Archives: பிப்ரவரி 2025

நண்பர்களைப் பிடித்தல்

ரியா, அந்த மதியத்தை ஒரு உள்ளூர் ஆற்றின் கரையில் கழித்தாள். தனது மீன்பிடிக் கம்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் தூண்டில் போட்டார். சமீபத்தில்தான் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்திருந்தாள். அவள் மீன் பிடிக்கும் நோக்கில் வரவில்லை; அவள் சில புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது தூண்டில் கயிறு புழுக்களாலோ அல்லது வேறு எந்த வழக்கமான இரையாலோ இரை வைக்கப்படவில்லை. மாறாக, அந்த கோடை நாளில் படகுகளில் ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை நீட்டிக்கத் தனது கனரக மீன்பிடி கம்பியைப் பயன்படுத்தினாள். அவள் தனது புதிய அயலாரைச் சந்திக்க இந்த ஆக்கப்பூர்வமான வழியைப் பயன்படுத்தினாள், அவர்கள் அனைவரும் இனிமையான உபசரிப்பை விரும்பியதாகவே தோன்றியது!

தம்மோடு வாழ்க்கையில் நடக்க இயேசுவானவர் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த விதத்தை மிகவும் அப்பட்டமாக ரியா செய்து, "நண்பர்களைப் பிடிக்க" சென்றாள். அந்த இரண்டு சகோதரர்களும் கடின உழைப்பாளிகள், கலிலேயா கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்தனர். இயேசு தம்மைப் பின்தொடரும்படி அழைத்து, அவர்களின் கடின உழைப்பில் குறுக்கிட்டு, மீன்களுக்குப் பதிலாக "மனுஷரை" பிடிக்க அவர்களை அனுப்புவதாகக் கூறினார் (மத்தேயு 4:19). அதன்பின் சிறிது நேரத்தில், யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இரு மீனவர்களுக்கும் அவர் அதே அழைப்பை விடுத்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வலைகளையும் படகுகளையும் உடனே விட்டு, இயேசுவோடு பயணித்தனர்.

தம்முடைய முதல் சீடர்களான மீனவர்களைப் போலவே, கிறிஸ்து தம்மைப் பின்பற்றி, நாம் உறவாடுபவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எனும் நித்திய காரியங்களில் கவனம் செலுத்த நம்மை அழைக்கிறார். இயேசுவோடு வாழ்வதற்கான நிலையான நம்பிக்கை (யோவான் 4:13-14) எனும் உண்மையிலேயே திருப்தியளிக்கக் கூடிய காரியத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் வழங்க முடியும்.

இயேசு நம் சமாதானம்

கவிதாவின் சமூக ஊடகப் பதிவைக் கண்டு ஆனந்தி குமுறினாள். அந்த புகைப்படத்தில் அவர்களுடைய பத்து சபை நண்பர்கள் ஒரு உணவக மேசையைச் சுற்றிலும் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் இரண்டாவது முறையாக, அவள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி கண்ணீர் விட்டாள். அவள் எப்போதும் பிறருடன் சகஜமாகப் பழகியதில்லை, இருந்தபோதும் அவளை ஒதுக்குபவர்களுடன் சபைக்குச் செல்வது எவ்வளவு வினோதமானது!

முதல் நூற்றாண்டு எவ்வளவு விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால், இயேசுவானவர் ஐக்கியத்தை நேசித்து நம் பிரிவினையை அகற்றிட வந்தார். ஆதி சபை தொட்டே, சகஜமாகப் பழக இயலாதவர்கள், அவரில் பொதுவான ஐக்கியம் பெறுவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காததற்காக யூதர்கள் புறஜாதிகளை இழிவாகப் பார்த்தனர், மேலும் தாங்களே சிறந்தவர்கள் என்று நினைத்த யூதர்களை புறஜாதியினர் வெறுத்தனர். பின்னர் இயேசு "சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்(தார்)து" (எபேசியர் 2:14-15). நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள இனி வேண்டியதில்லை. வேண்டியதெல்லாம் இயேசு மட்டுமே. யூதரும் புறஜாதியாரும் அவரில் ஐக்கியப்படுவார்களா?

