எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

எச்சரிப்பை கவனியுங்கள்

நான் என்னுடைய கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற தேசத்தில் என்னுடைய பணப்பையை ஒருவன் திருட முயற்சித்தான். அங்கு அது ஆச்சரியமில்லை. வழியில் திருடர் பயம் இருக்கும் என்ற எச்சரிப்பை நான் பார்த்தேன். ஆகையால் என்னுடைய பணப்பையை எப்படி பராமரிப்பது என நான் அறிந்திருந்தேன். ஆனால் அது சம்பவிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. 

அதிர்ஷ்டவசமாய் என் பணப்பையை உருவிய அந்த இளைஞனின் கைகள் வழுக்கியது. அதினால் அவன் உருவிய என் பணப்பை கீழே விழுந்தது. அதை சட்டென்று குனிந்து எடுத்துக்கொண்டேன். ஆனால் அந்த எச்சரிப்பை நான் பொருட்படுத்தியிருக்கவேண்டும் என்பதை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது. 

நாம் எச்சரிக்கைகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவைகள் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி பாதையில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிக்க தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது, இயேசு அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிறார் (மத்தேயு 10:7). அவர் “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (வச. 32-33).

நமக்கு தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. நாம் தேவனோடு அவருடைய அன்பில் நித்திய நித்தியமாய் இருப்பதற்காக ஒரு இரட்சகரை நமக்கு அனுப்பியிருக்கிறார். நாம் தேவனை விட்டு திரும்பி, அவருடைய இரட்சிப்பின் செய்தியை நாம் புறக்கணிப்போமாகில் அவர் கொடுக்கும் நித்திய வாழ்க்கையையும் அவரோடு இருக்கும் வாய்ப்பையும் நாம் இழக்க நேரிடும். 

நம்மை நேசிக்கிறவரும் உண்டாக்கினவருமாகிய தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிக்கப்படாதபடிக்கு நம்மை இரட்சிப்புக்கு தெரிந்துகொண்ட இயேசுவை நாம் நம்புவோம். 

தடைசெய்யப்பட்ட ஜெபங்கள்

செவ்வாய் கிரகத்தில் “ஆப்பர்டியூனிட்டி” என்னும் விண்வெளி ரோவர் வாகனம் பதினான்கு ஆண்டுகளாக நாசாவின் விமான உந்துவிசை ஆய்வுக் கூடத்திற்கு செய்தியைத் தொடர்புகொண்டிருந்தது. 2004இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டபின், 28 மைல்கள் தூரத்திற்கு அது பயணம் செய்து, ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து, பல காரியங்களை ஆய்வு மேற்கொண்டது. ஆனால் 2018இல் ஏற்பட்ட விண்வெளி புயலினால் அதின் சூரிய தகட்டில் தூசு படிந்ததால், அது அந்த வாகனத்தை செயலிழக்கப்பண்ணியது. அதினால் ஆப்பர்டியூனிட்டிக்கும் நாசா விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நபரோடு நம்முடைய தொடர்பை, இந்த தூசு படிவங்களினால் தடுக்க முடியுமா? ஆனால் ஜெபம் என்று வரும்போது, தேவனிடத்தில் தொடர்பு ஏற்படுத்தும் பாதையில் சில காரியங்கள் இடையூறாக அமைகிறது. 

பாவத்தினால் தேவனோடுள்ள உறவைத் தடைசெய்ய முடியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18). இயேசு சொல்லுகிறார், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” (மாற்கு 11:25). தேவனுடனான நம்முடைய தொடர்பை, சந்தேகம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் தடை செய்யக்கூடும் (யாக்கோபு 1:5-7; 1 பேதுரு 3:7).  

ஆப்பர்டியூனிட்டியின் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு நிரந்தரமானது. ஆனால் நம்முடைய ஜெப தகவல்தொடர்பு தடைபடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தேவன் தடைசெய்யப்பட்ட நம்முடைய உறவை மீண்டும் அன்போடு புதுப்பிக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவரிடத்தில் திரும்பும்போது, உலகம் வியக்கும் ஆச்சரியமான தொடர்புக்கு உட்படுத்தப்படுகிறோம்: அதுவே நமக்கும் பரிசுத்த தேவனுக்கும் நேருக்கு நேரான உரையாடல். 

இயேசுவின் நாற்காலி

என்னுடைய சிநேகிதி மார்கே, வேதபாட வகுப்பில் டமியை சந்தித்தபோது, அவர்களுக்குள் சிலகாரியங்களில் ஒத்துப்போனதை அறிந்தாள். இருவரும் நண்பர்களாயினர். மார்கே தன் புது சிநேகிதியிடமிருந்து விலை மதிப்புள்ள ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டாள்.

