என் நண்பனின் தாயார் திருமதி சார்லின், தொண்ணூற்றுநான்கு வயது, ஐந்தடிக்கு கீழ் உயரம், ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர். ஆயினும்கூட, இவையெல்லாம் தனது மகனைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து அவளைத் தடுக்கவில்லை, அவனது உடல்நல குறைபாட்டால் தன்னை தானே அவன் பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்களது இரண்டு மாடி வீட்டிற்குச் சென்றால், அவள் வசிக்கும் இரண்டாவது மாடியில் அடிக்கடி அவளைக் காணலாம். மெதுவாக, பதினாறு படிக்கட்டுகளிலிருந்து முதல் மாடிக்கு இறங்கி, தான் நேசிக்கும் மகனைப் பராமரிப்பதில் உதவுவதுபோலவே தன் விருந்தாளிகளையும் உபசரிக்கிறாள்.

தனது நலனை விட தன் மகனின் நலனையே முதன்மைப்படுத்துவதால், திருமதி. சார்லினின் தன்னலமற்ற உறுதியானது, என்னைக் குற்ற உணர்வுள்ளவனாக்கியும், அறைகூவல் விடுத்தும் மற்றும் ஊக்கப்படுத்துகிறது. பிலிப்பியர் 2-ல் பவுல் ஊக்குவிப்பதை, அவள் முன்மாதிரியாகக் காட்டுகிறாள்: “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக” (வ.3-4).

உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பிற தேவைகள் உள்ளவர்களைக் கவனிப்பதற்கு அதிக கிரயம் செலுத்தவேண்டியிருக்கலாம். அவர்கள் வாழ்க்கையின் தேவைகளுக்காக அனைத்தையும் செலுத்தவேண்டி இருக்கலாம். மேலும் நம்மையே மையப்படுத்தியிருக்கும் நோக்கத்தை நாமே வலிய அகற்றாவிடில், நமக்கு நெருக்கமானவர்களுக்குக் கூட பற்றாக்குறை உண்டாகலாம். ஆனால் இயேசுவின் விசுவாசிகள், தாழ்மையுடன் பராமரிக்கவே அழைக்கப்படுகிறார்கள் (பார்க்க. வ. 1-4). நம்மையே நாம் அர்ப்பணிக்கும்போது , ​​இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (வ.5) என்று அப்போஸ்தலன் நமக்கு நினைப்பூட்டுகிறார்.