என் பெற்றோர் துக்கத்துடன் போராடிகொண்டிருந்தது எனது ஆரம்பகால குழந்தை பருவ நினைவுகளில் ஒன்றாகும். என்னுடைய மாமா கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பதாக ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் எனது அத்தையையும் (தந்தையின் சகோதரி) மற்றும் மூன்று பிள்ளைகளை நிர்கதியாய் விட்டுவிட்டு மரித்துவிட்டார்.

என் பெற்றோர் அனுபவித்த அடுக்கடுக்கான துக்கங்கள் என் அறிவிற்கு அப்பாற்பட்டவை. அதில் கண்ணீர், இழப்பு, போராட்டம் ஆகியவைகள் தவறாமல் இடம்பெற்றிருந்தது. ஆனால் என் சிறிய மனதின் புரிதலுக்கு அந்த உணர்ச்சிகளையோ, அதின் வெளிப்பாடுகளையோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவே நான் முதன்முறையாக துக்கத்தின் பாரத்தை சந்தித்த தருணம்.

மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம். அதை உண்மை என்று நாம் ஒத்துக்கொண்டாலும், இழப்பு நேரிடும் தருணங்களில் நமக்கு உண்டாகும் துக்கம் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாயிருக்கிறது. எழுத்தாளரும் தத்துவஞானியுமான சி.எஸ். லூயிஸ் “எ கிரீஃப் அப்சர்வ்ட்” (A Grief Observed) என்ற புத்தகத்தில் இப்படியாய் எழுதுகிறார்:

நாம் துயரத்தோடே பயணிக்க வேண்டியுள்ளது; அது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு. “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்” என்று வேதம் சொல்லுகிறது. நான் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நான் பேரம் பேசாத எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு காரியம் மற்றவர்க்கு அல்லாமல் தனக்கு வந்தால் தான் அதின் கஷ்டம் உண்மையிலேயே புரியும். கற்பனையில் அல்ல, நிஜத்தில்.

திடீரென நமக்கு ஒரு துன்பம் நேரிடும் போது மிகவும் வித்தியாசமாக தோன்றுகிறது. நமக்கு சொந்தமானவர்களை மரணம் எடுத்துக்கொள்ளம்போது அது கடினமாய் இருக்கிறது. மரணம் என்பது பல விஷயங்களில் ஏற்படுகிறது: திருமணத்தில், நம் கனவில், தொழிலில் என்று எல்லாவற்றிலும் மரணம் நிகழ்கிறது. எல்லா இழப்புகளும் துக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் நாம் அதிகம் நேசிக்கும் நபரின் மரணமே மிகப்பெரிய துக்கத்தை நமக்கு ஏற்படுத்தும்.

நாம் அதிகம் நேசிப்பவரை மரணம் நம்மை விட்டு பிரிக்கும்போது, துக்கத்தின் பாரம் நம் இதயங்களை உடைக்கிறது. தேவன் எங்கே? அவர் நம்மை பார்க்கிறாரா? அவர் நம்மை பொருட்படுத்துகிறாரா? நம்முடைய இருள் சூழ்ந்த நேரங்களில் நாம் கற்பனை செய்வதை விட அவர் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். “கிரைம் அன்ட் பனிஷ்மெண்ட்” (Crime and Punishment) என்ற புத்தகத்தில் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி இப்படியாய் எழுதுகிறார்

இரவு எவ்வளவு இருண்டதாகிறதோ, நட்சத்திரங்கள் அவ்வளவு பிரகாசிக்கிறது,
துக்கம் எவ்வளவு ஆழமாயிருக்கிறதோ, தேவன் நம் பட்சத்தில் அவ்வளவு நெருங்குகிறார்.

இது நிச்சயமாய் ஒரு பிரகாசமான வாக்குறுதி. ஆனால் கர்த்தர் நம் பாரத்தைக் குறித்து கரிசனை உள்ளவரா? அதைப் பற்றி வேதம் என்ன கூறுகிறது? நாம் துக்கப்படும்போது கர்த்தர் உண்மையிலேயே நமக்கு நெருக்கமாக இருக்கிறாரா?