டமி, இதற்கு முன்பாக வேதபாட வகுப்பிற்கு சென்றதில்லை. தேவன் பேசியதைக் கேட்ட அனுபவம் இல்லாததால், வேதபாட வகுப்பிலிருந்த ஒரு பெண், தேவன் தன்னோடு பேசினார் என்று சொன்னதைப் புரிந்துகொள்ள முடியாமல் திகைத்தாள்.

தேவன் பேசுவதைக் கேட்பதற்கு தீர்மானித்து, டமி செயலில் இறங்கினாள். அவள் மார்கேயிடம், “நான் ஒவ்வொருமுறை வேதாகமத்தை வாசிக்கும்போதும், ஒரு பழைய நாற்காலியை எனக்கு முன்பாக வைத்து, இயேசுவை வந்து அதில் அமரும்படி கேட்பேன்” என்று சொன்னாள். மேலும் தன்னைத் தொட்ட வேத வசனத்தை சுண்ணாம்பு கட்டியைக்கொண்டு அந்த நாற்காலியில் எழுதுவேன் என்றும் கூறியிருக்கிறாள். அது அவளுடைய விசேஷமான “இயேசு நாற்காலி.” வேதத்திலிருந்து அவளோடு தேவன் பேசிய செய்திகளால் அது நிறைந்திருந்தது.

மார்கே, “(இயேசு நாற்காலி) (டமியின்) வாழ்க்கையை மாற்றியது . வேதம் அவளுக்கு சொந்தமாய் மாறியபோது அவள் ஆவிக்குரிய வாழ்க்கை வளர்ச்சியடைந்தது” என்று கூறினாள்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார் (யோவ. 8:31-32). அவருடைய வார்த்தைகளை நாற்காலியில் எழுதுவதோ, மனப்பாடம் செய்வதோ, அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதோ, எப்படியாயினும் நாம் அவருடைய உபதேசத்தில் நிலைத்திருக்க பிரயாசப்படுவோம். கிறிஸ்துவின் உபதேசத்திலிருக்கும் ஞானமும் சத்தியமும் அவரில் வளரச்செய்து நம்மை முற்றிலும் விடுதலையாக்கும்.

உங்களுக்கு யாரை தெரியும்?

2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சார்லி வாண்டர்மீர் தனது எண்பத்து நான்கு வயதில் இறந்தார். பல பந்தான்டுகளாக, அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சார்லி மாமா என்று அறியப்பட்டார், தேசிய வானொலி ஒளிபரப்பு சில்டரன்ஸ் பைபிள் ஹவர்-ன் தொகுப்பாளராக இருந்தார். சார்லி  மாமா நித்தியத்திற்கு எடுத்து கொள்ளபடுவதர்கு முந்தைய நாள் அவரது நல்ல நண்பரிடம் கூறினார் "என்ன தெரியும் என்பது அல்ல, யாரை தெரியும் என்பதே. நிச்சயமாக, நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறேன்."

அவர் தனது வாழ்க்கையின் முடிவை எதிர்கொண்டபோதும், சார்லி மாமாவுக்கு இயேசுவைப் பற்றியும், மக்கள் அவரை இரட்சகராகப் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேச முடியவில்லை.

அப்போஸ்தலன் பவுல் இயேசுவை அறிவது அவருடைய மிக முக்கியமான பணியாகக் கருதினார்: “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், ...... அவருக்காக எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்”(பிலிப்பியர் 3: 8–11). இயேசுவை நாம் எப்படி அறிவோம்? "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயால் அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10: 9).

இயேசுவைப் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருக்கலாம், தேவாலயத்தைப் பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்கலாம், வேதத்தை பற்றி கூட நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்வதற்கான ஒரே வழி, இரட்சிபு எனும் இலவச பரிசை ஏற்றுக்கொள்வதாகும். அவர்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்.

“மிகவும் உதவியாக”

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.ரோமர் 12:13

கிறிஸ்தவ வானொலி நிலையத்திற்கு அழைத்தவர் தனது மனைவி அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவதாகக் கூறினார். பின்னர் அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என் இதயத்தில் ஆழமாகப் பேசியது: "எங்கள் தேவாலய குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நேரத்தில் எங்களை கவனித்துக்கொள்வதில் மிகவும் உதவியாக இருந்தார்கள்."

இந்த எளிய அறிக்கையை நான் கேட்டபோது, கிறிஸ்தவ விருந்தோம்பல் மற்றும் கவனிப்பின் மதிப்பு மற்றும் அவசியத்தை அது எனக்கு நினைவூட்டியது. வாழ்க்கையை மாற்றும் நற்செய்தியின் சக்தியை நிரூபிக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று சக விசுவாசிகளின் அன்பும் ஆதரவும் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.

