80 வயதை கடந்த ஒரு வினோதமான ஜோடி, ஒருவர் ஜெர்மனியிலிருந்து மற்றொருவர் டென்மார்க்கிலிருந்து. இருவரும் தம் தம் துணையை இழப்பதற்கு முன் 60 ஆண்டுகள் திருமண வாழ்வை அனுபவித்தனர். 15 நிமிட பயண தொலைதூரம்தான் இருவருக்கும் இருந்த போதிலும் அவர்களுடைய வீடுகள் வெவ்வேறு நாட்டில் இருந்தன. எனினும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க தொடங்கினார்கள், வழக்கமாக உணவு சமைத்து ஒன்றாக தங்கள் நேரத்தை கழித்தனர். துரதிருஷ்டவசமாக ஜெர்மானிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக, அதின் எல்லைகளை கடப்பதற்கு தடை செய்தது. ஆனாலும், தடையின்றி அனுதினமும் மாலை மூன்று மணிக்கு இருவரும் இரு நாட்டின் எல்லை கோட்டின் அருகே அமைதியான எல்லைப் பகுதியில் அவரவர்களுடைய நாட்டுக்குரிய எல்லைகளில், அருகருகே அமர்ந்து இன்பச் சுற்றுலா அனுபவித்து மகிழ்ந்தனர். “நாங்கள் இங்கே இருப்பதற்கு காரணமே அன்புதான் ” என்று அந்த மனிதர் விளக்குகிறார். அவர்களுடைய அன்பு நாட்டின் எல்லைகளை விட வலிமையாகவும், பெருந்தொற்றை காட்டிலும் பலமாகவும் இருந்தது.

உன்னதப்பாட்டு அன்பின் வெல்லமுடியாத வலிமையை பற்றி ஆழமாக பதிவிடுகிறது “நேசம் மரணத்தைப்போல் வலிது” (8:6.) என்று சாலொமோன் வலியுறுத்துகிறார். நாம் யாரும் மரணத்திற்கு தப்புவதில்லை; அது தகர்க்க முடியாத வலிமையோடு இறுதி நிலையாக நம்மேல் வருகிறது. ஆயினும், எழுத்தாளர் கூறுகிறார், அன்பும் மரணத்தைப் போலவே ஒவ்வொரு அணுவிலும் சமவலிமை உடையது. இன்னும் என்ன சொல்வோம், அன்பு “அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.” (வ.6). நீங்கள் எப்போதாகிலும் நெருப்பை கொழுந்துவிட்டு எரிய பார்த்ததுண்டா? அன்பும் நெருப்பை போலவே அவிக்க இயலாது. “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;” (வ.7)

மனித அன்பும் எப்பொழுதெல்லாம் தன்னலமற்றதாயும், உண்மையுள்ளதாயும் இருக்கிறதோ, அப்போது இத்தகைய குணாதிசயங்களை பிரதிபலிக்கும். எனினும், தேவனுடைய அன்பு மாத்திரமே இத்தகைய ஆற்றலும், இத்தகைய அளவில்லா அழங்களும், இத்தகைய உறுதியான வல்லமையும் கொண்டிருக்கிறது. நமக்கு வியப்பூட்டும் செய்தி யாதெனில் தேவன் நம் ஒவ்வொருவரையும் இத்தகைய அணைக்க முடியாத அன்பினாலே நேசிக்கிறார்.