எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

உடைக்க முடியாத விசுவாசம்

தங்களது முதல் பிறந்த மகனை மன இறுக்கம் (ஆட்டிசம்) கொண்டதாக மருத்துவர்கள் கண்டறிந்த பின்னர், மனநலத்தில் ஊனமுற்ற குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரித்து வாழ்க்கையை  எதிர்கொள்ளுவதை எண்ணி ஒரு இளம் தம்பதியினர் துக்கமடைந்தனர். தங்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தங்களின் அன்பிற்கினிய மகனின் எதிர்காலத்திற்காக அனுசரித்துக் கொள்ள எதிர்கொண்ட போராட்டங்களை, உடைக்கப்படாத விசுவாசம் என்ற புத்தகத்தில் அவர் ஒப்புக் கொள்கிறார். எனினும், இந்த வேதனையான செயல்முறையின் மூலம், அவர்களுடைய கோபத்தையும், சந்தேகங்களையும், பயங்களையும் தேவன் கையாள முடியும் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இப்போது, அவர்களின் மகன் வால வயது அடையும்போது, டயான் தனது அனுபவங்களைப் பயன்படுத்தி சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கிறார். தேவனின் உடைக்க முடியாத வாக்குறுதிகள், வரம்பற்ற வல்லமை மற்றும் அன்பான விசுவாசத்தைப் பற்றி அவள் மற்றவர்களிடம் கூறுகிறார். ஒரு கனவின் மரணம், ஒரு எதிர்பார்ப்பு, வாழ்க்கையின் ஒரு வழி அல்லது  ஒரு பருவத்தை நாம் அனுபவிக்கும் போது அதைக்குறித்து  துக்கப்படுவதற்கு தேவன் நமக்கு அனுமதி அளிக்கிறார் என்று டயான்  மக்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

ஏசாயா 26-ல், தேவனுடைய மக்கள் அவரை என்றென்றைக்கும் நம்பலாம், “கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” என்று தீர்க்கதரிசி அறிவிக்கிறார் (வச 4). ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமைதியுடன் நம்மைத் நிலைநிறுத்த முடியும் (வச 12). அவரது மாறாத தன்மையை மையமாகக் கொண்டு, சிக்கலான காலங்களில் அவரை நோக்கி கூக்குரலிடுவது நம் நம்பிக்கையை புதுப்பிக்கிறது (வச 15). 

எந்தவொரு இழப்பு, ஏமாற்றம் அல்லது கடினமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது, அதைப் பற்றி அவரிடம் நாம் உண்மையாக  இருக்க தேவன் நம்மை அழைக்கிறார். நம்முடைய மாறிவரும் உணர்ச்சிகளையும் கேள்விகளையும் அவரால் கையாள முடியும். அவர் நம்முடன் இருந்து நீடித்த நம்பிக்கையுடன் நம் ஆவிகளைப் புதுப்பிக்கிறார். நம் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து வருவதைப் போல நாம் உணரும்போது கூட, தேவனால் நம் விசுவாசத்தை உடைக்க முடியாததாக மாற்ற முடியும்.

ஆராதிக்கிற வாழ்க்கைமுறை

ஒருமுறை ஒரு கிறிஸ்துவ மாநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து “நான் உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன்” என்று கூறினாள். ஆனால் எங்கே என்று தெரியவில்லை. அந்த பெண்ணை இதற்கு முன்பு பார்த்ததாக எனக்கும்  ஞாபகமில்லை.

சிறிது நேரத்துக்கு பிறகு என்னிடம் வந்து “ நீ வெள்ளை நிற கார் வைத்திருக்கிறீர்களா?”  என்று அந்த அந்த பெண் என்னை கேட்டார். “ஆம் சில வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்”  வைத்து இருந்தேன் என்று கூறினேன்.

 அந்தப் பெண் சிரித்துக்கொண்டே” நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் அங்கு இருந்த போக்குவரத்து விளக்கண்டையில்  (traffic light)   உங்களை பார்ப்பேன். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷத்துடன் கைகளை உயர்த்தி பாடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தேவனை துதித்து பாடுகிறீர்கள் என்று எண்ணிக் கொள்வேன். சில கஷ்டமான நாட்களில் அது  என்னை உற்சாகப்படுத்தியது”  என்று கூறினார்.