துக்கத்தின் ஆழம்

நாம் துயரத்தின் வழியே கடந்து செல்லும் போது, அதை முக்கியமற்றதாக எண்ணவேண்டாம் என்றே வேதம் ஊக்குவிக்கிறது. மாறாக, துக்கம் நிஜமானது என்பதையும் அதனோடு கூடிய நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் வேதாகமம் மிக நேர்மையாக எடுத்துரைக்கிறது. இதுவரை சொல்லப்பட்ட மிக பெரிய சோகக் கதைகளில் ஒன்று யோபுவின் கதை. தனது குழந்தைகளையும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் ஒரே நாளில் மொத்தமாக இழந்தார். அவரது பதில் என்ன?

என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்! (யோபு 6:2)

இஸ்ரவேலின் பெரிய ராஜா தாவீதும் துக்கத்தின் பாதைக்கு புதியவரல்ல. தாவீதைக் குறித்து “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி” என்று வேதம் குறிப்பிடுகிறது. தாவீதின் வாழ்க்கையானது சோகம், இழப்பு மற்றும் மன வேதனையால் நிறைந்திருந்தது. ஆகவே அவர் இவ்வாறு புலம்புகிறார்:

துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று” (சங்கீதம் 6:7).
மேலும்,

“எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று” (சங்கீதம் 31:9).

தேவன் ஜனங்களை மீட்ட அன்பைக் குறித்து வேதாகமம் பல வழிகளில் குறிப்பிடுகிறது. அதிலே ஆதியாகமம் 3ல் மரணம் மனித வாழ்வில் நுழைந்ததிலிருந்து ஏற்பட்ட இழப்பு, துயரம் போன்றவையும் அடங்கும். அது பதிவு செய்யப்பட்டு நினைவுகூரப்படுகிற துயரம். அது கவனிக்கப்படாமலோ பொருட்படுதப்படாமலோ இருக்கும் துயரம் அல்ல.

கர்த்தரின் கரிசனை

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவனின் குணாதிசயங்களில் ஓன்று, அவர் எல்லாம் அறிந்த சர்வ வல்லமையுள்ளவர். சர்வ வல்லமையுள்ளவர் என்று சொல்லும் போது உண்மையிலேயே பொருளுக்கு ஏற்றாற்போல் எல்லாம் அறிந்தவராக, வல்லவராகவே இருக்கிறார். எப்படியெனில் இழப்பு மற்றும் அதனால் உண்டாகும் துயரத்தினால் நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறோம், எப்படி உணர்கிறோம் என்பதையும் அறிந்த தேவனாயிருக்கிறார். உண்மையில், நாம் இழந்தவர்கள் மீதும் பெரும் மதிப்பு வைப்பதில் அவர் நம்முடன் இணைகிறார் என்பதை,

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று சங்கீதம் 116:15ல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

துயரத்தின் வேதனையான உப விளைவுகளில் ஒன்று, அது நமக்குள் ஏற்படும் ஒரு தனிமை உணர்வு. அதாவது இந்த இக்கட்டை நாம் தனித்து சகிக்கிறோம் என்னும் உணர்வை அது ஏற்படுத்துகிறது. ஆனால் அது உண்மை இல்லை. நம்முடைய இழப்பில் மாத்திரமல்ல அதனால் ஏற்படும் துயரத்திலும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நமது பாடுகளையும் அதின் பாரத்தையும் நாம் தனியாக சுமக்க தேவையில்லை.

நேரடியாய் துக்கம் என்று குறிப்பிடப்படாவிட்டாலும், வேதாகமத்தின் இரண்டு வேதப்பகுதிகள் தேவனுடைய கரிசனை குணாதியத்தை முன்வைக்கிறது:

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).
… அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7).

நம்மை தேற்றுகிறவரகவும், ஜீவனின் பெலனாகவும் (சங்கீதம் 27:1) தேவன் நமக்கு இருப்பதால் நம் பாரத்தை தனியாக சுமக்க தேவையில்லை என்ற ஆறுதலுடன் அவரை சார்ந்துகொள்ளலாம். நம்முடைய கர்த்தரின் நுகம் நம் பாரத்தை மெதுவாயும் இலகுவாயும் மாற்றுகிறது, ஏனென்றால் அவரும் நம் பாரத்தில் பங்குகொள்கிறார். துயரத்தின் பாதையிலும் தேவன் நம்மோடிருக்கிறார்.