முதல் பேதுருவில், அப்போஸ்தலன் ஒரு கடிதத்தை முதல் நூற்றாண்டு தேவாலயங்கள் மத்தியில் பரப்பினார்; இப்போது அது துருக்கி நாடு. அந்த கடிதத்தில், ரோமர் 12: 13-ல் தனது நண்பர் பவுல் எழுதிய ஒரு காரியத்தைச் செய்யும்படி வாசகர்களை வலியுறித்தினார்: “விருந்தோம்பலைப் பயிற்சி செய்யுங்கள்.” பேதுரு, “ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கவும். . . விருந்தோம்பலை வழங்குங்கள், ”மேலும் தேவன் அவர்களுக்கு அளித்த பரிசுகளை“ மற்றவர்களுக்கு சேவை செய்ய ”பயன்படுத்தும்படி அவர் சொன்னார் (1 பேதுரு 4: 8-10). இயேசுவில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கு சக விசுவாசிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அங்கு தெளிவாக உள்ளன.

அந்த அழைப்பாளரின் மனைவியைப் போன்றவர்களை நாம் அனைவரும் அறிவோம் - தேவையுள்ளவர்களுக்கு யாரோ ஒருவர் உடன் வந்து அக்கறை மற்றும் கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்ட. தேவனின் பலத்தில், "மிகவும் உதவி செய்பவர்கள்" என்று அறியப்படுகிறவர்களுள் நாமும் ஒருவராக இருப்போம்.

தேவனிடம் முறையிடுவது

ஒரு நாள் காலையில், குடும்ப ஜெபம் ஒரு ஆச்சர்யமான அறிவிப்புடன் முடிவடைந்தது. “ஆமென்” என்று அப்பா சொன்னவுடனேயே ஐந்து வயது கவி, “நான் யோவானுக்கு ஜெபம் செய்தேன். ஏனென்றால் ஜெபத்தின் போது அவன் கண்களைத் திறந்திருந்த்தான் என்று அறிவித்தாள்.

வேதம் பரிந்துபேசும் ஜெபத்திற்கு நம்மை அழைப்பது, உங்கள் பத்து வயது சகோதரரின் பிரார்த்தனை நெறிமுறைக்காக ஜெபிப்பதை மனதில் வைத்து கொண்டு அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க முடியும் என்பதையாவது கவி உணர்ந்தாள்.

வேறொருவருக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை வேதாகம ஆசிரியர் ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் வலியுறுத்துகிறார். “பரிந்துபேசுதல் என்பது உங்களை தேவனின் இடத்தில் வைக்கிறது; அது அவருடைய மனதையும், கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது” என்று அவர் சொன்னார். தேவனைப் பற்றியும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் நமக்குத் தெரிந்தவற்றின் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக ஜெபிப்பது இது.

பரிந்துபேசும் ஜெபத்திற்கு தானியேல் 9 ல், ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்கிறோம். யூதர்கள் பாபிலோனில் எழுபது ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற தேவனின் வேதனையான வாக்குத்தத்ததை தீர்க்கதரிசி புரிந்துகொண்டார் (எரேமியா 25:11-12). அந்த ஆண்டுகள் தங்களுடைய நிறைவை நெருங்குவதை உணர்ந்த தானியேல் ஜெப சிந்தைக்குள் சென்றான். அவன் தேவனுடைய கட்டளைகளை குறிப்பிட்டான் (தானியேல் 9:4-6). தன்னை தாழ்த்தினான் (வ 8). அவன் தேவனுடைய தன்மையை கனம்பண்ணினான் (வ 9). பாவத்தை அறிக்கையிட்டான் (வ 15). அவன் தன் ஜனங்களுக்காக ஜெபித்தபோது அவருடைய இரக்கத்தை சார்ந்துக்கொண்டான் (வ 18) தேவனிடமிருந்து உடனடியாக பதிலைப் பெற்று கொண்டான் (வ 21).

எல்லா ஜெபங்களும் அத்தகைய வியத்தகு பதிலுடன் முடிவடையாது. ஆனால் நம்பிக்கை மற்றும் பற்றோடு மற்றவர்களின் சார்பாக தேவனிடம் செல்லலாம் என்று நம்புங்கள்.