அது அவர்களின் பதிலைப் பொறுத்தேயிருந்தது. இயேசு "தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்" (வ.17). ஒரே செய்தி, வெவ்வேறு பயன்பாடு. சுயநீதியுள்ள யூதர்கள் தாங்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதே சமயம் புறக்கணிக்கப்பட்ட புறஜாதியினர் தாங்கள் மோசமானவர்கள் அல்ல என்று நம்ப வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் பற்றி எரிச்சலாவதை விட்டு, கிறிஸ்துவின் மீதே கவனம் செலுத்த வேண்டும், அவர் "இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி(னார்)" (வ.15).

ஒதுக்கப்பட்டவராக உணர்கிறீர்களா? அது காயப்படுத்தும். அது சரியன்று. ஆனால், நீங்கள் இயேசுவில் இளைப்பாறும்போது நீங்களே சமாதானம் செய்பவராக இருக்க முடியும். அவரே இன்றும் நமது சமாதானம்.

 

கிறிஸ்துவில் பராமரித்தல்

என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.

தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: "மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக" (வ.3-4).

உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , ​​இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

தேவனின் பார்வையில் ஒவ்வாதது அல்ல

வருடாந்திர தேசிய கால்பந்து போட்டிகளுக்கான தேர்வுகளின் போது, ​​தொழில்முறை கால்பந்து அணிகள் புதிய வீரர்களைத் தேர்வு செய்கின்றன. வருங்கால வீரர்களின் திறமை மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவதற்குப் பயிற்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். 2022 இல், ப்ராக் பர்டி கடைசி 262வது இடத்தைப் பிடித்தார் மற்றும் "திரு. ovvvadhavar” என்று முத்திரை குத்தப்பட்டார். கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் புனைபெயர் அது. வரும் போட்டி தொடரில் அவர் விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, பர்டி தனது அணியை இரண்டு பிளேஆஃப் (சமநிலை உடைக்கும் போட்டிகள்) வெற்றிகளுக்கு வழிநடத்தினார். உண்மை என்னவென்றால், அணியின் நிர்வாகிகள் எப்போதும் திறனைக் கண்டறியும் வேலையைத் திறம்படச் செய்வதில்லை. நாமும் அப்படிதான்.

பரீட்சயமான பழைய ஏற்பாட்டுக் கதை ஒன்றில், ஈசாயின் குமாரரிலிருந்து இஸ்ரேலின் அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார். சாமுவேல் அந்த ஆண்மக்களைப் பார்த்தபோது, ​​அவர்களின் உடல் தோற்றத்தால் அவர் சற்றே தடுமாறினார். ஆனால் தேவன் அவரிடம், "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்" (1 சாமுவேல் 16:7) என்றார். மாறாக, தேவன் அவரை மூத்தவனையோ அல்லது பராக்கிரமசாலியையோ தெரிந்துகொள்ளும்படி வழிநடத்தாமல்,  இளையவனும் வெளித்தோற்றத்தில் பொருத்தமற்றவனாகவும் தோன்றும் தாவீதையே தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தினார். இவரே பின்னர் இஸ்ரவேலின் மிகப் பெரிய பூமிக்குரிய ராஜாவானார்.

மக்களை மதிப்பிடுவதில் அடிக்கடி நாம் ஏன் மோசமாகத் தவறுகிறோம்? " மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (வ.7) என்பதை நமது வேதாகம பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு பணிக்குழுவில் பணியாற்றவோ அல்லது ஒரு தன்னார்வ குழுவில் சேவைசெய்யவோ எவரையாகிலும் தேர்ந்தெடுக்கும்படி நாம் கேட்கப்படும்போது, ​​தேவனுக்குமுன்  விலையேறப்பெற்ற சுபாவங்களின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம்.