 நாங்கள் இருவரும் தேவனுக்கு நன்றி செலுத்தி சந்தோஷத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் இயேசுவை பின்பற்றுகிறவர்களை  கவனிக்கிறார்கள் என்பதை என்னுடைய புதிய நண்பர் எனக்கு ஊர்ஜிதப் படுத்தினார். முழு மனதுடன் ஆராதிக்கிற வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும் போது நம் சிருஷ்டிகர் முன் நாம் எங்கேயும் எப்பொழுதும் வரலாம். அவருடைய மாறாத அன்பையும் விசுவாசத்தையும் நினைவுகூர்ந்து அவருடன் ஐக்கியத்தையும் அவருடைய பராமரிப்புக்காகவும்  நாம் நன்றி செலுத்தலாம். நம் வாகனங்களில் செல்லும்போது துதிகளை செலுத்தி பொது இடங்களில் ஜெபித்தும் சிறிய அன்பின்  காரியங்களால் தேவனுடைய அன்பை பரப்பி மற்றவர்களை தேவனுடைய நாமத்தை துதிக்க உற்சாகப்படுத்தலாம் (வச 4).  ஞாயிறு காலை மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல.

பகட்டு இல்லை, மகிமை மட்டும்

கைகயால் செய்யப்பட்டு என் மகன் சேவியரால் பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஆபரணங்களையும் பாட்டி அனுப்பிய வருடாந்தர, பொருந்தாத கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களைப் பார்க்கும்போது எனக்கு ஏன் இந்த அலங்காரம் திருப்தியாயிருக்க

வில்லை என்று அறிய முடியவில்லை. ஒவ்வொரு ஆபரணத்தின் படைப்பாற்றலையும் அதன் நினைவுகளையும் நான் எப்போதும் மிகவும் மதித்தேன். ஆகவே சில்லரை விற்பனை கடைகளின் காட்சிகளான சரியாக பொருந்திய பல்புகள், பளபளக்கும் உருண்டைகள் மற்றும் சாடின் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தை வாங்குவதற்கு ஏன் என்னைத் தூண்டின?

எங்கள் தாழ்மையான அலங்காரத்திலிருந்து நான் விலகிச் செல்ல தொடங்கியப் போது, ஒரு சிவப்பு இதய வடிவிலான ஆபரணம், அதன் மேல் எளிய சொர்க்களான இயேசு என் இரட்சகர் என்று எழுதியிருப்பதை பார்ர்தேன். என் குடும்பமும் நான் இயேசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையுமே நான் கிறிஸ்மஸ் கொண்டாட விரும்புவதற்கான காரணங்கள் என்பதை நான் எப்படி மறந்தேன்? எங்கள் எளிய மரம் கடை முனைகளில் வைக்கப்பட்ட மரங்களைப் போல இல்லை, ஆனால் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் பின்னால் உள்ள அன்பு அதை அழகாக மாற்றியது.

எங்களுடைய அடக்கமான மரத்தைப் போலவே, மேசியாவும் இவ்வுலகத்தின் எந்த எதிர்பார்ப்புகளையும் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை (ஏசா. 53:2). இயேசு அசட்டைப் பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் (வச. 3). ஆனாலும் அன்பின் அற்புதமான வெளிப்பாட்டாய், அவர் 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்" (வச. 5). நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார் (வச. 5). அதைவிட அழகானது எதுவுமில்லை. புதுப்பிக்கப்பட்ட நன்றியறிதலோடு நம்முடைய குறையுள்ள அலங்காரத்திற்காகவும், நம்முடைய பரிபூரண மீட்பருக்காகவும், நான் பகட்டுக்காக ஏங்குவதை நிறுத்திவிட்டு தேவனுடைய மகிமையான அன்பிற்காக அவரைத் துதித்தேன். பளபளக்கும் அலங்காரங்கள் தேவனுடைய அழகான தியாக பரிசாகிய இயேசுவுக்கு ஒருபோதும் பொருந்தாது.

