ச்சரியங்கள் சுவாரஸ்யமாக இருக்கலாம்.  சில சமயங்களில் அவைகள் சிறப்பானதாகவும், சிலிர்ப்பூட்டுவதாகவும் இருக்கலாம் — எவ்வித வெகுமதி அல்லது அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தன் வேலையில் கடினமாக உழைக்கும் நபருக்கு பதவி உயர்வால் வரும் ஆச்சரியம் போன்று. இவை ஓர் மகிழ்ச்சியான அதிர்ச்சியின் நேரம், மற்றும் மிகப்பெரிதான புன்முருவல் அவரது முகத்தில் நாட்கணக்கில் இருக்கும். என்ன ஓர் பெரிதான ஆச்சரியம்!

பயமுறுத்துவதாகவும் இருக்கலாம். வழக்கமான உடல் நலப்பரிசோதனைக்காகச் செல்லும் நபர் மிகவும் நன்றாக இருக்கிறார், ஆனால் “இவை சொல்லப்பட வேண்டும்”, “நாங்கள் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தோம்” என்று சொல்லப்படும் நல்ல மற்றும் கெட்ட ஆச்சரியங்கள், நம்மை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளும் திறன் கொண்டது. வாழ்க்கையைப் பற்றிய நமது சௌகரியமான முன்கணிப்புகளுக்கு அவை சவால் விடுகின்றன.

இயேசு பிதாவை நமக்கு வெளிப்படுத்திய போது, அவை அதே வகையான அமைதியற்ற விளைவைக் கொண்டிருந்தது, இன்னமும் அதே நிலைதான். அவர் தனது நாட்களிலும் நமது நாட்களிலும் ஜனங்கள் தேவனைப்புரிந்து கொள்வதற்கான வரம்புகளை விரிவாக்கினார். இயேசு நம்மை இப்பிரபஞ்சத்தின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, நாம் முன்பு இருந்ததை விட பிதாவைப் பற்றிய தெளிவான பார்வையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறார். அங்கு நாம் காண்பது நமது எதிர்பார்ப்புகளையும் விட மிகவும் அற்புதமானதாகவும், மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

தேவனின் இத்தகைய ஆச்சரியமான காரியங்கள் நமது ஆன்மீக மற்றும் வேத முன்னுதாரணங்களை மறுபரிசீலனை செய்ய சவால் விடுகிறது. தேவனைப் பற்றி நாம் கற்பனை செய்திருப்பதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கக்கூடிய ஓர் கண்ணோட்டத்தைப் பரிசீலித்துப் பார்க்க இயேசு நமக்கு உதவுகிறார்.

இயேசு பிதாவை எதிர்பாராத விதங்களில் வெளிப்படுத்தியதால், இயேசு வெளிப்படுத்திய தந்தையின் இதயத்தை வகைப்படுத்த போதுமான அடையாளங்கள் நம்மிடம் இல்லை.

அப்படியென்றால், ஆச்சரியமான தேவனைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? ஒப்புக்கொண்டபடி, நாம் கதையை மட்டுமே சொல்ல ஆரம்பிக்க முடியும். ஆனால் அடுத்து வரும் பக்கங்களில், கிறிஸ்துவில் பிதா தன்னை வெளிப்படுத்துவது எவரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அற்புதமானது மற்றும் ஆச்சரியமானது என்பதைப் பற்றி சில வழிகளைக் காண்போம்.

பில் க்ரவுடர்

உள்ளடக்கங்கள்

banner image

முதன்முதலாக நான் இஸ்ரேல் தேசத்துக்குச் சென்றபோது, பிரமிப்பின் ஆச்சரியத்தை உணர்ந்தேன். இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் பெரும்பகுதியைக் கழித்த கலிலேயா கடலை நான் முதன் முதலில் பார்த்தபோது மிகுந்த வியப்படைந்தேன். ஒலிவ மலையின் உச்சியில் இருந்து பழைய எருசலேம் நகரத்தின் காட்சியைக் கண்டு பெருமூச்சுடன் திகைத்து நின்றேன். மசாடாமலைக் கோட்டையின் வரலாறு மற்றும் அதன் மனபாரத்தால் ஈர்க்கப்பட்டேன். எருசலேமின் யாட்வாஷேமில் உள்ள ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் நாங்கள் நேரத்தை செலவிட்ட போது ஏற்பட்ட திகில் மற்றும் துக்கத்தின் உணர்வால் மனம் உடைக்கப்பட்டேன்.

இருப்பினும், அத்தகைய ஆச்சரியங்களுடன், வேதாகமத்திலுள்ள தேசங்களில் மிகவும் பிரபலமான இரண்டு இடங்களான பெத்லகேம் மற்றும் நாசரேத்தினிலும் நான் எவ்வளவாய் தாழ்ந்திருந்தேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சாதாரணமாக இருந்தனர். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் அன்று நான் கற்பனை செய்த “பெத்லகேம் என்ற சிறிய நகரத்திலிருந்து” அவை வெகு தொலைவில் வேறுபட்டு ஈர்க்கப்படாத, தூய்மையற்ற நகரங்களாக இருந்தன. அந்த வரலாற்றுத் தளங்களில் காணப்பட்ட அத்தகைய பொதுவான தன்மைக்கு நான் சற்றும் ஆயத்தமாக இல்லை.

எனக்கு தனிப்பட்ட ஏமாற்றம் இருந்தபோதிலும், அந்த சாதாரணத்தன்மைதான் அவர்களை மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக்குகிறது. இயேசுவின் மறைபொருளான மற்றும் விவரிக்க முடியாத திரு அவதாரம்தான் விழித்திராதிருந்த பண்டைய கிராமங்களுக்கு முக்கியத்துவத்தை அளித்தது.

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை அத்தகைய சாதாரண இடங்களுடன் இணைக்கப்படுவது பொருத்தமானது. அவரது அடையாளத்தின் சிறப்பான மகிமை இருந்த போதிலும், அவர் (மற்றும்) பெரும்பாலும் மிகவும் பழக்கமானவராகவும் சாதாரணமானவராகவும் காணப்பட்டார்.

