எனக்கும் என் அம்மாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பிறகு, என் வீட்டிற்கு வெளியே ஒரு சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்னை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த இடத்திற்கு நான் வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். என் கோபத்தில், நான் அவளுக்கு ஒரு குறிப்பு எழுதினேன். ஆனால் அன்பாக பதிலளிக்கும்படிக்கு தேவன் என்னை ஏவுவதை உணர்ந்த பிறகு நான் அதைத் திருத்தினேன். எனது திருத்தப்பட்ட செய்தியைப் படித்த பிறகு, அம்மா என்னை போனில் அழைத்தார். “நீ மாறிவிட்டாய்,” என்று சொன்னார். தேவன் என்னுடைய அந்த குறிப்பைப் பயன்படுத்தி, என் அம்மா இயேசுவைப் பற்றிக் கேள்விப்படவும், இறுதியில், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தார்.

மத்தேயு 5இல், இயேசு தம்முடைய சீஷர்கள் உலகத்தின் வெளிச்சம் என்று உறுதிப்படுத்துகிறார் (வச. 14). அவர், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (வச. 16) என்று சொல்லுகிறார். கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பு, பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெறுகிறோம். அவர் நம்மை மறுரூபமாக்குகிறார். அதனால் நாம் எங்கு சென்றாலும் தேவனின் மெய்யான அன்பின் பிரகாசமான சாட்சிகளாக இருக்க முடியும்.

பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம், நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல் மேலும் மேலும் மறுரூபமாகும் நம்பிக்கை மற்றும் அமைதியின் மகிழ்ச்சியான விளக்குகளாக இருக்க முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு நற்கிரியைகளும் நன்றியுடன் கூடிய ஆராதனையாக மாறும். அது மற்றவர்களை கவரக்கூடியதாகவும், துடிப்பான நம்பிக்கையை உணரக்கூடியதாகவும் அமையும். பரிசுத்த ஆவியானவரிடம் சரணடைந்தால், குமாரனாகிய இயேசுவின் ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் பிதாவை நாம் கனப்படுத்தக்கூடும்.