உறுதியான பதில் 

துக்கத்திற்கும் மரணத்திற்குமான தேவனுடைய நிறைவான ஒரு பதில் சிலுவையே. மரணத்தால் துக்கம் ஏற்படுகிறது. அந்த மரணத்திற்கான ஒரே தீர்வு நித்திய ஜீவன். வேதாகமத்தின் மிகவும் பரீட்சையமான வசனத்தில், நாம் படிக்கிறோம்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).

“கெட்டுப்போகாமல்.” கிறிஸ்துவுடனான உறவின் மூலம், மரணத்திற்கு நம் மீது அதிகாரமில்லை. கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை திடமாய் நிற்கச் செய்கிறது. அதினால் மரணம் முடிவல்ல. மரணம் வாழ்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் அது முடிவாகாது.

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25).

கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. இதனால் தான் பவுல் தைரியமாக சொல்ல முடிந்தது:

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1 கொரிந்தியர் 15:55-57).

ஆம், துயரத்தின் பாரம் எப்போதுமே இழப்பு காலங்களில் உணரப்படும், ஆனால் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. மரணம் ஜெயிப்பதில்லை. துக்கம் தற்காலிகமானது. கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் ஆசீர்வாதம், மேன்மையான, முடிவில்லா நித்திய ஜீவனாகும்.
வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி சில அதிகாரங்கள் நமக்கு இழப்பை அல்ல, நம்பிக்கையைக் கொடுக்கிறது. வலியை அல்ல, ஆறுதலைக் கொடுக்கிறது. மரணத்தை அல்ல, ஜீவனைக் கொடுக்கிறது:

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது (வெளிப்படுத்தல் 21:3-4)

நம் துக்கங்களில் தேவன் நம்மோடிருக்கிறார். நம் பாடுகளில் அவருக்கு பங்கு உண்டு. கர்த்தர் தரும் பிரகாசமான நம்பிக்கை, துக்கத்தைத் தரும் எல்லா காரணிகளையும் அந்த மகிமையின் நாள் மேற்கொள்ளும். அந்த மகிமையின் நாளுக்காக காத்திருக்கிறோம்.

பில் கிரவுடர்

உன் சுவாசத்தை பிடித்தல்வாழ்க்கைத் துணையின் இழப்பிற்கு வருந்துவது

ஒருவர் தன் துணையை இழப்பது என்பது விவரிக்கமுடியாத வேதனையும், மிகவும் சிக்கலுமானது. அது பெரும்பாலும் பிறரால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆசிரியர் சூசன் வான்டேபோல், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதையை கிருபையுடனும் நுண்ணறிவுடனும் பகிர்ந்து கொள்கிறார். துக்கத்தின் விளிம்பில் நிற்கும் நபரோடு அவர் பயணித்து, அவருக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்து, மீண்டும் அவர்களை சுவாசிக்க உதவுகிறது. நேசிப்பவரின் மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள கிறிஸ்துவின் அன்பு எவ்வாறு உதவும் என்பதைக் கண்டறியுங்கள்.

 

சாம்பலிலிருந்து… – யோபுவின் படுவேதனையில் தேவனின் பிரசன்னம்

இந்த ஆய்வில், பில் கிரவுடர், உபத்திரவம் என்றால் என்ன, நமக்கு பாடுகள் நேரிடும்போது நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம், வாழ்க்கையின் இருண்ட தருணங்களுக்கு நடுவே தேவனை எவ்வாறு காணமுடியும், போன்ற கேள்விகளை ஆராய்கிறார். யோபு, ஊத்ஸ் என்ற பழைய ஊரில் வாழ்ந்தவர். வேதாகமத்தின் பழமையான புத்தகம் மனிதனின் பொதுவான பிரச்சினைகளான உபத்திரவம், வேதனை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. யோபுவின் கதை நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், தேவனைப்பற்றியும், நாம் கற்பனை செய்வதை விட