ரோனிட் ஒரு ஆவிக்குரிய குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் கிறிஸ்தவர் அல்ல. ஆன்மீக விஷயங்களைப் பற்றிய அவர்களின் விவாதங்கள் வறண்டதாகவும் கல்விசார்ந்ததாகவும் இருந்தன. “நான் எல்லா பிரார்த்தனைகளையும் தொடர்ந்து ஜெபித்தேன், ஆனால் தேவனை பின்பற்றுவது என்பது விலைமதிப்பற்றது மற்றும் மதிப்பிற்குரியது என்று நினைக்கிறேன் எனக் கூறுவாள்.

அவள் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தாள். மெதுவாக, சீராக, அவள் இயேசுவை மேசியா என்று நம்பினாள். அந்த தருணத்தை, “என் இதயத்தில் ஒரு தெளிவான குரல் கேட்டது – ‘நீ கேட்டது போதும்; நீ பார்த்தது போதும; நம்ப வேண்டிய நேரம் இது’” என்று ரோனிட் விவரிக்கிறார். ஆனால் ரோனிட் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அது அவளுடைய தந்தையின் எதிர்ப்பு. “ஒரு மலை வெடித்தது போல் என் அப்பா பதிலளித்தார்,” என்று அந்த நிகழ்வை அவள் நினைவு கூர்ந்தாள்.

இயேசு இந்த உலகத்தில் நடந்துவந்துபோது, ஜனத்திரள் அவளை பின்பற்றியது (லூக்கா 14:25). அவர்கள் எதை எதிர்பார்த்து அவரை பின்பற்றினார்கள் என்பது தெரியாது, ஆனால் அவர் சீஷர்களை தேடினார். ஆனால் அது கிரயம் செலுத்தப்படவேண்டியது. இயேசு சொல்லும்போது, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 26) என்று சொல்லுகிறார். அவர் கோபுரம் கட்டும் ஒரு உவமையைச் சொல்லுகிறார். “அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு… கணக்குப் பாராமலிருப்பானோ?” (வச. 28) என்று கேட்கிறார். நாம் உண்மையில் குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்பது இயேசுவின் கருத்து அல்ல; மாறாக, எல்லாவற்றிலும் நாம் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 33) என்று வலியுறுத்துகிறார். 

ரோனிட் தனது குடும்பத்தை ஆழமாக நேசிக்கிறார், ஆனால் “எவ்வளவு விலையானாலும், அது மதிப்புக்குரியது என்று நான் நினைத்தேன்” என்று சொல்லுகிறாள். இயேசு உங்களை வழிநடத்தும்போது அவரைப் பின்பற்ற நீங்கள் எதை விட்டுக் கொடுக்கப் போகிறீர்கள்?