ஏசாயா தீர்க்கதரிசி இதைப் பற்றி எச்சரித்தார்:

இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிறவேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. (ஏசாயா 53:2)

உலக இரட்சகரைப்பற்றி இவை ஓர் எதிர்பாராத விளக்கம். அவரது தோற்றத்தில் விரும்பத்தக்கது எதுவும் இல்லை என்பது மேசியாவும் தேவகுமாரனும் தன்னை வெளிப்படுத்தும் விதத்தைப் பற்றி பொதுவானதாக விளக்குகிறது.

சிறுவனாக இருந்தபோது, என் அப்பா என்னை கிங் ஆஃப் கிங்ஸ் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. மிகவும் அழகான மனிதராக இருந்த ஜெஃப்ரி ஹண்டர் இயேசுவாக நடித்தார். கிறிஸ்துவைப் பற்றிய அவரது சித்தரிப்பில், ஹண்டருக்கு நீண்ட, பாயும், கருங்கல் முடி மற்றும் துளையிட்டு ஊர்க்கும் நீலக் கண்கள் இருந்தன – இவை இயேசுவை பற்றி ஓர் அழுத்தமான தோற்றத்தை ஏற்படுத்தியது.

அவர் கருமையான முடி, கருமையான கண்கள் மற்றும் ஒலிவ தோல் கொண்ட சராசரியான, சாதாரண, முதல் நூற்றாண்டு யூதர்.

ஆனால் இயேசு திரைப்பட நட்சத்திரம் போன்று நல்ல தோற்றத்துடன் வரவில்லை. உண்மையில், ஏசாயாவின் வார்த்தைகளின் உட்குறிப்பு அதற்கு நேர்மாறானது. ஏசாயா தன்னைப் போலவே மேசியா வருவதற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அவருடைய வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இயேசு வேண்டுமென்றே தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பொதுத்தன்மை, அவர் வாழ்ந்த நாசரேத் வரை நீட்டிக்கப்பட்டது. ஓர் வேத போதகர் ஒருமுறை எழுதினார்:

இந்த நேரத்தில், நாசரேத்தில் வசிப்பவர்கள் எவரிடமிருந்தும் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கைவிடப்பட்டதாக நாம் கருதலாம், மேலும் அதன் தீமை ஓர் பழமொழியாகவே மாறிவிட்டது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா? ”

நாசரேத்திலிருந்து சிறப்பு வாய்ந்த ஒருவரைக் கண்டுபிடிப்பது பற்றிய பிலிப்புவின்கூற்றுக்கு நாத்தான்வேலின் எதிர்வினையை இந்த சிந்தனை நிச்சயமாக விளக்குகிறது:

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: “நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்றான். அதற்கு நாத்தான்வேல்: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா” என்றான். அதற்குப் பிலிப்பு: “வந்து பார்” என்றான். (யோவான் 1:45-46)

கலிலேயாவில் உள்ள நாசரேத்திலிருந்து வந்ததற்கு ஓர் சிறிய களங்கம் இருந்தது. கலிலேயர்கள், குறிப்பாக எருசலேமில் உள்ள மதப் பிரபுத்துவத்தால், பின்தங்கியவர்களாகவும் புறக்கணிக்கப்படத்தக்கவர்களாகவும் கருதப்பட்டனர். எனவே கலிலேயாவைச் சேர்ந்த ஒருவர் மேசியாவின் பாத்திரத்திற்கு தகுதியானவராக கருதப்படமாட்டார். குறிப்பு:

அவருடைய வார்த்தைகளைக் கேட்ட மக்களில் சிலர், “மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர்” என்றார்கள்.

வேறுசிலர்: “இவர் கிறிஸ்து” என்றார்கள். வேறுசிலர்: “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா”என்றார்கள். (யோவான் 7:40-42)

இயேசுவின் பாரம்பரியத்தைப் பற்றிய அவர்களின் இறுதி பகுப்பாய்வு யோவான்7:52 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது, மதத் தலைவர்கள் நிக்கொதேமுவிடம் கூறியது: “நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்து பாரும்” என்றார்கள். (முக்கியத்துவப்படுத்தப்பட்டது).

அவர்களின் முடிவுகள் தவறான சிந்தனையின் அடிப்படையில் அமைந்தன. உண்மையில், ஏற்கனவே கலிலேயாவிலிருந்து ஓர் தீர்க்கதரிசி இருந்திருக்கிறார், யோனா நாசரேத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள காத்ஹெப்பர் (2 இராஜாக்கள் 14:25) கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயினும்கூட, பொதுவான ஓர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள இயலாமையால், அவர்கள் இயேசு யார் என்ற உண்மையை நிராகரித்தனர் – மேலும் அவருடைய உண்மையான அடையாளத்தை கண்டறியத் தவறிவிட்டனர். 

இயேசுவின் வெளித்தோற்றத்தில் மக்கள் பார்த்தது முழு அத்தியாதமல்ல என்பதை அவரது யதார்த்தமான வெளிப்பாடு நமக்குக் கற்பிக்கிறது. மீதமுள்ள கதை மத்தேயு 17 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு தனது மூன்று சீடர்களுடன் (பேதுரு, யாக்கோபு, யோவான்) கலிலேயாவில் ஓர் மலையின் மேல் ஏறிச்சென்றார் . அங்கு அவர்கள் இருந்த தருணங்களைப் பற்றிய மத்தேயுவின் பதிவு மிகவும் பொதுவானவராகக் கருதப்பட்ட இயேசுவின் உண்மையான தன்மையை விவரிக்கிறது.

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச்சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். (மத்தேயு 17:1-6)

கிறிஸ்துவின் உண்மையான தன்மை மோசே மற்றும் எலியாவின் குறிப்பிடத்தக்க தோற்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அதைவிட முக்கியத்துவமானது, அந்த இயல்பு அவருடைய மகிமையின் (“மறுரூபம்”) மற்றும் தந்தையின் (“என்னுடைய நேச குமாரன்”) பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டது. கிறிஸ்துவின் மகத்துவம் அந்த மலையில் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது.

