கவிதாவின் சமூக ஊடகப் பதிவைக் கண்டு ஆனந்தி குமுறினாள். அந்த புகைப்படத்தில் அவர்களுடைய பத்து சபை நண்பர்கள் ஒரு உணவக மேசையைச் சுற்றிலும் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் இரண்டாவது முறையாக, அவள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி கண்ணீர் விட்டாள். அவள் எப்போதும் பிறருடன் சகஜமாகப் பழகியதில்லை, இருந்தபோதும் அவளை ஒதுக்குபவர்களுடன் சபைக்குச் செல்வது எவ்வளவு வினோதமானது!
முதல் நூற்றாண்டு எவ்வளவு விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால், இயேசுவானவர் ஐக்கியத்தை நேசித்து நம் பிரிவினையை அகற்றிட வந்தார். ஆதி சபை தொட்டே, சகஜமாகப் பழக இயலாதவர்கள், அவரில் பொதுவான ஐக்கியம் பெறுவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காததற்காக யூதர்கள் புறஜாதிகளை இழிவாகப் பார்த்தனர், மேலும் தாங்களே சிறந்தவர்கள் என்று நினைத்த யூதர்களை புறஜாதியினர் வெறுத்தனர். பின்னர் இயேசு “சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்(தார்)து” (எபேசியர் 2:14-15). நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள இனி வேண்டியதில்லை. வேண்டியதெல்லாம் இயேசு மட்டுமே. யூதரும் புறஜாதியாரும் அவரில் ஐக்கியப்படுவார்களா?
அது அவர்களின் பதிலைப் பொறுத்தேயிருந்தது. இயேசு “தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்” (வ.17). ஒரே செய்தி, வெவ்வேறு பயன்பாடு. சுயநீதியுள்ள யூதர்கள் தாங்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதே சமயம் புறக்கணிக்கப்பட்ட புறஜாதியினர் தாங்கள் மோசமானவர்கள் அல்ல என்று நம்ப வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் பற்றி எரிச்சலாவதை விட்டு, கிறிஸ்துவின் மீதே கவனம் செலுத்த வேண்டும், அவர் “இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி(னார்)” (வ.15).
ஒதுக்கப்பட்டவராக உணர்கிறீர்களா? அது காயப்படுத்தும். அது சரியன்று. ஆனால், நீங்கள் இயேசுவில் இளைப்பாறும்போது நீங்களே சமாதானம் செய்பவராக இருக்க முடியும். அவரே இன்றும் நமது சமாதானம்.
நீங்கள் எப்போது ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள்? நீங்கள் எப்படி சமாதானம் செய்பவராகக் கூடும்?
அன்பு தகப்பனே, நான் புறக்கணிக்கப்படுகையில், நான் உமது குமாரனில் இளைப்பாறுவேன்.