அதே அணியில்

கடுமையான காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கால்பந்து மைதானத்திற்கு திரும்பும்போது, அதே நிலையில் விளையாடும் தன் அணியில் இருக்கும் ஒருவர் இன்முகத்துடன் இருக்கைக்குத் திரும்பினார். இந்த கால்பந்து வீரரும் அதே இடத்திற்காக போட்டியிட்டாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க தேர்ந்தெடுத்தனர். ஆனாலும் தங்களுடைய பொறுப்புகளில் நம்பிக்கையாயிருந்தனர். ஒரு நிருபர் அந்த இரு விளையாட்டு வீரர்களும் ‘கிறிஸ்துவில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தில் வேரூன்றிய தனித்துவம் வாய்ந்த உறவாக” இருப்பதை தாங்கள் ஒருவருக்கொருவர் செய்த ஜெபத்தின் மூலம் கவனித்தார். மற்றவர்கள் கவனித்தப்படி அவர்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் இயேசுவை விசுவாசிக்கும் பிரதிநிதிகளாக தேவனை மகிமைப்படுத்தினர்.

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் ‘ஒளியின் பிள்ளைகளாக” வாழ விசுவாசிகளை அப்போஸ்தலனாகிய பவுல் நினைவுபடுத்துகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:5-6). கிறிஸ்து வழங்கின இரட்சிப்பில் நம்முடைய நம்பிக்கை உறுதியாக இருப்பதால், பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் அல்லது பகை – இவைகளை செய்யத் தூண்டும் சோதனைகளைத் தவிர்க்கலாம். மாறாக, நாம் ‘ஒருவரையொருவர் ஊக்குவித்து, ஒருவரையொருவர் கட்டி எழுப்ப” முடியும் (வச. 11). மக்களுக்கு சுவிஷேத்தை அறிவிக்கவும், அவர்களை இயேசுவுக்காக வாழ ஊக்குவிப்பதுமான நம்முடைய குறிக்கோளை நாம் பகிர்ந்து செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்தும் ஆவிக்குரிய தலைவர்களை மதிக்கவும் ‘சமாதமானமாய் வாழவும்” முடியும் (வச. 12-15).

நாம் ஒரே குழுவில் பணியாற்றும்போது, ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், எல்லவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படி செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (வச. 16-18) என்ற பவுலின் கட்டளைக்கு நாம் எப்போதும் கீழ்படியலாம்.

நீதியான காணிக்கை

வீடற்றவர்களுக்கு உறைவிடம் தந்த ஒரு இல்லத்திற்கு உதவும்படி எங்கள் வாலிப குழுவை ஒரு நாள் அழைத்திருந்தார்கள். அங்கே உள்ளே நுழையும் போது அங்கு குவிக்கப்பட்ட அநேக காலணிகளை கண்டோம். அவை அனைத்தும் நன்கொடையாக வழங்கப்பட்டவைகள். அந்த காலை முழுவதும் எல்லா காலணிகளையும் அதனுடைய மற்றொரு காலனியுடன் சேர்க்கும்படி எங்கள் நேரத்தை செலவழித்தோம். அவையனைத்தையும் கண்டுபிடித்து அதை தரையிலே வரிசைப்படுத்தினோம். இறுதியில் பாதிக்கும் மேற்பட்ட காலணிகளை நிராகரித்தோம். ஏனென்றால் அவைகள் மிகவும் பழையதாகவும், சேதமடைந்தும், உபயோகிக்க முடியாததாய் இருந்தது. அநேக நேரம் இதை போல் உபயோகிக்க முடியாத பொருட்களை நன்கொடையாக பலர் கொடுப்பார்கள். ஆனால்  அவைகளை யாருக்கும் அந்த காப்பகம் விநியோகம் செய்வதில்லை .

