எர்னஸ்ட் ஹெமிங்வேயின் முதல் நாவல், சமீபத்தில் முதலாம் உலகப் போரைச் சந்தித்த கடும் குடிபழக்கத்திற்கு ஆளான நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சமீபத்தில் நடந்த போரின் வடுக்களை எதோ ஒரு விதத்தில் மறக்க  விருந்துகள், சாகச நிகழ்வுகள் மற்றும் தூக்கத்தில் நேரம் செலவழித்தனர். வலியை மறப்பதற்கு எப்போதும் மதுபானம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் யாரும் மகிழ்ச்சியாயில்லை. 

ஹெமிங்வேயின் “தி சன் ஆல்சோ ரைசஸ்” என்ற புத்தகத்திற்கான தலைப்பு பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வந்தது (1:5). பிரசங்கியில், சாலொமோன் ராஜா தன்னை “பிரசங்கி” என்று குறிப்பிடுகிறார் (வச. 1). “எல்லாம் மாயை” (வச. 2) .மேலும் சாலொமோன், சூரியன் எவ்வாறு உதயமாகிறது மற்றும் மறைகிறது,காற்று அங்குமிங்குமாக வீசுகிறது, ஆறுகள் முடிவில்லாமல் ஒருபோதும் திருப்தியடையாத கடலில் பாய்கின்றன (வவ. 5-7) என்று பார்க்கிறார். ஆனால் எல்லாம் மறந்துபோய்விடுகிறது (வச. 11).

ஹெமிங்வே மற்றும் பிரசங்கி, இருவரும் இந்த வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்வதன் அப்பட்டமான பயனற்ற தன்மையுடன் நம்மை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சாலெமோன் தனது புத்தகத்தில் தெய்வீகத்தின் பிரகாசமான குறிப்புகளை விதைக்கிறார். மெய்யான நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது. பிரசங்கி நாம் இருக்கும் நிலையை மாத்திரமல்லாமல், தேவன் யார் என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். “தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (3:14) என்று நம்முடைய நம்பிக்கையின் அஸ்திபாராமாய் சாலேமோன் தேவனை அடையாளப்படுத்துகிறார். ஏனென்றால், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குப் ஈவாகக் கொடுத்திருக்கிறார்.

நாம் தேவனில்லாமல், முடிவேயில்லாத, திருப்பதியடையாத ஒரு கடலில் நீந்திக்கொண்டேயிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுந்த குமாரனாகிய இயேசுவின் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறோம்.