சிறிய விவசாய சமூகத்தில் செய்தி வேகமாக பரவுகிறது. ஜெயந்தின் குடும்பத்திற்கு ஆண்டாண்டு காலமாக சொந்தமாக  இருந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி விற்ற பிறகு, அந்த சொத்து விற்பனைக்கு மீண்டும் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பல தியாகங்கள் மற்றும் சேமிப்புகளுக்கு பின்னர் ஜெயந்த், சுமார் 200 உள்ளூர் விவசாயிகள் கூடியிருந்த அந்த ஏலமெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜெயந்தின் அற்பமான ஏலத் தொகை போதுமானதாக இருக்குமா? இப்பொழுது ஏலதாரர் உயர்ந்த ஏலத் தொகையை அறிவித்து ஆரம்பித்த பின்னர், ஜெயந்த் ஒரு பெருமூச்சோடு தனது முதலாவது ஏலத் தொகையை அறிவித்தார்.  ஏலதாரர், ஏலத்தின் முடிவை அறிவிக்கும்வரை அவரை சுற்றி இருந்த கூட்டம் அமைதியாய் இருந்தது. சக விவசாயிகள் ஜெயந்த் மற்றும் அவருடைய குடும்பத்தின் தேவைகளை தங்கள் சொந்த பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை பார்க்கிலும் முதன்மைப்படுத்தியிருந்தனர்.

விவசாயிகளுடைய கருணை நிறைந்த இந்தத் தியாகச் செயல், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் வாழவேண்டிய விதத்தை பற்றி கூறுவதை விளக்குகிறது. நம்முடைய சுயநலமான விருப்பங்களை மற்றவர்களுடைய தேவைகளை விட அதிக முக்கியத்துவம் படுத்துவதும், நம்முடைய சுயத்தை பேணுவதற்காக துடிப்பதையும் நிறுத்தும்படி பவுல் நம்மை, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” (ரோமர் 12:2) என்று எச்சரிக்கிறார். மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்க அவரை நாம் நம்பலாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனங்களை புதிதாக்குகையில், நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்தும் நோக்கத்தோடும், அன்போடும் செயல்படுவோம். பிறரை நாம் முன்னிலைப் படுத்தும்போது, நம்மை குறித்து நாமே உயர்வாய் எண்ணுவதை தவிர்ப்போம். மேலும், தேவன் நாம் ஒரு பெரிய காரியத்தின் பகுதியாக இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார் – அதுதான் சபை (வ.3-4).

பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகள் வேதவசனங்களை புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும் உதவுகிறார். அவர் நாம் சுயநலமில்லாமல் கொடுக்கவும், உதாரத்துவமாய் நேசிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறார். ஆகையால் நாம் ஒன்றாய் செழித்தோங்க முடியும்.