இஸ்ரவேலரும் இதைபோல் சேதமான மிருங்கங்களை தேவனுக்கு பலியாக செலுத்தினார்கள். அவர்களிடம் பலமுள்ள நல்ல மிருகங்கள் இருந்தும், குருடும், சப்பாணியும், பாதிக்கப்பட்ட மிருகங்களை பலியாக செலுத்தினார்கள். அதினால் தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் அவர்களோடு பேசினார். அவர்களின் கனவீனத்தின் காரணமாக அவருடைய அதிருப்தியை அவர்களுக்கு தெரியப்படுத்தினார் (வச. 10). சிறந்தவைகளை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு  தேவனுக்கு பாதிக்கப்பட்டதை பலியாக கொடுத்ததினால்  அவர்களை கண்டித்தார் (வ. 14). அதே சமயம் தேவன் அவர்களுக்கென்று வரப்போகும் மேசியாவை குறித்தும்  அறிவித்தார். மேசியாவின் அன்பும் இரக்கமும் அவர்கள் இருதயத்தை மாற்றி நீதியான காணிக்கைகளை கொடுக்கும்படி செய்யும் என்று வாக்குத்தத்தம் உரைத்தார்.

சில வேளைகளில் தேவனுக்கு மீதம் இருப்பதை நாம் காணிக்கையாக கொடுக்கும்படி தூண்டப்படுகிறோம். ஆனால் அவரிடமிருந்து அநேகம் எதிர்பார்த்து அதை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி கூறிக் கொண்டு வருகிறோம். இருப்பினும் அவருக்கு ஒதுக்கப்பட்டவைகளை கொடுக்கிறோம். தேவன் நமக்கு அருளியதை நினைத்து, அவருக்கு நன்றி சொல்லி, அவரை கனப்படுத்தி, நம்மால் முடிந்த மட்டும் சிறந்ததை அவருக்கு கொடுப்போம்.

கடக்க முடியாத தடை எதுவுமில்லை

ஆசிரியராகிய நான் எனது மாணவர்களை கள பயணதிற்காக ஒரு தடை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். அங்குள்ள பல விளையாட்டுகளில் ஒன்றாக சுவர் ஏறுவதும் இருந்தது. அணைத்து மாணவர்களும் அதிலே பங்குபெறும்படியாக உற்சாகத்துடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு  ஏறினார்கள். அந்த எட்டு அடி சுவரை ஏறி சென்ற ஒவ்வொரு மாணவர்களும் பின் வரும் மாணவர்களை பின்னிட்டு பார்க்காதபடிக்கு அந்த கயிற்றின்மேல் முழு நம்பிக்கை வைத்து ஏற ஊக்குவித்தார்கள். ஆனால் அதிலே ஒரு மாணவிக்கு மட்டும் அந்த கயிற்றின்மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நமிக்கையில்லாமல் இருந்தது. "என்னாலே இதை செய்யமுடியாது என்று" நம்பிக்கையில்லாமல் பயத்துடன் கூறினாள். ஆனால் மற்ற மாணவர்கள் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததினால் அவள் அந்த கையிற்றின்மேல் நம்பிக்கை வைத்து வெற்றிகரமாய் ஏறினாள்.

நாம் கடக்க முடியாது என்று நாம் நினைக்கும் பிரச்சினைகள் நமக்கு முன் வரும் போது, அதின் கூடவே சந்தேகங்களை ஏற்படுத்தும் பயமும் பாதுகாப்பற்ற சிந்தனைகளும் வரும். ஆனால் இவைகளின் நடுவே நம்மை திடப்படுத்தும் தேவனுடைய மகிமையும், நன்மையையும், சத்தியமும் பலமான காப்புகவசமாக விசுவாசத்தில் அடங்கும். இந்த நம்பிக்கையின் உறுதி நம் பழைய ஏற்பாட்டின் முன்னோர்களுக்கு தைரியத்தை உண்டாக்கியது. இப்பேர்ப்பட்ட நம்பிக்கை நாம் சிறிய நுணுக்கமான காரியங்கள் மேல் கவனம் செலுத்தாமல் தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி சிந்திக்க கற்பிக்கிறது (எபி 11:1-13, 39). வரும் காலங்களில் நாம் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட மேலான நித்திய கண்ணோட்டத்தில் காண்போம்

(வச. 13-16). அடிக்கடி நாம் இதைப் போன்ற சூழ்நிலைகளை தனியாக சந்திக்கும்போது முழு நம்பிக்கையோடு ஆர்வத்துடன் அவரை தேடுவோம்.