அவருக்கென்று பொதுவான தோற்றம், பொதுவான வளர்ப்பு, பொதுவான வாழ்க்கை முறை மற்றும் பொதுவான பின்னணி இருந்தபோதிலும், இயேசுவைப் பற்றி சாதாரணமாக கருத எதுவும் இல்லை. அவர் தன்னை வெளிப்படுத்திய சாதாரண வழியால் அவரது மாட்சிமை குறையாமல் இருந்தது.

banner image

டா க்டர் ஹாரி அயர்ன்சைட் சிகாகோவில் உள்ள மூடி மெமோரியல் தேவாலயத்தில் போதகராக இருந்தபோது ஒருமுறை நான் அவரைப் பற்றிய ஓர்கதையைக் கேட்டேன். டாக்டர் அயர்ன்சைட்டின் போதனையால் ஓர் குடும்பம் பெரிதும் ஈர்க்கப்பட்டது. இதன் விளைவாக, மூடி தேவாலயப் பிரசங்க பீடத்திலிருந்து அந்தப் பிரசங்கியின் செய்தியைக் கேட்பதற்காக சிகாகோவிற்கு ஓர் சிறப்பு பயணத்தில் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்கள் பல மாதங்களாக தங்கள் பணத்தைச் சேமித்தனர்.

அவர்கள் இறுதியாக தேவாலயத்திற்குச் சென்றபோது, பெற்றோர் ஆராதனை அனுபவத்தில் மகிழ்ச்சியடைந்ததோடு போதகர் அயர்ன்சைட்டின் போதனையைக் நேரடியாக கேட்டதில் உற்சாகமடைந்தனர். அவர்கள் ஆராதனை முடிந்து வெளியேறியதும், தங்கள் குழந்தைகளும் இந்த அனுபவத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று நினைத்தார்கள், எனவே குழந்தைகள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். சிறிது சிந்தித்த பிறகு, குழந்தைகளில் ஒருவன் கூறினான், “பாஸ்டர் அயர்ன்சைட் எவ்வளவு பெரியவராக இருக்கவேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் அவ்வளவு பெரியவராக இல்லை, அவர் கூறியவை எல்லாம் எனக்குப் புரிந்தது” என்றான்.

ஓரு விதத்தில், இயேசுவும் அப்படித்தான். அவருடைய நாட்களில் மதத் தலைவர்கள் அற்பமான மனிதர்களாகக் கருதியவர்களுடன் நன்றாகப் பழக முடியவில்லை, அல்லது கூடியிருக்க முடியவில்லை.. எவ்வாறாயினும், மெய்யான மகத்துவம் எவ்வாறு இயற்கையாக எவ்வித சிரமமின்றி மக்களிடையே இடைவெளிகளைக் குறைக்கிறது என்பதை இயேசு காட்டினார்.

முதல் நூற்றாண்டு இஸ்ரவேலில், குழந்தைகளைவிட சில விஷயங்கள் அற்பமானவைகளாயிருந்தது. ஆயினும் இயேசு சிறுபிள்ளைகளை நேசித்தார், அவர்கள் அவருடன் சௌகரியமாக இருந்தார்கள். மெய்யான மகத்துவத்தின் உவமையாக இயேசு ஓர் சிறுபிள்ளையைப் பயன்படுத்தினார்:

இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். (லூக்கா 9:47–48)

இன்றும் நாம் கூட, சிறுபிள்ளைகள் “கண்ணோக்கப்பட வேண்டும், ஆனால் செவிகொடுக்கக் கூடாது” என்று நினைக்கிறோம். டபிள்யூ.சி. ஃபீல்ட்ஸ் “சிறுபிள்ளையே, சென்றுவிடு நீங்கள் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்” என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வைப் பெறுவது எளிது. ஆனால் சிறுபிள்ளைகள் இயேசுவுக்கு அற்பமானவர்கள் அல்ல.

மிகச்சிறிய குருவி (மத்தேயு 10:29) முதல் இன்று வெளிப்பட்டு நாளை மறையும் (6:28-30) அல்லிகள் வரை, உலகில் அற்பமானதாகக் கருதப்படும் விஷயங்களில் இயேசு தொடர்ந்து மகத்துவத்தின் மதிப்பை வெளிப்படுத்தினார்.

மேற்கத்திய உலகில் உள்ள முரட்டுத்தனமான தனித்துவத்தைப் போலல்லாமல், குழந்தைகளைப் பற்றிய பண்டைய இஸ்ரேலின் பார்வை குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையுடன் தொடர்புடையது. அவர்கள் முதிர்ச்சி அடைந்து, திருமணம் செய்துகொள்ளும் வரை, குழந்தைகளுக்கு சமூகத்தில் எந்த நிலைபாடும் இல்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் அல்லது தங்கள் ஊர், கோத்திரம் அல்லது தேசத்தில் உள்ள பெரியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர். ஆனால் அதே குழந்தைகள் ஒவ்வொரு குடும்பத்தின் (மற்றும் சில நேரங்களில் முழு நகரங்கள் மற்றும் பழங்குடியினரின்) நம்பிக்கையின் திறவுகோலாக இருந்தனர். ஓர் குடும்ப மரபு அல்லது பழங்குடியின் மரபு குழந்தைகள் மீது சுமத்தப்பட்டது. எனவே அவர்கள் சமூகத்தில் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு சமுதாயத்தின் எதிர்காலத்திற்கும் அவர்கள் முக்கியமாக இருந்தனர். அதனால்தான் ஆதியாகமத்தில் உள்ள பரம்பரைகள் தந்தையின் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் குழந்தைகளின் செயல்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.

முரண்பாடாக, இயேசு முக்கியத்துவமற்றதை ஏற்றுக்கொண்டதால், அவர் தங்களை பெரியவர்களாகக் காட்ட முற்பட்டவர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்தினார். மத்தேயு 20:25-26 ல், இயேசு அந்தப் பிரச்சினையைக் குறித்து நேரடியாகப் பேசினார்:

அப்பொழுது, இயேசு அவர்களைக்கிட்டவரச் செய்து: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரனாயிருக்கக்கடவன்.”

