ஆபேல் முத்தாய் என்னும் கென்யா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர், ஒருமுறை சர்வதேச அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகையில், வெற்றிக் கோட்டை மிகஅருகில் நெருங்கிவிட்டார். ஆனால், வெற்றிக் கோட்டை தான் கடந்துவிட்டதாக எண்ணி, அதற்கு முன்னமே தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு பின்னாக இரண்டாவது இடத்தில் ஓடிவந்த ஸ்பானிய ஓட்டபந்தய வீரர் இவான் பெர்னான்டஸ் அனயா தனக்கு முன்னாக ஓட்டத்தை நிறுத்திவிட்ட முத்தாயின் தவறைப் புரிந்துகொண்டார். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி முந்திக்கொண்டு ஓடாமல், முத்தாயை தன்னுடைய தோள்மீது சாய்த்து, அவரை முன்னாக ஓடவிட்டு தங்கப் பதக்கத்தை அவர் பெறும்படி செய்தார். ஏன் வெற்றிவாய்ப்பை தவறவிட்டீர்கள் என்று நிருபர்கள் அனயாவிடம் கேட்டபோது, முத்தாய்தான் ஜெயிக்க வேண்டும்; நானல்ல என்று பதிலளித்தாராம். “என்னுடைய வெற்றிக்கான மதிப்பு என்ன? பதக்கத்தின் மதிப்பு என்னவாகும்? என்னுடைய தாயார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்றார். ஒரு பத்திரிக்கையில் “அனயா, வெற்றிக்கு பதிலாக நேர்மையை தேர்ந்தெடுத்தார்” என்று பிரசுரிக்கப்பட்டது. 

நீதிமொழிகள், நேர்மையாய் வாழத் தீர்மானிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தமானதை விட உண்மையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லுகிறது. “செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்” (நீதிமொழிகள் 11:3). நேர்மையாய் வாழ்வது என்பது சரியான வாழ்க்கை பாதை மட்டுமல்ல, மேன்மையான ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்குகிறது. “துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (வச.3) என்று நீதிமொழிகள் தொடர்கிறது. நீண்ட வாழ்க்கை ஓட்டத்தில் நேர்மையில்லாமை பலனளிக்காது.

நம்முடைய நேர்மையைத கைவிட்டால், தற்காலிக வெற்றி நிஜத்தில் தோல்வியே. ஆனால் விசுவாசமும், உண்மையும், தேவ வல்லமையில் நம்மை உருவாக்குகையில், நல்ல வாழ்க்கையை நேர்மையாய் வாழும் நற்குணசாலிகளாய் உருவாகுவோம்.