ரியா, அந்த மதியத்தை ஒரு உள்ளூர் ஆற்றின் கரையில் கழித்தாள். தனது மீன்பிடிக் கம்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் தூண்டில் போட்டார். சமீபத்தில்தான் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்திருந்தாள். அவள் மீன் பிடிக்கும் நோக்கில் வரவில்லை; அவள் சில புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது தூண்டில் கயிறு புழுக்களாலோ அல்லது வேறு எந்த வழக்கமான இரையாலோ இரை வைக்கப்படவில்லை. மாறாக, அந்த கோடை நாளில் படகுகளில் ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை நீட்டிக்கத் தனது கனரக மீன்பிடி கம்பியைப் பயன்படுத்தினாள். அவள் தனது புதிய அயலாரைச் சந்திக்க இந்த ஆக்கப்பூர்வமான வழியைப் பயன்படுத்தினாள், அவர்கள் அனைவரும் இனிமையான உபசரிப்பை விரும்பியதாகவே தோன்றியது!

தம்மோடு வாழ்க்கையில் நடக்க இயேசுவானவர் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த விதத்தை மிகவும் அப்பட்டமாக ரியா செய்து, “நண்பர்களைப் பிடிக்க” சென்றாள். அந்த இரண்டு சகோதரர்களும் கடின உழைப்பாளிகள், கலிலேயா கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்தனர். இயேசு தம்மைப் பின்தொடரும்படி அழைத்து, அவர்களின் கடின உழைப்பில் குறுக்கிட்டு, மீன்களுக்குப் பதிலாக “மனுஷரை” பிடிக்க அவர்களை அனுப்புவதாகக் கூறினார் (மத்தேயு 4:19). அதன்பின் சிறிது நேரத்தில், யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இரு மீனவர்களுக்கும் அவர் அதே அழைப்பை விடுத்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வலைகளையும் படகுகளையும் உடனே விட்டு, இயேசுவோடு பயணித்தனர்.

தம்முடைய முதல் சீடர்களான மீனவர்களைப் போலவே, கிறிஸ்து தம்மைப் பின்பற்றி, நாம் உறவாடுபவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எனும் நித்திய காரியங்களில் கவனம் செலுத்த நம்மை அழைக்கிறார். இயேசுவோடு வாழ்வதற்கான நிலையான நம்பிக்கை (யோவான் 4:13-14) எனும் உண்மையிலேயே திருப்தியளிக்கக் கூடிய காரியத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் வழங்க முடியும்.