மிகுந்த ஆஸ்தி உள்ள இளம் செல்வந்தர் (மாற்கு 10:22) போன்று, பெரும் செல்வத்தால் வரும் அபாயத்தை நமக்கு நினைவூட்டுவதன் மூலம் இயேசு நமது பூமிக்குரிய முன்னுதாரணங்களுக்கு ஓர் பரலோக முன்னோக்கைக் கொண்டுவந்தார். அவர் தேவாலயத்தின் தற்காலிக இயல்பை வெளிப்படுத்தியபோது, நிலைத்திருக்க முடியாத சாதனைகளால் மகத்துவத்தை அளவிடுவதற்கு எதிராக எச்சரித்தார் (13:1-2). சுய-முக்கியத்துவம் கொண்டவர்கள் தங்கள் மதத்தை அவர்களின் மகத்துவத்தின் சின்னம் மற்றும் அடையாளம் என்று பறைசாற்றும்போக்கிற்கு எதிராக பரலோகம் எச்சரிக்கின்றது (மத்தேயு 6:1-5).

எவை உண்மையிலேயே பெரியது மற்றும் வியக்கத்தக்க வகையில் அற்பமானது என்பதற்கான விதி முறைகளையும் தரங்களையும் மறுவரையறை செய்ததின் மூலம் இயேசு தமது காலத்து மக்களை ஆச்சரியப்படுத்தினார். மேலும் அவரே உண்மையிலேயே பெரியவராக இருந்ததால், உலகம் முக்கியமற்றதாகக் கருதியவற்றுக்கு மதிப்பு அளிக்க அவர் விருப்பம் கொண்டிருந்தார். “அற்பமாய் எண்ணப்பட்டவர்களை” அரவணைப்பதற்காக “மேன்மையாய் எண்ணப்பட்டவர்களை” தொடர்ந்து நிராகரிப்பதன் மூலம் அவரது நாட்களின் மக்களை மனமடிவாக்கினார். அவரைப் பின்பற்றுபவர்களை, தங்கள் சொந்த சிந்தனை வழிகளை ஆராய்ந்து, “இயேசு மதிக்கிறவர்களை நான் மதிப்பிடுகிறேனா அல்லது என்னைச் சுற்றியுள்ளவர்களால் முக்கியத்துவத்தை வரையறுக்க அனுமதிக்கிறேனா?” என்று கேட்கும்படி கட்டாயப்படுத்துகிறது.

banner image

ந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவின் சாலையில் பயணிக்கும் போது, சாலையோரத்தில் காணப்படும் காட்சிகள் சற்று வேடிக்கையாயிருந்தாலும் மிகுந்த கவலையை ஏற்படுத்தும்.

நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களிடம் சிறு ஆபரணம் (டிரிங்கெட்) விற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காணும் போது வருத்தமாக இருக்கிறது. சில குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் குழந்தைகளின் வறுமை மிகுந்த கவலை அளிக்கிறது. வெளிப்படையாக, போதுமான வீடு, உடை, உணவு, தண்ணீர், சுகாதாரவசதிகள் இல்லாமல், இந்த சூழ்நிலையில் உள்ள மக்கள் முற்றிலும் நிர்க்கதியாகவும், நொருக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

அந்த மாதிரியான வறுமையைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் விலகி இருப்பது கடினம். அத்தகையக்காட்சிகள் குற்றவுணர்ச்சியிலிருந்து கோபம், அலட்சியம், அக்கறையின்மை போன்ற எதிர்வினைகளை நமக்குள் அடிக்கடி உருவாக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நாம் எதுவும் செய்யாமல் நம் கண்களைத் திசை திருப்புகிறோம். இவ்வுலக வாழ்வின் சிதைவுகளை நாம் காண்கிறோம், மேலும் அதனைச் செயலாக்க முடியாத அளவுக்கு கடினமானதாக உணர்கிறோம். ஆனால் இயேசு வேறுபட்டவர். அவர் இந்த உலகத்தின்சிதைவுகளைத் தழுவி, அதில் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். மெய்யாகவே, அவர் உடைக்கப்பட்ட வாழ்க்கையை முற்றிலும் வேறுபட்டதாக மாற்றினார்.

சில விஷயங்கள் இயேசுவின் தலைமுறையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது, சமூகத்தின் புறக்கணிப்பு மற்றும் நிராகரிப்புகளில் தன்னை ஒப்புக்கொடுக்க அவர் தயாராக இருந்தார். உடைக்கப்பட்ட மக்களிடம் இயேசு மிகுந்த இரக்கத்தையும் அக்கறையையும் காட்டினார், ஆனால் பெரும்பாலானோர் விலகிச் சென்றனர். ஓர் குறிப்பிட்ட தொழு நோயாளியுடன் அவர் இடைபட்டதைப் போன்று வேறு எங்கும் தெளிவாகக் காணப்படவில்லை.

இயேசுவின் நாட்களில் குஷ்டரோகம் ஓர் அருவருப்பான, அழிவுக்கேதுவான வியாதியாக இருந்தது என்பதை நினைவில்கொள்ளுங்கள், அவை மிகவும் தொற்று நோயாக அஞ்சப்பட்டது. ஒருவருக்கு தோல் வறண்டு போனால், அவர் ஆசாரியர்களால் பரிசோதிக்கப்பட்டு, சிறிது நேரம் தனிமைப்படுத்தப்படுவார். இரண்டாவது பரிசோதனையில் அந்த இடம் உண்மையில் குஷ்டரோகம் என்று நிரூபணமானால், பாதிக்கப்பட்டவர் தனது குடும்பம், வீடு, தொழில், சமூகம் மற்றும் ஜெப ஆலயம் ஆகியவற்றிலிருந்து சமூகத்தின் எல்லைக்கு வெளியே அலைந்து திரியத் தள்ளப்படுவார். அவர்கள் இதைப்போன்று பாதிக்கப்பட்டவர்களுடன் புறம்பான சமூகங்களில் வாழ்வார்கள், மேலும் தொழுநோய்க்கு முன்னர் அறியப்பட்ட வாழ்க்கையை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தகைய ஓர் நபர் “சாதாரண” மக்களிடையே காணப்பட்டால், அவர்கள் வாயை மூடிக்கொண்டு, “அசுத்தமானவர்கள்! அசுத்தம்!” என்று சத்தமிட்டு மக்களை விலகி இருக்கச் சொல்ல வேண்டும். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை, விலகி இருக்கச் சொல்லும் உணர்ச்சித் தனிமையை கற்பனை செய்து பாருங்கள்.

