Archives: நவம்பர் 2023

தேவனுடைய மீட்பு

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார். 

அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4).

பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார்.

குமாரனின் வெளிச்சத்தை பிரதிபலித்தல்

எனக்கும் என் அம்மாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பிறகு, என் வீட்டிற்கு வெளியே ஒரு சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்னை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த இடத்திற்கு நான் வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். என் கோபத்தில், நான் அவளுக்கு ஒரு குறிப்பு எழுதினேன். ஆனால் அன்பாக பதிலளிக்கும்படிக்கு தேவன் என்னை ஏவுவதை உணர்ந்த பிறகு நான் அதைத் திருத்தினேன். எனது திருத்தப்பட்ட செய்தியைப் படித்த பிறகு, அம்மா என்னை போனில் அழைத்தார். “நீ மாறிவிட்டாய்,” என்று சொன்னார். தேவன் என்னுடைய அந்த குறிப்பைப் பயன்படுத்தி, என் அம்மா இயேசுவைப் பற்றிக் கேள்விப்படவும், இறுதியில், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தார்.

மத்தேயு 5இல், இயேசு தம்முடைய சீஷர்கள் உலகத்தின் வெளிச்சம் என்று உறுதிப்படுத்துகிறார் (வச. 14). அவர், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (வச. 16) என்று சொல்லுகிறார். கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பு, பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெறுகிறோம். அவர் நம்மை மறுரூபமாக்குகிறார். அதனால் நாம் எங்கு சென்றாலும் தேவனின் மெய்யான அன்பின் பிரகாசமான சாட்சிகளாக இருக்க முடியும்.

பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம், நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல் மேலும் மேலும் மறுரூபமாகும் நம்பிக்கை மற்றும் அமைதியின் மகிழ்ச்சியான விளக்குகளாக இருக்க முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு நற்கிரியைகளும் நன்றியுடன் கூடிய ஆராதனையாக மாறும். அது மற்றவர்களை கவரக்கூடியதாகவும், துடிப்பான நம்பிக்கையை உணரக்கூடியதாகவும் அமையும். பரிசுத்த ஆவியானவரிடம் சரணடைந்தால், குமாரனாகிய இயேசுவின் ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் பிதாவை நாம் கனப்படுத்தக்கூடும். 

ஓர் மதச்சார்பற்ற கலாச்சாரத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை

னைத்து தலைமுறையினரும் காலத்தால் அழியாத தன்மையை உடைய பரிசுத்த வேதாகமத்தைக் கவனிக்க வேண்டும். சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட தானியேலின் வாழ்க்கைக்கூட எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் நம் சிந்தனைக்கு உணவாக மாறமுடியும்.

    பரிசுத்த வேதாகம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் நம் வாழ்வையே அவை மறுரூபப்படுத்துவதாயிருக்கிறது. வேதாகமத்தின் ஒவ்வொரு அதிகாரமும் கடவுளைப் பற்றியும் நம்மைப்பற்றியும் கூறுவதோடு அவா் செய்துவரும் கிரியைகளோடு நாம் இனைந்து செயல்பட வேண்டிய வழியைக் காண்பிக்கிறது.

    இதுவே வானொலி வேதாகமப் பாடத் திருச்சபை ஊழியத்தின் இயக்குநர் பில் கிரவடரின் தீர்க்கமான…

இன்றைய வேதவாசிப்பு

நான் சமீபத்தில் கீரிஸில் இருக்கும் ஏதென்ஸ்க்கு சென்றிருந்தேன். அதில் தத்துவவாதிகள் கற்பித்த மற்றும் ஏதெனியர்கள் வழிபட்ட சந்தை வழியாய் நாங்கள் நடந்துசென்றபோது, அப்போலோ மற்றும் ஜீயஸ் தெய்வங்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பலிபீடங்களைக் கண்டேன். இவை அனைத்தும் ஒரு காலத்தில் அதீனா தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டிருந்த அக்ரோபோலிஸின் நிழலில் இருந்தன.

