நான் வாலிப வயதானபோது என்னைக் குறித்து நிச்சயம் இல்லாதிருந்ததையும் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும் நினைவு கூர்ந்தேன். என் பிள்ளைகள் வாலிப வயதை அடைந்ததால், நம்முடைய அடையாளத்தை குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதினேன். “நீங்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளும்போது நீங்கள் யாருக்குரியவர்” என்பதை அறிந்துக்கொள்ள வழிநடத்தும் என்று கூறினேன். தேவன் நம்மை உருவாக்கினார் என்று நாம் புரிந்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற ஒப்புக்கொள்ளும்போது, நாம் யாராயிருக்க நம்மைப் படைத்தாரோ அதிலே நாம் சமாதானமாய் இருக்க முடியும். நாம் அதிகமாய் அவரைப்போல மாற அவர் ஒவ்வொரு நாளும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அடையாளப்படுத்த வேதத்தில் அடித்தளமான பகுதி உபாகமம் 33:12. “கர்த்தருக்குப் பிரியமானவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்;. அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.” தேவனுடைய பிள்ளைகள் தங்களுக்கு தேவன் வாக்களித்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாயிருந்தபோது, மோசே தன்னுடைய மரணத்திற்கு முன் இந்த ஆசீர்வாதத்தை பென்யமீன் கோத்திரத்தாருக்கு அறிவித்தான். அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் என்றும் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றும் அடையாளத்தினால் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளத்தை அறிந்துகொள்வது எல்லோருக்கும் – பதின்மை பருவத்தினர், வாழ்க்கையில் நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் நீண்ட வருடங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள் – மிக முக்கியமானது. தேவன் நம்மை உருவாக்கினார் என்றும் அவர் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் நாம் புரிந்துக்கொள்ளும்போது நாம் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பைக் கண்டுக்கொள்ள முடியும்.