இயேசு குஷ்டரோகியைத் தொட்டு சுகப்படுத்தியதால், அன்றைய ஒவ்வொரு சமூக மற்றும் மதத்தடைகளையும் அவர் மீறினார், அவை எந்த ஓர் குஷ்டரோகிக்கு அதற்கு முன்னே செய்யப்படவில்லை.

தொழு நோயாளிகள் அவர்களின் நாட்களில் வெளியேற்றப்பட்டவர்களாக தள்ளுண்ட உலகில் விழுந்து போன மக்களால் உடைக்கப்பட்டவர்களாய் இருந்தனர். அவர்கள் தனிமை, துக்கம், அவமானம் மற்றும் வேதனையுடன் வாழ்ந்தனர்.

இவை அனைத்தும்தான் ஓர் குஷ்டரோகியுடன் இயேசுவின் அசாதாரண சந்திப்பிற்கான பின்னணியை வழங்குகிறது. மத்தேயு அந்தக் காட்சியை விவரித்தார்:

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: “ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றான்.

இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: “எனக்குச்சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். இயேசு அவனை நோக்கி: “இதை நீ ஒருவருக்கும்சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து” என்றார். (மத்தேயு 8:2-4)

இரண்டு விஷயங்கள் தனித்து நிற்கின்றன: முதலில், குஷ்டரோகியின் தைரியம். அவர் இயேசுவை நோக்கிச் செல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, அதே சமயம் மக்கள் கூட்டம் செங்கடலைப் போல் பிரிந்து சென்றது. அவர் இரட்சகரிடம் கொண்டிருந்த நம்பிக்கை, கிறிஸ்து தன்னை சுகப்படுத்த வல்லவர் என்ற நிச்சயம் ஓர் சக்தி வாய்ந்த உந்துதலாக இருந்தது.

இரண்டாவது விஷயம் -கிறிஸ்துவின் இரக்கம் இருந்த போதிலும், இரக்கம் என்ற வார்த்தை அப்பகுதியின் உரையில் பயன்படுத்தப்படவில்லை. இயேசு இந்த மனிதனை பற்பல வழிகளில் குணப்படுத்தியிருக்கலாம். சிந்தனையினாலோ, ஓர் வார்த்தையினாலோ, சைகையினாலோ அல்லது தலையசைப்பதினாலோ அல்லது யோர்தான் நதிக்கரையிலிருந்து தன்னைத் தானே சேற்றால் மூடிக்கொண்டு, பிறகு வேறொரு இடத்தில் கழுவிவிடச் சொல்லி அவனைக் குணப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. குஷ்டரோகியைத் தொட்டு குணப்படுத்தியதால், அன்றைய ஒவ்வொரு சமூக மற்றும் மதத்தடைகளையும் இயேசு மீறினார், அவை எந்த ஓர்குஷ்டரோகிக்கு அதற்கு முன்னே செய்யப்படவில்லை.

உடைக்கப்பட்ட வாழ்க்கையில் இயேசு பிரதிபலிக்கிறார், ஏனென்றால் அவர் தனது பரத்தின் முழுமையை நமது உடைந்த நிலையில் செயல்படுத்த ஆயத்தமாய் இருக்கிறார். தேவன் நம்மை மேம்படுத்த அழைப்பதற்குப் பதிலாக, நமது உடைக்கப்பட்ட நிலைக்கு அவர் வந்தார்.

பல ஆண்டுகளாக எந்த மனித தொடுதலையும் உணராத ஒருவருக்கு, இயேசுவின் இரக்கமுள்ள தொடுதல் அவரது நோயுற்ற உடலைக் குணப்படுத்தியதைப் போலவே இதயத்தைக் குணப்படுத்துவதற்கும் பங்களித்திருக்கும். மிகவும் உடைக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை இயேசு எந்த அளவிற்கு உயர்த்த வாஞ்சையாய் இருந்தார் என்பதை பார்ப்பது மிக வலிமையானது.

ஆனால் ஏன்? உடைந்த உலகத்தில் செயல்பட இயேசு ஏன் இவ்வளவு தூரம் பிரயாசப்பட்டார்? புதிய ஏற்பாட்டில் எபிரேயருக்கு எழுதிய கடிதத்தில் அதற்கான பதிலைக் காணலாம். அங்கு நாம் படிக்கிறோம்:

நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:15-16)

இயேசு வாழ்க்கையை அதன் மிகவும் சவாலான நிலைகளில் அனுபவித்தார். அவர் இதை ஓர்பகுதியாகவே செய்தார், அதனால் நாம் நம்முடைய சொந்த போராட்டங்களால் உடைந்து, உதவிக்காக அவரிடம் திரும்பும்போது, நாம் பெறும் ஆறுதலின் ஒரு பகுதி – அவர் புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது. ஏனென்றால் உடைந்த மக்களுக்கு தேவையின் கட்டத்தில் ஈடுபாடு, அனுபவம் மற்றும் அரவணைப்பு என்று அவர் மனித வாழ்க்கையில் தன்னை விருப்பத்துடன் ஈடுபடுத்தினார்.

