கிருபையின் ஆச்சரியம்
ஆச்சரியங்கள் சுவாரஸ்யமாக இருக்கலாம். சில சமயங்களில் அவைகள் சிறப்பானதாகவும், சிலிர்ப்பூட்டுவதாகவும் இருக்கலாம் — எவ்வித வெகுமதி அல்லது அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தன் வேலையில் கடினமாக உழைக்கும் நபருக்கு பதவி உயர்வால் வரும் ஆச்சரியம் போன்று. இவை ஓர் மகிழ்ச்சியான அதிர்ச்சியின் நேரம், மற்றும் மிகப்பெரிதான புன்முருவல் அவரது முகத்தில் நாட்கணக்கில் இருக்கும். என்ன ஓர் பெரிதான ஆச்சரியம்!
பயமுறுத்துவதாகவும் இருக்கலாம். வழக்கமான உடல் நலப்பரிசோதனைக்காகச் செல்லும் நபர் மிகவும் நன்றாக இருக்கிறார், ஆனால் “இவை சொல்லப்பட வேண்டும்”, “நாங்கள் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தோம்” என்று சொல்லப்படும் நல்ல…
கிறிஸ்துவில் அமைதியான உண்மை
அவரை நான் முதலில் பார்க்கவில்லை.
நான் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவு சாப்பிடுவதற்காக நான் கீழே இறங்கிவந்தேன். உணவு உண்ணும் அந்த அறையில் அனைத்தும் சுத்தமாக இருந்தது. உணவு மேசைகள் பதார்த்தங்களினால் நிரம்பியிருந்தன. குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. பாத்திரம் கொள்கலன் நிரம்பியிருந்தது. அனைத்தும் சரியாக இருந்தது.
அப்போது நான் அவரைப் பார்த்தேன். ஒரு கவனிக்கப்படாத நபர் அவைகள் ஒவ்வொன்றையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். அவைகளை துடைத்து சுத்தம் செய்தார். அவர் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால் நான் அதிக நேரம் அமர்ந்திருந்தேன், மேலும் நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதர் மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கவனித்து, யாருக்கும் ஏதாவது தேவைப்படுமுன் அனைத்து பாத்திரங்களையும் நிரப்பிக்கொண்டேயிருந்தார். உணவு சேவையில் அனுபவம் வாய்ந்தவராக, அவர் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதை நான் கவனித்தேன். இந்த மனிதர் உண்மையாக வேலை செய்ததால் அந்த இடத்தில் அனைத்தும் சரியாக இருந்தது.
இந்த நபர்; உன்னிப்பாக வேலை செய்வதைப் பார்த்து, தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்: “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்” (1 தெசலோனிக்கேயர் 4:12). உண்மையாய் வேலை செய்யும் ஒருவன் மற்றவர்களுடைய மதிப்புக்கு எவ்விதத்தில் பாத்திரமாகக்கூடும் என்பதை அறிந்த பவுல், ஒரு சிறிய சேவையின் மூலம் சுவிசேஷத்தை நாம் எவ்வாறு கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் சொல்ல முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.
அன்று நான் பார்த்த மனிதர் கிறிஸ்தவ விசுவாசியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அமைதியான விடாமுயற்சி, கிறிஸ்துவுக்காக அமைதியான உண்மையுடன் வாழ என்னை ஊக்குவித்தது.
தென்பட்ட நம்பிக்கை
கடல்சார் ஆய்வாளர் சில்வியா ஏர்லே, பவளப்பாறைகள் சீரழிவதை நேரில் கண்டுள்ளார். அவர் “மிஷன் ப்ளு” என்னும் நிறுவனத்தை உலகளாவிய “நம்பிக்கை புள்ளிகளின்" வளர்ச்சிக்காக நிறுவினார். உலகெங்கிலும் உள்ள இந்த சிறப்பு இடங்கள் “கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.” இது பூமியில் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பகுதிகளுக்கு அதிக கவனிப்பு கொடுப்பதின் மூலம், விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள சமூகங்களின் உறவுகளை மீட்டெடுப்பதையும், ஆபத்தான உயிரினங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கின்றனர்.
சங்கீதம் 33 இல், தேவன் அனைத்தையும் உண்டாக்கி, அவைகள் உறுதியாய் நிற்கக்கூடியவைகள் என்பதை கண்டார் என்று சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார் (வச. 6-9). தேவன் தலைமுறைகள் மற்றும் தேசங்களின் மீது ஆளுகைசெய்கிறார் (வச. 11-19). அவர் மட்டுமே உறவுகளை மீட்டெடுக்கிறார், உயிர்களைக் காப்பாற்றுகிறார், மற்றும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறார். இருப்பினும், தேவன் உண்டாக்கிய உலகத்தின் மீதும் அதின் மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்கு அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
மேகங்கள் நிறைந்த, சாம்பல் நிற வானத்தின் குறுக்கே தெறிக்கும் வானவில்லை காணும்போதோ, கடலின் அலைகள் கரையில் மோதும்போதும், நாம் அவரை நம்பியிருக்கிறபடியால் அவருடைய மாறாத அன்பை பறைசாற்றலாம் (வச. 22).
