எஸ்தர் தன்னுடைய ஊனமுற்ற மகளுடன் துணிக்கடைக்கு சென்றாள். பில் கவுண்டரின் வரிசையில் நிற்கும்போது, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், அந்த பிள்ளை ஊனமாயிருப்பதைக் கண்டு மௌனமாய் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

இதுபோன்ற நபர்களின் இந்த காயப்படுத்தும் செய்கைகள் எஸ்தருக்கு புதியதல்ல. அவளுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களாலேயே பலவேளைகளில் மனம் உடைந்து போயிருக்கிறாள். இவைகள் அனைத்தும் அவளை ஒரு தாய்மைக்கு சற்று குறைவாய் எண்ணத் தூண்டியது. தன் மகளை தன்னிடமாய் அணைத்து, அக்கடையில் பணத்தைக் கட்டிவிட்டு, தன்னுடைய காருக்குச் சென்றாள். 

காரில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய மகளின் நிமித்தம் நிந்திக்கிறவர்களை மன்னிக்கக்கூடிய இருதயத்தைத் தரும்படிக்கு தேவனிடம் கேட்டாள். அவள் ஒரு தாயாய் தன்னை தகுதியற்றவளாய் எண்ணும் அந்த எண்ணத்தை மேற்கொள்ளும்படி தேவனிடம் விண்ணப்பித்தாள். மேலும் தேவனுக்கு பிரியமான பிள்ளை என்றும் அவளுடைய மெய்யான அங்கீகாரத்தை சார்ந்துகொள்வதற்கும் உதவும்படிக்கு கேட்டாள். 

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே” என்னும் அவர்களின் அழகான வேற்றுமைகளோடு சம மதிப்புமிக்கவர்கள் என்று பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ளாக இணைக்கப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 3:26-29). தேவன் நம்மை விடுவிக்கும்பொருட்டு தன்னுடைய குமாரனை அனுப்பியபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நாம் ஒரே குடும்பமாக்கப்பட்டுள்ளோம் (4:4-7). நாம் தேவனுடைய சாயலைத் தரித்தவர்கள். மற்றவர்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், பாரபட்சங்கள் ஆகியவைகள் நம்முடைய தரத்தைத் தீர்மானிப்பதில்லை. 

நாம் யார்? நாம் தேவனுடைய பிள்ளைகள்.