வாழ்வின் கடினமான பாதைகளையும், செங்குத்தான படிகளை கடக்கும்போது தேவன் நம்மை விடுவிப்பார் என்கிற நம்பிக்கை நமக்கு அற்றுப்போகலாம். ஆனால் அவரோ எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்கிற நிச்சயத்தோடு, விசுவாசமாகிய பலத்த கயிற்றை  பிடித்துக்கொள்வோம். கடக்க முடியாதென்று நினைத்த பிரெச்சனைகளை கடக்கலாம்.

கடற்கரையில் ஜெபங்கள்

எங்கள் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட நாங்கள்  பயணித்த போது, ​​நானும் எனது கணவரும் ஒரு கடற்கரையில் எங்கள் வேதாகமங்களைப் படித்திக்கொண்டிருந்தோம். சுற்றிலும் விற்பனையாளர்கள் கடந்து சென்று தாங்கள் விற்கும் பொருட்களின் விலைகளை கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஒன்றும் வாங்கவில்லையென்றாலும் யாவருக்கும் நன்றி சொன்னோம். ஆனால் பெர்னாண்டோ என்னும் ஒரு விற்பனையாளர் என்னுடைய நிராகரிப்பை கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டு எங்களுடைய நண்பர்களுக்காக நாங்கள் ஏதேனும் வாங்கத்தான்  வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டு அவன் புறப்படும்போது “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன். 

அவர் திரும்பி என்னைப்பார்த்து “இயேசுவே என் வாழ்வை மாற்றினார்” என்றார். எங்களுடைய நாற்காலிகள் நடுவில் அவர் முழங்காலிட்டு “கர்த்தருடைய பிரசன்னத்தை நான் இங்கே உணருகிறேன்” என்று சொல்லி, ஆகாத மருந்து, குடி பழக்கங்களிலிருந்து ஆண்டவர் தம்மை  எப்படி 14 ஆண்டுகளுக்கு முன்னால் விடுவித்தார் என்று பகிர்ந்து கொண்டார்.

சங்கீதங்களில் இருந்து அவர் பாராமல் பாடல்கள் ஒப்புவித்தபோது என் கண்களில் கண்ணீர் மல்கியது. அவரோடு சேர்ந்து நாங்களும் கர்த்தருடைய  சமூகத்தை உணர்ந்து  அவரைத் துதித்தோம்.

சங்கீதம் 148 ஒரு துதிப்பாடல். அவருடைய கிரியைகள் எல்லாமே  கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார்; “அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 5) ..... அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”(வச. 13).

ஆண்டவரை  நம்பி நம்  தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க அவர் நம்மை அழைத்தாலும், அவர் நம்முடைய நன்றியுள்ள துதிகளையும் விரும்புகிறார் - நாம்  கடற்கரையில் இருந்தாலும்கூட.

ஒன்றாக செழித்து வளருதல்

எதிர்அணியின்நபர்ஒருவர் பந்தைகாற்றில்அடித்தபொழுது என் கணவர் ஆலன் அந்த மைதானத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்த பெரிய கோபுர விளக்கின் கீழ் நின்று கொண்டிருந்தார. அந்த பந்தின் மீதே தன்  கண்களை வைத்துக்கொண்டு, வேகமாக அந்த மைதானத்தின் மிகுந்த இருட்டான பகுதியை நோக்கி ஓடி அங்கிருந்த சங்கிலி வேலியில் மோதிக்கொண்டார்.

அன்று இரவு அவருக்கு ஒத்தடம் கொடுக்கும்போது “எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “என்னுடைய அணியில் யாராவது என்னை அந்த வேலியைப்பற்றி எச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார் அவர்.

அணிகள் சிறந்த முறையில்  இயங்க வேண்டுமென்றால் அவைகள் ஒன்றாக செயல்பட வேண்டும். அணியில் யாராவது ஒருவர் சத்தமிட்டு எச்சரித்திருந்தால் ஆலன் காயப்படுவதை தவிர்த்திருக்கலாம். 