உலகத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று நம்மை நம்பத் தூண்டும் மனச்சோர்வுக்கும் பயத்திற்கும் ஒருவேளை நாம் ஆளாகக்கூடும். இருப்பினும், தேவனுடைய பராமரிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நாம் நம் பங்கைச் செய்யும்போது, அவரை சிருஷ்டிகராகக் கனப்படுத்தவும், மற்றவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும்போது அவரை அவர்கள் கண்டுபிடிக்க நாம் உதவலாம்.
குமாரனும் உயிர்த்தெழுந்தார்
எர்னஸ்ட் ஹெமிங்வேயின் முதல் நாவல், சமீபத்தில் முதலாம் உலகப் போரைச் சந்தித்த கடும் குடிபழக்கத்திற்கு ஆளான நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சமீபத்தில் நடந்த போரின் வடுக்களை எதோ ஒரு விதத்தில் மறக்க எண்ணி, விருந்துகள், சாகச நிகழ்வுகள் மற்றும் தூக்கத்தின் மூலம் ஆகியவற்றில் நேரம் செலவழிப்பவர்கள். வலியை மறப்பதற்கு மதுபானம் எப்போதும் இருக்கிறது. ஆனால் யாரும் மகிழ்ச்சியாயில்லை.
ஹெமிங்வேயின் “தி சன் ஆல்சோ ரைசஸ்” என்ற புத்தகத்திற்கான தலைப்பு பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வந்தது (1:5). பிரசங்கியில், சாலெமோன் ராஜா தன்னை “பிரசங்கி" என்று குறிப்பிடுகிறார் (வச. 1). “எல்லாம் மாயை” (வச. 2) என்று அவர் கவனித்து, “மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” (வச. 3) என்று கேட்கிறார். மேலும் சாலெமோன், சூரியன் எவ்வாறு உதயமாகிறது மற்றும் மறைகிறது, காற்று அங்குமிங்குமாக வீசுகிறது, ஆறுகள் முடிவில்லாமல் ஒருபோதும் திருப்தியடையாத கடலில் பாய்கின்றன (வவ. 5-7) என்ற பார்க்கிறார். ஆனால் எல்லாம் மறந்துபோய்விடுகிறது (வச. 11).
ஹெமிங்வே மற்றும் பிரசங்கி, இருவரும் இந்த வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்வதன் அப்பட்டமான பயனற்ற தன்மையுடன் நம்மை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சாலெமோன் தனது புத்தகத்தில் தெய்வீகத்தின் பிரகாசமான குறிப்புகளை விதைக்கிறார். மெய்யான நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது. பிரசங்கி நாம் இருக்கும் நிலையை மாத்திரமல்லாமல், தேவன் யார் என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். “தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (3:14) என்று நம்முடைய நம்பிக்கையின் அஸ்திபாராமாய் சாலேமோன் தேவனை அடையாளப்படுத்துகிறார். ஏனென்றால், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குப் ஈவாகக் கொடுத்திருக்கிறார்.
நாம் தேவனில்லாமல், முடிவேயில்லாத, திருப்பதியடையாத ஒரு கடலில் நீந்திக்கொண்டேயிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுந்த குமாரனாகிய இயேசுவின் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறோம்.
கிறிஸ்துவில் புது அங்கீகாரம்
“நான் ஒரு காலத்தில் இருந்தவன் அல்ல. நான் ஒரு புதிய நபர்." தன் பள்ளிக் கூடுகையில் என்னும் மகன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை விவரித்தது. ஹெராயின் என்னும் போதை வஸ்துக்கு அடிமையாயிருந்த ஜெஃப்ரி, அதே பாவ கண்ணோட்டத்தோடே தன்னுடைய வாழ்க்கையை பார்க்க நேரிட்டது. ஆனால் தற்போது அவன் தன்னை தேவனுடைய பிள்ளையாய் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
வேதாகமம் இந்த வாக்குறுதியுடன் நம்மை ஊக்குவிக்கிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). நம்முடைய கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது முக்கியமில்லை, ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, அவருடைய சிலுவை கொடுக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட பின்பு நாம் புது சிருஷ்டியாய் மாறிவிடுகிறோம். ஏதேன் தோட்டத்தில் நாம் பாவத்தால் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். ஆனால் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” (வச. 18-19). நாம் அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கத்தக்க அவருடைய அன்பான பிள்ளைகளாயிருக்கிறோம்.
இயேசு நம்மை பாவத்திலிருந்தும் அதன் ஆதிக்க வல்லமையிலிருந்தும் விடுவித்து, தேவனுடன் ஒரு புதிய உறவை மீட்டெடுக்கிறார். ஆகையால் நாம் இனி நமக்காக வாழாமல், “தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” வாழுவோம் (2 கொரிந்தியர் 5:15). இந்த புத்தாண்டு தினத்தில், அவருடைய மறுரூபமாக்கும் அன்பு நம்மை புதிய அடையாளத்துடனும் நோக்கத்துடனும் வாழத் தூண்டுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது மற்றவர்களை நம் இரட்சகரிடம் வழிநடத்த உதவுகிறது. அவர்களும் புதிய சிருஷ்டிகளாக மாற முடியும்!