உடைக்கப்பட்ட வாழ்க்கையில் இயேசு பிரதிபலிக்கிறார், ஏனென்றால் அவர் தனது பரத்தின் முழுமையை நமது உடைந்த நிலையில் செயல்படுத்த ஆயத்தமாய் இருக்கிறார். தேவன் நம்மை மேம்படுத்த அழைப்பதற்குப் பதிலாக, நமது உடைக்கப்பட்ட நிலைக்கு அவர் வந்தார்.

banner image

ர் பெரிய ‘ஸ்டிக்கர்’இல் குறிப்பிடப்பட்டிருந்தது, “கயிற்றின் முனைக்கு நீங்கள் வந்ததும், ஓர் முடிச்சைக் கட்டி தொங்கவிடுங்கள்.” இவை மிகவும் புத்திசாலித்தனமான அறிவுரை போல் தெரிகிறது-உங்கள் கயிறு கட்டப்பட்டிருக்கும் உத்திரம் கீழே விழும் வரை. சில சமயங்களில் வாழ்க்கை மிகப்பெரிய கட்டத்திற்குள்ளாக்கிவிடும். நம் குடும்பங்களில் ஏற்படும் துயரச் சூழ்நிலைகளினால் பாதிக்கப்படும்போது, அதன் மனவேதனையையும் வலியையும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. இவை நம்மை தள்ளுண்ட உலகில் வாழ்க்கையைச் செயல்படுத்துவது பற்றிய புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்குள்ளாக வழிநடத்துகிறது.

ஆயினும்கூட, நாம் பேரழிவின் விளிம்பில் இல்லாவிட்டால், தன்னம்பிக்கையை விடுதலையோடு வெளிப்படுத்தும் வகையில் நாம் வாழ முனைவோம். நம்முடைய சொந்த ஊக்குவிப்புகளால் நம்மை நாமே முன்னெடுத்துச் சென்று, நமது சுயவிருப்பத்தின் பலத்தால் நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவை ஆழமான மற்றும் பரிதாபகரமான சுய ஏமாற்றுத்தனம். “நான் அதனை என் வழியில் செயல்படுத்தினேன்” என்று நாம் கூறலாம், ஆனால் நமது சுயதகுதியை நம்பியிருக்கும் போது நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதே உண்மை.

கொரிந்து நகரத்திலுள்ள ஒரு சுய-திருப்தியான (self satisfied) சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்:

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்! (1 கொரிந்தியர் 10:12)

வாழ்க்கையின் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நாம் கூறுவது ‘போதுமான அளவு நம்மிடம் இல்லை’ என்பதை அப்போஸ்தலன் புரிந்துகொண்டார். இவ்வுலக பிரச்சனைகளின் வலியை மேற்கொள்வதற்குத் தேவையான ஞானம், வலிமை மற்றும் நீதியின் பற்றாக்குறையை எந்த விதமான எதிர்வினைகளும் ஈடுசெய்ய முடியாது.

ஒருவேளை இதனால்தான் பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை சரிசெய்ய போராடுகிறார்கள். ஆடுகளத்தில், எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கும், அனைத்தும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். யாவும் சமாளிக்கக்கூடியதே. ஆனால் ஓய்வு பெறும்போது, வாழ்க்கை வேறு ஓர் அரங்கிற்கு மாறுகிறது – அவர்களின் தடகள வீரத்தின் மதிப்பு குறைவாக இருக்கும்.

விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை “மாயையான” உலகில் வாழும்போது, அவர்களின் திறன்கள் ஓர் குறிப்பிட்ட வகையான கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் ஓர் வகையான நம்பிக்கையை வளர்க்க முடியும், அவை உண்மையில் ஒரு மாயையே. அவர்கள் ஓய்வு பெற்றவுடன், அவர்களின் வாழ்க்கையில் சமநிலையைக் கொடுத்த விஷயங்கள் அனைத்தும் சூறாவளியில் ஓர் கந்தல் பொம்மைபோல் தூக்கி எறியப்பட்டு விடும்.

அத்தகைய விளையாட்டு வீரர்களை நம் அனைவருக்கும் அடையாளமாக கருதுகிறோம். நம் சுயபலத்திலும் ஞானத்திலும் வாழ்க்கையை நிர்வகிக்க நாம் தயாராக இல்லை.

கிறிஸ்து தாம் உருவாக்கிய மக்களால் வெளிப்படுத்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான தன்னிறைவுக்கு வியத்தகு முறையில் பதிலளித்தார்.

இயேசுவின் நாட்களில், தன்னிறைவை நோக்கிய இந்தப்பார்வை மத செயல்பாடுகளோடு ஒத்திந்திருந்தது – மேலும் மதக்கோட்பாடுகள் எருசலேம் நகரத்துடன் ஒத்திருந்தது. இயேசு அந்த நகரத்தைப் பார்த்த ஓர்சமயத்தைக் குறித்து லூக்கா விவரிக்கிறார்:

அவர் [இயேசு] சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. (லூக்கா 19:41–42)

அவர் ஏன் அழுதார்? ஒருவேளை அவர் நகரத்திற்குள் பிரவேசத்த நாட்களுக்கு பின் காணப்பட்டவைகள் அவரது வருத்தத்திற்கான காரணத்தின் ஓர் பகுதியாக இருக்கலாம். இயேசு தேவாலயத்தில் போதித்த போது, இஸ்ரவேலின் மதத் தலைவர்கள் பெருமை மற்றும் ஆணவம் என்று குற்றம் சாட்டினார் – சாராம்சத்தில், அவை மத தன்னிறைவு. இவை அவர்களை மட்டுமல்ல, ஆன்மீக வழிகாட்டுதலுக்காக அத்தகையவர்களை நோக்கிய அனைவரையும் நிலை குலையச் செய்யும் ஓர் வீழ்ச்சியாகும்.

இருப்பினும், இறுதியில், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்குள் கோபத்தை அல்ல, மனவேதனையே ஏற்படுத்தியது:

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. (மத்தேயு 23:37)

தங்களுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பிளவு படுத்தும் ஆழமான ஏதோ ஒன்று ஜனங்களுக்குள் இருந்ததை அந்த இறுதி வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன: “உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று!” இங்கே, விழுந்தபோன மனிதர்களின் தன்னிறைவு மற்றும் அதன் கடுமையான விளைவுகளைப் பற்றி, எல்லாவற்றிலும் நிறைவான கிறிஸ்துவாகிய பரிசுத்த தேவன் அங்கலாய்க்கிறார். அந்த முறிவுகளை எருசலேமின் வாயில்களில் அவரது முகத்தின்ரேகைகள் வெளிப்படுத்துகிறது- உடைப்பட்ட தேவ இதயத்தின் கண்ணீர்.

