ஏப்ரல் 2019 அன்று பாரிசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து, அதின் பண்டைய கால மர உத்திரமும், கூரையில் செய்யப்பட்டிருந்த ஈயமும் இணைந்து அடுப்பைப் போல எரிந்து, அதிக சூட்டின் நிமித்தம் நிற்க கூடாமல் விழுந்தது. தேவாலயத்தின் உச்சி கோபுரம் பயங்கரமாக விழுந்த பின்னர், இப்பொழுது அதின் மணி கூண்டுகளுக்கு நேராக நெருப்பின் கவனம் திரும்பியது. எஃகினால்  செய்யப்பட்ட ராட்சத மணிகளின் மரச்சட்டங்கள் எரிந்துவிட்டால், அவைகள் நிலைகுலைந்து இரு மணி கூண்டுகளையும் கீழே விழத்தள்ளி, தேவாலயத்தை தரைமட்டமாக்கி விடும்.

தன்னுடைய தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட பாரிஸ் நகரத் தீயணைப்புத் துறையின் படைத்தலைவர் ஜெனரல் கல்லெட், அடுத்து என்ன செய்வதென்ற யோசனையிலிருந்தார். அப்பொழுது ரெமி என்ற தீயணைப்பு வீரர் தயக்கத்தோடு அவரை அணுகி, “மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, நான் கோபுரங்களின் வெளிப்புறமாக மேலே நீர் குழாய்களின் மூலம் தண்ணீரை பீச்சி அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லுகிறேன்” என்றார், ஆனால் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு படைத்தலைவர் இந்த யோசனையை நிராகரித்தார். இருந்தபோதிலும் ரெமி தொடர்ந்து அவரோடு தன் கருத்தை வலியுறுத்தினார். சீக்கிரத்தில் படைத்தலைவர் கல்லெட் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருந்தது, இளைய தீயணைப்பு வீரரின் அறிவுரையை பின்பற்றுதல் அல்லது தேவாலயம் இடிவதற்கு அதை விட்டுவிடுதல்.

ஆலோசனையை பின்பற்றுவதை குறித்து வேதம் அதிகமாக பேசுகிறது. சில சமயங்களில், வாலிபர் முதியோருக்கு கொடுக்கும் மரியாதையை இப்படி குறிப்பிடுவதாக இருந்தாலும் (நீதிமொழிகள் 6:20-23), பெரும்பாலும் அப்படி இல்லை. நீதிமொழிகள் சொல்கிறது, “ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.”(12:15) “நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.”(24:6.) மேலும், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்” (12:15) என்று. ஞானமுள்ளவர்கள் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பர், அதை கொடுப்பவர் எவ்வயதினராயினும், எந்த பதவியிலிருப்பவராயினும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.

ஜெனரல் கல்லெட், ரெமிக்கு செவிகொடுத்தார். எரிந்துகொண்டிருந்த மணிகூண்டுகளின் சட்டங்களில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, சிறுது  நேரத்திலேயே தேவாலயம் காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு உங்களுடைய எந்த பிரச்சனைக்கு தேவாலோசனை தேவை? சிலசமயம் தேவன் தாழ்மை உள்ளவர்களை இளையவர்களின் வாய்வார்த்தைகளை கொண்டும் நடத்துகிறார்.