் அந்தப் பெயரை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அவள் சொன்னாள். அவர்கள் அவளை "மாரா" என்று அழைக்க வேண்டும், அதன் அர்த்தம் "கசப்பு" ஏனெனில், "நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்" (வ. 20–21) என்றாள்.
உங்கள் பெயர் கசப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதா? நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உடல்நலக் குறைவால் நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். நீங்கள் சிறப்பாகத் தகுதி பெற்றீர்கள். ஆனால் அத்தகுதிக்குரிய நன்மையைப் பெறவில்லை. இப்போது நீங்கள் கசப்பாக இருக்கிறீர்கள்.
நகோமி கசந்துபோய் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தார், ஆனால் அவர் திரும்பி வந்தார். நீங்களும் திரும்ப வீட்டுக்கு வரலாம். பெத்லகேமில் பிறந்த ரூத்தின் வம்சாவளியான இயேசுவிடம் வாருங்கள். அவருடைய அன்பில் இளைப்பாறுங்கள்.
காலப்போக்கில், தேவன் நகோமியின் கசப்பிற்குப் பதிலாக தம் பரிபூரணத் திட்டத்தின் நிறைவேற்றத்தின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் (4:13-22). அவரால் உங்கள் கசப்பையும் மாற்ற முடியும். அவரிடம் வீட்டிற்கு வாருங்கள்.

நாம் அந்நியர்கள்
புதிய மொழி, பள்ளிகள், பழக்கவழக்கங்கள், போக்குவரத்து மற்றும் வானிலை என்று புதிய நாட்டில் எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் எப்படி ஒத்துப்போவது என்று யோசித்தார்கள். அருகிலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு புதிய நாட்டில் அவர்களின் புதிய வாழ்க்கையில் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். பல்லவி, அந்த தம்பதியினரை உள்ளூர் உணவு சந்தைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு என்ன இருக்கிறது, எப்படி பொருட்களை வாங்குவது என்பதைக் காட்டினார். அவர்கள் சந்தையில் சுற்றித் திரிந்தபோது, அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து தங்களுக்குப் பிடித்த பழமான மாதுளைகளைப் பார்த்து, அவர்கள் கண்கள் விரிந்து, புன்னகைத்தனர். அவர்கள் ஒவ்வொறு குழந்தைகக்கும் ஒன்று வாங்கி, நன்றியுடன் பல்லவியின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்தனர். சிறிய பழங்களும் புதிய நண்பர்களும் அவர்களின் விசித்திரமான, புதிய நாட்டில் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.
தேவன், மோசேயின் மூலம், தம் ஜனங்களுக்கான நியாயப்பிரமாணத்தை கொடுத்தார், அதில் அந்நியனைச் சுதேசிபோல எண்ணுவதற்கான கட்டளையும் அடங்கும் (லேவியராகமம் 19:34). "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக" என்று தேவன் மேலும் கட்டளையிட்டார். தேவனிடம் அன்பு கூருதலுக்குப் பிறகு, இயேசு இதை இரண்டாவது பெரிய கட்டளை என்று அழைத்தார் (மத்தேயு 22:39). ஏனெனில், "பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்" (சங்கீதம் 146:9).
தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர, புதிய நண்பர்கள் நம் நாட்டின் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகையில், நாமும் "பூமியில் அந்நியர்கள்" (எபிரெயர் 11:13) என்பதன் உண்மையான அர்த்தத்தை நினைவூட்டிக் கொள்ளலாம். மேலும் வரவிருக்கும் புதிய பரலோக தேசத்தின் எதிர்பார்ப்பில் நாம் வளருவோம்.
