நான் எடுத்த என்னுடைய சிநேகிதியின் புகைப்படத்தை அவள் பார்த்தாள். அதில் அவளுடைய உடல் உறுப்புகளின் அமைப்பை அவள் ஒரு குறையாகப் பார்த்தாள். நான் அவளை கவனமாய் உற்றுப்பார்க்கும்படி கூறினேன். “சர்வ மகத்துவமுள்ள ராஜாதி ராஜாவின் அழகான மகளை நான் பார்க்கிறேன்” என்று அவளிடம் கூறினேன். “பலபேருடைய வாழ்க்கையை மாற்றியுள்ள தயவுள்ள, தாராளமான, உண்மையான தேவனையும் பிறரையும் நேசிக்கிற ஒருவளை நான் பார்க்கிறேன்” என்றேன். அவளுடைய கண்களில் நீர்சொறிய ஆரம்பித்ததை பார்த்த நான், “உனக்கு ஒரு கிரீடத்தை வாங்கவேண்டும்” என்றேன். அன்று மதியம், அவளுடைய உண்மையான அங்கீகாரத்தை உணர்த்தும்பொருட்டு, என்னுடைய சிநேகிதிக்கு அழகான ஒரு கிரீடத்தை வாங்கினோம். 

நாம் இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அறியும்போது, அவர் நம்மை அன்பினால் முடிசூட்டி, நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). “அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு” (2:28) விசுவாசத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு பெலப்படுத்துகிறார். அவர் நம்மை இருக்கும்விதமாகவே ஏற்றுக்கொண்டாலும், அவருடைய அன்பு நம்மை சுத்திகரித்து, அவருடைய சாயலுக்கு நம்மை மறுரூபமாக்குகிறது (3:2-3). அவருடைய தேவையை நம் வாழ்க்கையில் அறியச்செய்து, பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு நம்மை பெலப்படுத்துகிறார் (வச. 7-9). அவருடைய சத்தியத்தை நம்முடைய இருதயத்தில் ஒளித்து, அவருடைய ஆவியை நம்முடைய ஜீவியத்தில் பதித்து, அவருக்கு கீழ்படியும் அன்பான வாழ்க்கையை நாம் வாழமுடியும் (வச. 10). 

என்னுடைய சிநேகிதிக்கு தலைப்பாகையோ அல்லது அணிகலனோ அன்று தேவைப்படவில்லை. ஆனால் நாங்கள் தேவனுடைய பிரியமான பிள்ளைகள் என்பதை அன்று நினைவுகூர்ந்தோம்.