நிலைத்திருங்கள்

ஹாரியட் டப்மேன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க போராட்ட வீரர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க தைரியத்தை காட்டி, அமெரிக்காவின் வடக்கில் விடுதலையான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்த பின், 300க்கும் மேற்பட்ட அடிமைகளின் விடுதலைக்கு வழிநடத்தினார். தனது சொந்த சுதந்திரத்தை வெறுமனே அனுபவிப்பதில் திருப்தியாக இருந்துவிடவில்லை. நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல 19 முறை அடிமை மாநிலங்களுக்குள் நுழைந்தார். சிலசமயங்களில் கனடாவுக்கு நடந்து செல்லும் பாதையில் மக்களை வழிநடத்தினார்.
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு டப்மேனைத் தூண்டியது எது? ஆழ்ந்த விசுவாசம் உள்ள அந்த பெண்மணி ஒரு காலத்தில் இதைச் சொன்னார். நான் எப்போதும் தேவனிடம் சொல்வேன், நான் உம்மில் நிலைநிற்க போகிறேன். நீர்தான் என்னை பார்க்க வேண்டும். மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றும் போது தேவனின் வழிகாட்டுதலை அவள் சார்ந்து இருப்பது அவளுடைய வெற்றியின் ஒரு தனிச்சிறப்பாகும்.
தேவனிடம் "நிலை நிற்பது" என்றால் என்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் ஒரு வசனம் உண்மையில் அவருடைய கையை நாம் பற்றிக் கொள்ளும் போது நம்மை பிடிப்பவர் அவர் என்பதை காண நமக்கு உதவக்கூடும். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (41:13). ஏசாயா இப்படியாக சொன்ன ஒரு கடவுளை மேற்கோள் காட்டுகிறார்.
ஹாரியட் தேவனை இறுக்கமாக பற்றிக் கொண்டார். தேவன் அவளைப் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன சவால்களை எதிர் கொள்கிறீர்கள்? உங்கள் கையையும் உங்கள் வாழ்க்கையையும் அவர் “பிடித்துக் கொள்வதால்" கடவுளிடம் உறுதியாக இருங்கள். “பயப்படாதிருங்கள்" அவர் உங்களுக்கு உதவுவார்.

அணைத்து வழிகளுமா?

நான் வேலையிலிருந்து எனது பேத்தியின் தடகள போட்டியை பார்க்கும்படி செல்லும்போது “நெடுஞ்சாலையை எடுக்க வேண்டாம்” இன்று எனது மகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியவந்தது அங்கு அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கிறது என்று. நான் வேறு வழியில்லாமல் வந்த பாதை எடுத்து திரும்ப சென்றேன்.

திரும்ப வீடு செல்லும்படி நான் எடுத்த எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்தது எல்லா சாலைகளும் தேவனுடனான நித்திய உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. சிலர் கருணை மற்றும் நன்னடத்தையின் பாதை நம்மை அங்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் மதம் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கான பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வழிகளை நம்பி செல்வது நம்மை மூடப்பட்ட சாலைகளுக்கு தான் எடுத்து செல்லும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு இதை தெளிவுபடுத்துகிறார் (யோவா. 14:6). பிதாவின் வாசஸ்தலத்துக்கு உள்ளாக நாம் செல்லும்படியாக நமக்காய் அவர் மரிக்க போகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தேவ பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்து செல்லாத எந்த வழியையும் நாம் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இரட்சகராகிய இயேசுவை நம்புவோம் (யோவா.3:36). அவரை நம்பி கொண்டு இருப்பவர்கள், அவர் அளித்திருக்கும் வழிகளில் ஓய்வெடுக்கலாம்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்

மரியாள் சுமந்துக்கொண்டிருக்கும் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருக்கும்போது யோசேப்பிடம் இது ஒரு தேவைப்படாத உரையாடலாயிருந்தது: 'யோசேப்பு, நாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" பிரசவத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்களைப் போல அல்லாமல், இந்தக் குழந்தையை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

மரியாளையும் யோசேப்பையும் சந்தித்த தேவதூதர்கள் குழந்தையின் பெயர் இயேசு என்பதை அவ்விருவருக்கும் அறிவித்தனர் (மத். 1:20-21, லூக். 1:30-31). யோசேப்புக்குத் தோன்றின தூதன் இயேசு என்ற பெயருக்கு 'அவர் தம்முடைய ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அர்த்தம்" எனக் கூறினார்.

அவர் இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுவார் (ஏசா. 7:14), அதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தம். ஏனென்றால் மனித உருவில் தேவன் - துணிகளில் சுற்றப்பட்டிருக்கும் தெய்வம். 'ஆலோசனைக் கர்த்தா",; 'வல்லமையுள்ள தேவன்", 'நித்தியப் பிதா" (9:6) என்னும் அனேக பெயர்களையும் ஏசாயா தீர்க்கதரிசி சூட்டியுள்ளார். ஏனென்றால் அவர் அவை அனைத்திற்கும் உரியவர்.

புதிய குழந்தைக்கு பெயரிடுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஆனால் 'மேசியா என்று அழைக்கப்படும் இயேசு" (மத். 1:16) போன்ற வல்லமையுள்ள, ஆச்சரியமான, உலகத்தையே மாற்றக் கூடிய பெயர் வேறு எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை. 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக்" கூப்பிடுவது நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).

இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவரைத் துதித்து, அவர் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.