இப்படிப்பட்ட கடவுளை சந்திக்க மக்கள் தயாராக இல்லை. இன்றும்கூட, கிறிஸ்துவைப் பற்றிய இந்தக் கதைகள் நம் தேவனைப் பற்றிய எண்ணோட்டத்தின் ஓர் பகுதியாக இருப்பதால், மனம் உடைக்கப்பட்ட தேவன் என்ற கருத்தை உண்மையில் புரிந்து கொள்வது கடினம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்-தேவனுடைய குமாரனும் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருமான–அவர், தனது அன்பிற்குப் பாத்திரர்களான ஆண்களும் பெண்களும் தன்மீது நம்பிக்கையற்று அவரை நிராகரிக்கும் வகையில் செயல்பட்ட போது, துக்கத்தில் மிகவும் நொருக்கப்பட்ட உணர்வை அனுபவித்தார், இன்றும் அனுபவிக்கிறார். இவை ஓர் வலிமையான மாறுபாடு.

banner image

வேதாகமக்கல்லூரியில் படிக்கும்போது, எங்கள் போதகர் அடிக்கடி சொல்வார், “ஓர் நல்ல ஆப்பிள் கெட்ட ஆப்பிளை நல்லதாக்காது. அவை எப்போதும் நேர்மாறானது”. அவர் ஒருவித தாக்கத்தைக் குறித்து பேசினார், குறிப்பாக ஊழலால் ஏற்படும் தாக்கம். நம்மில் பெரும்பாலானோரின் கூற்று, அவர் கூறியவை சரியானது என்பதே. தூய்மையானது அசுத்தமானவைகளை சுத்தம் செய்யாது, மாறாக கறைபட்டது அதனுடன் தொடர்பில் உள்ள அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்

இருப்பினும், கிறிஸ்துவில் நாம் இதனை எதிர்மறையாக காணலாம். ஆவிக்குரிய “சுத்தமில்லாத ஆப்பிள்கள்” என்று கருதப்பட்டவர்களுடனான தொடர்புகளால் இயேசு கறைபடவில்லை. மாறாக, மனித வீழ்ச்சியின் தன்மையைக் குறிக்கும் ஊழலாகிய பாவத்திலிருந்து சுத்திகரித்து அவர்களை மீட்பதே அவரது பிரதான பணியாக இருந்தது.

இவைதான், மதத் தலைவர்கள் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியாமல் போராடிய ஒன்று. அவர்கள் தனிப்பட்ட மற்றும் சடங்காச்சாரமான வெளிப்புறதூய்மையின் தோற்றத்தைப் பராமரிக்க கடினமாக முயற்சித்தனர், மேலும் அந்த முயற்சியின் குறிப்பிடத்தக்க பகுதி “பாவிகளுடன்” அனைத்துவித தொடர்புகளிலிருந்தும் சற்று விலகியிருப்பதாகும்.

இதற்கு நேர்மாறாக, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த “பாவிகளான” ஜனங்களுடன் இணைந்து கொள்ளும்வாய்ப்பை இயேசு வரவேற்பதாகத் தோன்றியது. குறிப்பு:

பின்பு அவர் (மத்தேயு) வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும்பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: “உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று” கேட்டார்கள். இயேசு அதைக் கேட்டு:…..”‘பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’என்பதின் கருத்து இன்னதென்று போய்க்கற்றுக் கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்றார். (மத்தேயு 9:10-13)

இயேசுவின் நாட்களிலிருந்த மதத்தலைவர்களுக்கு, பாவி என்று தெரிந்த ஒருவருடன் பரிசுத்த தேவன் சாதாரணமாக இணைந்து செயல்படுவார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆயினும்கூட, உண்மையில், கிறிஸ்துவின் முழுமையான நீதிதான் இத்தகைய செயல்பாடுகளை சாத்தியமாக்கியது. அவருடைய தூய்மையான உள்ளார்ந்த பரிசுத்தத்தின் காரணமாக, இயேசு அவர் சந்தித்த மக்களின் பாவத்தால் கறைபடுவதற்கு அப்பாற்பட்டவரானார். மாறாக, அவர் வேண்டுமென்றே தமது கரத்தால் தொட்டு, அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்டெடுத்து, தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராய் அவர்களை வழிநடத்தினார் .

இதன் விளைவாக, பாவமுள்ள மக்களுடனான இயேசுவின் செயல்பாடுகள் கண்டனத்திற்குப் பதிலாக இரக்கத்தால் வகைப்படுத்தப்பட்டன. அவர் அவர்களிடமிருந்து விலகியிருப்பதற்குப் பதிலாக அவர்களை நெருங்கி வந்தார்.

மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: “போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர்” என்றார்கள். அவர் மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.

இயேசுவோ குனிந்து, விரலினால்தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: ”உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ”ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?” என்றார்.

அதற்கு அவள்: “இல்லை, ஆண்டவரே”, என்றாள். இயேசு அவளை நோக்கி: “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார். (யோவான் 8:2-11)

மதத் தலைவர்கள் இந்த ஸ்திரீயைப் பயன்படுத்தி இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றனர். அந்தப் பெண் முக்கியத்துவமற்றவளாகவும் எத்தகைய காரியங்களையும் செய்யக்கூடிய ஓர் கருவியாக செயல்பட்டாள். இயேசுவுக்கு ஓர் சங்கடத்தை உருவாக்க அவர்கள் அவளைப்பயன்படுத்தினர். விபச்சாரம் செய்பவர்கள் மரணத்திற்கு தகுதியானவர்கள் என்று மோசேயுடன் அவர் ஒப்புக்கொள்வாரா? அப்படியானால், ரோமானிய ஆக்கிரமிப்பு சட்டங்களை மீறும் ஓர் யூதனாக மரண தண்டனைக்கு அவரை ஒப்புவிக்க வேண்டும். மதத் தலைவர்கள் இயேசு கூறப்போகும் எந்த பதிலாலும் அவரை குற்றப்படுத்திவிடலாம் என்று நினைத்தார்கள்.