திருச்சபையின் உறுப்பினர்களும் ஒன்றாக செயல்பட்டு ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் வண்ணமாகவே  வடிவமைக்கக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் நம்மை நினைவூட்டுகிறது.

இதைப்பற்றி பவுல் கூறுவது தேவன் நாம் ஒருவருக்கொருவர் எப்படி துணையாக நிற்க்கிறோம் என்று கவனிக்கிறார் ஏனென்றால் ஒருவர் செய்யும் காரியம் விசுவாசிகளின் சமுகம் முழுவதுமையே பாதிக்கக்கூடும் (கொலோ. 3:13-14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சேவை செய்ய சந்தர்ப்பங்களை முழு அர்பணிப்போடும் சமாதானத்தோடும்   பயன்படுத்தும்போது சபை செழித்து வளரும்.

பவுல் தம்முடைய வாசகர்களுக்கு “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:16) என்கிறார். இவ்விதமாக ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அன்பும் உண்மையுமான உறவுகளை வளர்க்கலாம். ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவரைத் துதித்து ஒன்றாக செழித்து வளரலாம்.

தேவன் நினைவுகளை வகுத்தார்

என்னுடைய வளர்ந்த மகன் ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்த போது, என் தந்தையின் வேலையில்லா ஆண்டில் தேவனின் தொடர்ந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பையும் குறித்து ஞாபகப்படுத்தினேன். என்னுடைய தாயார் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி தோற்றுப்போனபோது, தேவன் எங்கள் குடும்பத்தை பெலப்படுத்தின சூழ்நிலையை நினைவுகூர்ந்தேன். வேதத்தில் தேவனுடைய கிருபையை விவரிக்கும் சூழ்நிலைகளை எடுத்துரைத்து, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வதில் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தினேன். தேவன் வகுத்த குடும்ப நடைபாதையில் என்னுடைய மகனை அழைத்துச்சென்றேன். எங்ளுடைய குடும்பத்தின் பள்ளத்தாக்குகள் மற்றும் மலையுச்சி போன்ற சூழ்நிலைகளில் தேவன் எப்படி சார்திருக்கக்கூடியவராய் இருந்தார் என்பதை அவனுக்கு  நினைப்பூட்டினேன். நாங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், கொண்டாடிக்கொண்டிருந்தாலும், தேவனுடைய பிரசன்னம், அன்பு மற்றும் கிருபை எங்களுக்கு போதுமானதாயிருந்தது.

இருப்பினும், இந்த விசுவாசத்தை பெலப்படுத்தும் யுக்தி என்னுடைது என்று நான் கோரினாலும், எதிர்கால சந்ததியினர் தேவனை விசுவாசிக்க தூண்டுவதற்கு நாம் நிகழ்சிகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் வடிவமைத்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் தேவன் செய்த எல்லாவற்றையும் கண்டதை நினைவுகூர்ந்த போது, அவர் நம்பிக்கையின் உருளைக்கற்களை அவர்களுடைய தெய்வீகமாக வகுத்த நடைபாதையில் வைத்தார்.

இஸ்ரவேலர்கள், தேவனைப் பின்பற்றும்போது அவர் தம்முடைய வாக்குதத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்கு சாட்சியாயிருந்தனர். (உபா. 4:3-6). அவர், அவர்களுடைய ஜெபத்தை எப்போதும் கேட்டும் பதிலளித்தும் இருக்கிறார். (வச. 7). இளைய தலைமுறையினருடன், மகிழ்ச்சியுடன் கடந்த கால அனுபவங்களை இஸ்ரவேலர்கள் நினைவிற்கு கொண்டு வந்து (வச. 9), ஒரே சத்திய தேவனுடைய பரிசுத்தமுள்ள மற்றும் பாதுகாக்கப்பட்ட வார்த்தைகளை பகிர்ந்துக்கொண்டனர் (வச. 10).

நம்முடைய மகாப் பெரிய தேவனுடைய மகத்துவம், இரக்கம், மற்றும் நெருக்கமான அன்பைப் பற்றி நாம் கூறும்போது அவருடைய  உறுதியான நீடித்த நம்பகத்தன்மை நம்முடைய திடநம்பிக்கையும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்துகிறது.