நான் சமீபத்தில் கீரிஸில் இருக்கும் ஏதென்ஸ்க்கு சென்றிருந்தேன். அதில் தத்துவவாதிகள் கற்பித்த மற்றும் ஏதெனியர்கள் வழியாய் நடந்து சென்றபோது, அப்போலோ மற்றும் ஜீயஸ் தெய்வங்களுக்கென்று கட்டப்பட்டிருந்த பலிபீடங்களைக் கண்டேன். இவை அனைத்தும் ஒரு காலத்தில் அதீனா தெய்வத்தின் சிலை நிறுவப்பட்டிருந்த அக்ரோபோலிஸின் நிழலில் இருந்தன.

நாம் இன்று அப்போலோ அல்லது ஜீயஸ் போன்ற விக்கிரகங்களை வணங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆன்மீக உணர்வுகள் இன்னும் குறையவில்லை. “எல்லோரும் ஆராதிக்கிறார்கள்” என்று நாவலாசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் கூறுகிறார். மேலும், “நீங்கள் பணத்தையும் பொருட்களையும் வணங்கினால்… அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது… உங்கள் உடலையும் அழகையும் வணங்குங்கள்… அது உங்களை அசிங்கமாக உணரச்செய்யும்… உங்கள் புத்தியை வணங்குங்கள்… நீங்கள் முட்டாள்தனமாய் உணருவீர்கள்” என்றும் சொல்லுகிறார். நம்முடைய காலகட்டத்தில் அநேக கடவுள்கள் உள்ளனர். அவர்கள் ஆபத்தற்றவர்கள் என்று சொல்லமுடியாது. 

பவுல் சந்தைவழியாய் கடந்துவந்தபோது, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்று கூறுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் மூலம் (வச. 31) மக்களுக்கு தன்னை அறியச்செய்யும் தேவன் (வச. 27) உலகத்தின் அனைத்தையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தருமான (வச. 24-26) ஒரே தேவனைக் குறித்து பவுல் அவர்களுக்கு விவரிக்கிறார். அப்போலோ மற்றும் ஜீயஸ் போல இந்த கடவுள் மனித கைகளால் உருவாக்கப்படவில்லை. பணம், தோற்றம் அல்லது புத்திசாலித்தனம் நம்மை அழிப்பதுபோல அவரை ஆராதிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. 

நமக்கு நோக்கத்தையும் பாதுகாப்பையும் வழங்க நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதுவே நமது “கடவுள்.” அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு பூமிக்குரிய கடவுளும் நம்மைத் தோல்வியடையச் செய்யும் போது, ஒரே உண்மையான தேவனை கண்டறிதல் சாத்தியம் (வச. 27).