ஹோட்டல் கொரோனா
எருசலேமிலுள்ள டான் ஹோட்டல், 2020ல் ஹோட்டல் கொரோனா என்ற வேறு பெயரில் அறியப்பட்டது. கோவிட்-19 லிருந்து மீண்டுவரும் நோயாளிகளுக்கு இது சமர்ப்பிக்கப்பட்டு, இப்படி ஒரு கடினமான நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொடுக்கக்கூடிய ஒரு அபூர்வ இடமாக இந்த ஹோட்டல் இருந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், அவர்கள் எல்லோரும் ஒன்றாக பாடி, நடனமாடி, மகிழ சுதந்திரமாக விடப்பட்டனர். அவர்களும் அதைச் செய்தனர்! வெவ்வேறு அரசியல் மற்றும் ஆன்மீகக் குழுக்களுக்கிடையே பதட்டங்கள் அதிகமாகக் காணப்படும் ஒரு நாட்டில், மக்கள் முதலாவதாக, ஒருவரையொருவர் மனிதனாகப் பார்த்து நண்பர்களாய் பழக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தளமாக இப்படிப்பட்ட நெருக்கடி உருவாக்கியது.
நம்மைப் போலவே அனுபவமும் மதிப்பும் உள்ள மக்களிடம் நாம் ஈர்க்கப்படுவது இயற்கையானது, இயல்பானதும் கூட. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வலியுறுத்தியது போல, மனிதர்களுக்கிடையே ஏற்படும், நாம் இயல்பானது என்று பார்க்கும், ஏதாவது தடுப்புச்சுவர்களிடையே, சுவிசேஷம், ஒரு சவாலானது. 2 கொரிந்தியர் 5:15. சுவிசேஷம் என்னும் கண்ணாடி மூலம், நம்முடைய வேறுபாடுகளை விட, பகிர்ந்துக் கொள்ளப்பட்ட முறிவு மற்றும் ஏக்கம், குணமடைவதற்கு தேவனுடைய அன்பு தேவை என்ற பெரிய விஷயங்களைப் பார்க்கிறோம்.
“எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்” என்று நாம் விசுவாசித்தால், மற்றவர்களைப் பற்றிய மேலோட்டமான அனுமானங்களைக் குறித்து நாம் மனநிறைவடையவும் முடியாது. மாறாக, அவருடைய அன்பையும், அவர் மேற்கொண்ட பணியையும், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, தேவன் நேசிப்பவர்களுடன், (நாம் அனைவரையும்), பகிரவும், “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14).
மூச்சை இறுக்கிப் பிடித்தல்
எங்கள் அறையின் மூலையில் இருந்த அந்த சிறிய பஞ்சு பொதிந்த நாற்காலியில் அமர்ந்து அவர் சுவாசிப்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். வாழவும், சாகவும் ஒரே நேரத்தில் அவர் போராடிக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திருமண தம்பதியினரின் மூச்சும், இதய துடிப்பின் நாதங்களும் கூட ஒன்றிவிடுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு இது புரியாது ஆனால் இது உண்மையென்று உங்களுக்கும் எனக்கும் தான் தெரியும். சுவாசத்தை உள்ளிழுத்து, வெளியேற்றும் இடைவெளி, நீண்டு இனி இடைவெளியே இல்லை என்றானது. இனியும் வெளியேற எந்த சுவாசமும் இல்லையென்றபோது, நீண்ட காத்திருப்புக்கு முடிவும் வந்தது.…
துக்கத்தின் பாரம்
என் பெற்றோர் துக்கத்துடன் போராடிகொண்டிருந்தது எனது ஆரம்பகால குழந்தை பருவ நினைவுகளில் ஒன்றாகும். என்னுடைய மாமா கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் எனது அத்தையையும் (தந்தையின் சகோதரி) மற்றும் மூன்று பிள்ளைகளை நிர்கதியாய் விட்டுவிட்டு மரித்துவிட்டார்.
என் பெற்றோர் அனுபவித்த அடுக்கடுக்கான துக்கங்கள் என் அறிவிற்கு அப்பாற்பட்டவை. அதில் கண்ணீர், இழப்பு, போராட்டம் ஆகியவைகள் தவறாமல் இடம்பெற்றிருந்தது. ஆனால் என் சிறிய மனதின் புரிதலுக்கு அந்த உணர்ச்சிகளையோ, அதின் வெளிப்பாடுகளையோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவே நான் முதன்முறையாக…
என்னை அனுப்பும்
1890ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனரி எரிக் லண்ட், ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, உடனடியாகக் கீழ்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும், தேவனுடைய அழைப்பில் திடநம்பிக்கையோடு தன்னுடைய மிஷினரி வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியோ மணிக்கன் என்ற பிலிப்பைன் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.
லண்ட் மற்றும் மனிக்கன், இருவரும் சேர்ந்து உள்ளுர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, பிறகு முதல் பாப்திஸ்து மிஷன் தளத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தனர். தீர்க்கதரிசியான ஏசாயாவைப் போல, லண்டும் தேவனுடைய அழைப்பிற்கு உடனடியாகக் கீழ்படிந்ததினால், அநேகர் இயேசுவிடம் திரும்பினர்.