இயேசு அவளுடைய பாவத்தைக் குற்றப்படுத்தாமல் அவர்களுடைய பிரதான நோக்கத்தை வெளியரங்கமாக்கினார். அவருடைய இரக்கம் அவளை ஜனக்கூட்டத்தின் கற்களில் இருந்து மீட்டதைவிட அதிகம் ஈர்த்தது. இந்தக்குற்றப்படுத்தப்படாத சூழ்நிலயைப் பயன்படுத்தி பாவத்திலிருந்து விடுபட்டு, அவளை நேசிக்கும் மெய்யான தேவனின் சிறந்த வழிகளை பின்பற்றுமாறு இயேசு வலியுறுத்தினார்.

banner image

காடமி விருது பெற்ற ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படத்தில் படுகொலை பயங்கரங்கள் மற்றும் தீமைகளை பார்வையாளர்கள் எதிர்கொண்டனர். இந்த செயல்பாட்டில், ஏதோ ஒன்று முரண்பாடாக இருந்ததாக ஆஸ்கர் ஹிண்ட்லரின் உண்மைக் கதை சொல்கிறது. அவர் ஓர் போர் ஆதாயக்காரர் மற்றும் நாஜி கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும், 1,100 யூதர்களை மரணப்பிடிகளிலிருந்து காப்பாற்றினார், அவர்களின் வாழ்க்கையை பெரும் தனிப்பட்ட செலவில் மீட்டெடுத்தார்.

ஷிண்ட்லரின் யூத கணக்காளரான இட்சாக்ஸ்டெர்ன், ஷிண்ட்லரின் மீட்புக்கான கைதிகளின் பட்டியலைத் தொகுக்கும் போது கதையின் முக்கிய தருணம் வருகிறது. ஹிண்ட்லர் தனது லாபத்தில் வாங்கிய நாஜி கட்சியில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் பெயர்கள், பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியலில் உள்ளது என்பதை திடீரென்று ஸ்டெர்ன் உணர்ந்தார். ஸ்டெர்னின் கருத்து? “பட்டியல் முற்றிலும் அருமையாக உள்ளது. இதுதான் வாழ்க்கை”. இவை உண்மையாக இருந்தது, ஏனெனில் இந்த பட்டியல் அசாதாரணமான தீமையின் முகத்தில் தீவிர அன்பையும் ஆச்சரியமான இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

தேவனைப் பற்றி கிறிஸ்து நமக்குச் சொல்லும் அனைத்து ஆச்சரியமான விஷயங்களில், இதுவே பெரியதாக இருக்கலாம். தேவனைப் பற்றிய மனிதனின் எதிர்பார்ப்புகள் மற்றும் கிறிஸ்து தேவனை பிரதிநிதித்துவப் படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில், எல்லாவற்றிலும் மிகப் பெரிய வேறுபாடு கிறிஸ்துவிடம் சிலுவையில் காணப்படுகிறது.

(லூக்கா19:10) இயேசு, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார், இறுதியில் இவை சிலுவையில் நடந்தது. ஆனால் அவை நம் உள்ளான இதயத்தின் தேவைகளுக்குத் தீர்வைக் கொண்டு வரும் விதத்தில் நடந்தது. சங்கீதக்காரன் எழுதினார்: “கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்” (சங்கீதம் 85:10).

இரக்கம் மற்றும் நீதியின் சரியான சமநிலை சிலுவையில் தீர்க்கப்பட்டது . பரம இரக்கத்தால், தேவனுடைய குமாரன் நமது பங்கு ஏற்றுக்கொண்டார். நமக்காக தனது உயிரை தியாகம் செய்ததன் மூலம், நாம் யார் என்ற உண்மையிலிருந்தும், நமக்கு தகுதியான தீர்ப்பிலிருந்தும் அவர் நம்மை மீட்டார்.

கல்வாரியில், இயேசு நம்முடைய பாவத்திற்காக பலியாகி நம்மை முற்றிலும் விடுவித்திருக்கிறார், இல்லையெனில் நமது விதி என்னவாக இருந்திருக்கும்:

  • பொதுத்தன்மை,
  • வழிதவறுதல்,
  • முக்கியத்துவமின்மை,
  • போதாமை மற்றும்
  • உடைக்கப்படுதல்,
  • பாவம்.

சிலுவையில் தான் “தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணினதை” நாம் மெய்யாக காண்கிறோம் (2 கொரிந்தியர் 4:6). உண்மையான நீதியால் சமநிலைப் படுத்தப்பட்ட மெய்யான அன்பு. பரிபூரண இரக்கத்தால் சமநிலைப் படுத்தப்பட்ட மெய்யான உண்மை. இவை நம் அனைவருக்கும் மிகவும் தேவைப்படும் சிறப்பான ஆச்சரியம் மற்றும் வெகுமதி.

banner image

ர் கட்டத்தில், “இவையெல்லாம் எனக்கு எதை விளக்குகின்றது?” என்று கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த கேள்விக்கு பதிலளிக்க பின் வரும் பரிசீலனைகள் தேவை. நீங்கள் கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்றால், உங்கள் பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கு பதில் இருக்கிறது என்று அர்த்தம். நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் அவர் யார் என்பதையும், அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உங்களுக்குக் வெளிக்காட்ட தம்முடைய குமாரனைக் கொடுத்த ஓர் தேவன் இருக்கிறார். அந்த தேவன் தம்முடைய மன்னிப்பு மற்றும் அன்பின்பரிசை உங்களுக்கு வழங்குகிறார் – விசுவாசத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய பரிசு.

இருப்பினும், தேவ பிள்ளைகளுக்கான சவால் வேறுபட்டது. பிதாவை வெளிப்படுத்த இயேசு வந்தது போல், நாமும் அவ்வாறு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நமது சுயபலத்தால் இதனைச் செய்யமுடியாது, ஆனால் அவருடைய கிருபையாலும் பலத்தாலும் நம்மால் முடியும்.பவுல் கூறியது:

ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறது போல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம். (2 கொரிந்தியர் 5:20)

With ❤️ from ODB

 

banner image