வால்டோ எங்கே?’ (Where’s Waldo?) என்னும் பிரபல சிறுவர் தொடர் புத்தகத்தில், நாம் கண்டுபிடிக்கவேண்டிய கதாபாத்திரம், சிவப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட சட்டை, தொப்பி, நீலநிற ஜீன்ஸ், பழுப்பு பூட்ஸ் மற்றும் கண்ணாடி அணிந்திருக்கும். அந்த விளையாட்டை வடிவமைத்தவர், உலகின் பல்வேறு இடங்களில், கூட்டநெரிசலாலான மற்ற கதாபாத்திரங்களுக்கு நடுவில் இந்த வால்டோவை திறமையாய் ஒளித்து வைத்திருப்பார். வால்டோவைக் கண்டிபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல; ஆனால் வாசகர்கள் அவரை நிச்சயமாய் கண்டுபிடிக்க முடியும் என்று அதை உருவாக்கியவர் உறுதியளிக்கிறார். தேவனைக் கண்டுபிடிப்பது இந்த புதிர்புத்தகத்தில் வால்டோவைக் கண்டுபிடிப்பது போலில்லை என்றாலும், அவரை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று நம்முடைய சிருஷ்டிகரும் வாக்களித்துள்ளார். 

சிறையிருப்பில், அந்நியர்களாய் வாழ்வது எப்படி என்பதை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அறிவுறுத்தினார் (எரேமியா 29:4-9). அவருடைய திட்டத்தின்படி, அவர்களை மீட்கும் காலமட்டும் அவர்களை பாதுகாப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார் (வச.10-11). அவருடைய வாக்கை நிறைவேற்றுவதின் மூலம், ஜெபத்தில் இஸ்ரவேலர்களுடைய அர்ப்பணிப்பு ஆழமாகும் என தேவன் உறுதியளிக்கிறார் (வச.12).

கிறிஸ்துவின் ஆவியின் மூலம் இன்று தேவன் தன்னை வெளிப்படுத்தினாலும், உலகத்தின் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கவனம் எளிதாய் சிதற நேரிடுகிறது. சிலவேளைகளில் தேவன் எங்கே? என்று கூட கேட்க நேரிடுகிறது. ஆனால் சிருஷ்டிகரும், பராமரிக்கிறவுமாகிய தேவனை முழு இருதயத்தோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் என்று தேவனே அறிவிக்கிறார்.