ஏசாயா 6:8ல், நிகழ்காலத்திற்குரிய நியாயத்தீர்ப்பையும், வருங்காலத்திற்குரிய நம்பிக்கையையும் இஸ்ரவேலருக்கு அறிவிக்க விருப்பமுள்ள ஒருவரை தேவன் கேட்டபொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார். அவர், தான் “அசுத்த உதடுகளுள்ள மனிதன்”(வச. 5) என்று அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதால், அவர் தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவத்தை உணர்ந்து, தேவனுடைய சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டதாலும் (வச. 1-7), அவர் தேவனுடைய அழைப்பிற்கு மனதாரக் கீழ்படிந்தார்.
அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாக தேவன் உங்களுக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவுக் கூறுங்கள். நமக்கு உதவி செய்யவும், நம்மை வழிநடத்தவும் தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 14:26; 15:26-27). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்படிய நம்மை ஆயத்தப்படுத்துவார். ஏசாயாவைப் போல நாமும் “என்னை அனுப்பும்” என்று கூறுவோம்.
கிறிஸ்துவில் பரிபூரணம்
பிரபலமான ஒரு திரைப்படத்தில், தன்னுடைய திருமண வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு நடிகர், தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு முகவராக நடிக்கிறார். தன்னுடைய மனைவியைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவளுடைய கண்களைப் பார்த்து “நீ என்னைப் பூரணப்படுத்துகிறாய்” என்று கூறுகிறார். இது இதயத்தை நெகிழவைக்கும் நாட்டுப்புறக் கதையைப் பிரதிபலிக்கும் ஒரு செய்தி. நாம் ஒவ்வொருவரும் ஒரு “பாதி”, நாம் முழுமையடைய “மற்றொரு பாதியை” கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் காதலிக்கும் துணை நம்மை “முழுமை”யடையச் செய்கிறார் என்ற நம்பிக்கை பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது உண்மையா? தங்களுக்கு பிள்ளைகளில்லாததினால் அவர்கள் இன்னும் முழுமையடையவில்லை என்று கருதும் அநேக தம்பதிகளிடம் நான் பேசி இருக்கிறேன். தங்களுக்கு பிள்ளைகளிருந்தாலும் வேறே எதையோ தொலைத்து விட்டதாகக் கருதுகின்றனர். இறுதியாக எந்த மனிதனும் நம்மை முழுமையாக பூரணமாக்க முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு இன்னொரு தீர்வைக் கொடுக்கிறார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:9-10). தேவன் நம்மை மன்னித்து, விடுவிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஜீவனை நம்முடைய ஜீவனில் கொடுத்து நம்மை பரிபூரணப்படுத்துகிறார் (வச. 13-15).
திருமணம் நல்லது. ஆனால் அது நம்மை பரிபூரணமாக்காது. இயேசு ஒருவர் மட்டுமே அதைச் செய்யமுடியும். ஒரு நபரோ, தொழிலோ அல்லது மற்ற ஏதாவதோ நம்மை பரிபூரணமடையச்செய்யும் என்று நாம் எதிர்பார்க்காமல், தேவன், அவருடைய பரிபூரணத்தை நம்முடைய வாழ்க்கையில் அதிகமதிகமாக நிரப்ப நமக்குக் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுவோம்.
தேவனிடத்தில் பாதுகாப்பாக இருப்பது
நான் வாலிப வயதானபோது என்னைக் குறித்து நிச்சயம் இல்லாதிருந்ததையும் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும் நினைவு கூர்ந்தேன். என் பிள்ளைகள் வாலிப வயதை அடைந்ததால், நம்முடைய அடையாளத்தை குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதினேன். “நீங்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளும்போது நீங்கள் யாருக்குரியவர்” என்பதை அறிந்துக்கொள்ள வழிநடத்தும் என்று கூறினேன். தேவன் நம்மை உருவாக்கினார் என்று நாம் புரிந்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளும்போது, நாம் யாராயிருக்க நம்மைப் படைத்தாரோ அதிலே நாம் சமாதானமாய் இருக்க முடியும். நாம் அதிகமாய் அவரைப்போல மாற அவர் ஒவ்வொரு நாளும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அடையாளப்படுத்த வேதத்தில் அடித்தளமான பகுதி உபாகமம் 33:12. “கர்த்தருக்குப் பிரியமானவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;. அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.” தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு தேவன் வாக்களித்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாயிருந்தபோது, மோசே தன்னுடைய மரணத்திற்கு முன் இந்த ஆசீர்வாதத்தை பென்யமீன் கோத்திரத்தாருக்கு அறிவித்தான். அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் என்றும் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றும் அடையாளத்தினால் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளத்தை அறிந்துகொள்வது எல்லோருக்கும் - பதின்மை பருவத்தினர், வாழ்க்கையில் நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் நீண்ட வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் - மிக முக்கியமானது. தேவன் நம்மை உருவாக்கினார் என்றும் அவர் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் நாம் புரிந்துக்கொள்ளும்போது நாம் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பைக் கண்டுக்கொள்ள முடியும்.