நாம் இன்று அப்போலோ அல்லது ஜீயஸ் போன்ற விக்கிரகங்களை வணங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆன்மீக உணர்வுகள் இன்னும் குறையவில்லை. “எல்லோரும் ஆராதிக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் கூறுகிறார். மேலும், “நீங்கள் பணத்தையும் பொருட்களையும் வணங்கினால்... அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது... உங்கள் உடலையும் அழகையும் வணங்குங்கள்... அது உங்களை அசிங்கமாக உணரச்செய்யும்... உங்கள் புத்தியை வணங்குங்கள்... நீங்கள் முட்டாள்தனமாய் உணருவீர்கள்” என்றும் சொல்லுகிறார். நம்முடைய காலகட்டத்தில் அநேக கடவுள்கள் உள்ளனர். அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று சொல்லமுடியாது. 

பவுல் சந்தைவழியாய் கடந்துவந்தபோது, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்று கூறுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலம் (வச. 31) மக்களுக்கு தன்னை அறியச்செய்யும் தேவன் (வச. 27) உலகத்தின் அனைத்தையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தருமான (வச. 24-26) ஒரே தேவனைக் குறித்து பவுல் அவர்களுக்கு விவரிக்கிறார். அப்போலோ மற்றும் ஜீயஸ் போல இந்த கடவுள் மனித கைகளால் உருவாக்கப்படவில்லை. பணம், தோற்றம் அல்லது புத்திசாலித்தனம் நம்மை அழிப்பதுபோல அவரை ஆராதிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. 

நமக்கு நோக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்க நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதுவே நமது “கடவுள்.” அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு பூமிக்குரிய கடவுளும் நம்மைத் தோல்வியடையச் செய்யும் போது, ஒரே உண்மையான தேவனை கண்டறிதல் சாத்தியம் (வச. 27).

இயேசுவைப் பின்பற்றுவது மதிப்பு

ரோனிட் ஒரு ஆன்மீக குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் கிறிஸ்தவர் அல்ல. ஆன்மீக விஷயங்களைப் பற்றிய அவர்களின் விவாதங்கள் வறண்டதாகவும் கல்விசார்ந்ததாகவும் இருந்தன. “நான் எல்லா பிரார்த்தனைகளையும் தொடர்ந்து ஜெபித்தேன், ஆனால் நான் கடவுளிடமிருந்து எந்த சத்தத்தையும் கேட்டதில்லை" என்று அவர் கூறினாள்.

அவள் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தாள். மெதுவாக, சீராக, அவள் இயேசுவை மேசியா என்று நம்பினாள். அந்த தருணத்தை, “என் இதயத்தில் ஒரு தெளிவான குரல் கேட்டது – ‘நீ கேட்டது போதும்; நீ பார்த்தது போதும; நம்ப வேண்டிய நேரம் இது’” என்று ரோனிட் விவரிக்கிறார். ஆனால் ரோனிட் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அது அவளுடைய தந்தையின் எதிர்ப்பு. “ஒரு மலை வெடித்தது போல் என் அப்பா பதிலளித்தார்," என்று அந்த நிகழ்வை அவள் நினைவு கூர்ந்தாள்.

இயேசு இந்த உலகத்தில் நடந்துவந்துபோது, ஜனத்திரள் அவளை பின்பற்றியது (லூக்கா 14:25). அவர்கள் எதை எதிர்பார்த்து அவரை பின்பற்றினார்கள் என்பது தெரியாது, ஆனால் அவர் சீஷர்களை தேடினார். ஆனால் அது கிரயம் செலுத்தப்படவேண்டியது. இயேசு சொல்லும்போது, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 26) என்று சொல்லுகிறார். அவர் கோபுரம் கட்டும் ஒரு உவமையைச் சொல்லுகிறார். “அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு... கணக்குப் பாராமலிருப்பானோ?” (வச. 28) என்று கேட்கிறார். நாம் உண்மையில் குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்பது இயேசுவின் கருத்து அல்ல; மாறாக, எல்லாவற்றிலும் நாம் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 33) என்று வலியுறுத்துகிறார். 

ரோனிட் தனது குடும்பத்தை ஆழமாக நேசிக்கிறார், ஆனால் “எவ்வளவு விலையானாலும், அது மதிப்புக்குரியது என்று நான் நினைத்தேன்” என்று சொல்லுகிறாள். இயேசு உங்களை வழிநடத்தும்போது அவரைப் பின்பற்ற நீங்கள் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?