இரவில் ஒரு பாடல்
சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. என்னுடைய இரண்டு இளைய பிள்ளைகள் என்னோடே இருந்தார்கள், மற்றும் இதுதான் முதல் முறை அவர்கள் மின்தடையை அனுபவிக்கிறார்கள். மின் தடைப் பற்றி மின்வாரி நிறுவனம் அறிந்திருக்கிறதா என்று சரிபார்த்த பிறகு, சில மெழுகுவர்த்திகளை ஏற்றி நானும் என் குழந்தைகளும் சமையலறையில் ஒளிர்கின்ற சுடர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். அவர்கள் பதற்றமாகவும் அமைதியற்றவர்களாகவும் தோன்றினதால் நாங்கள் பாட ஆரம்பித்தோம். விரைவில் அவர்களுடைய முகத்தில் இருந்த சோகமான தோற்றம், புன்னகையாக மாறியது. சில நேரங்களில் நம்முடைய இருண்ட தருணங்களில் நமக்கு பாடல் தேவைப்படுகிறது.
தேவனுடைய பிள்ளைகள் நாடுகடத்தப்பட்டதிலிருந்து, தரிசு நிலமாய் மாறிப்போன தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தப் போது 103ம் சங்கீதம் ஜெபமாகவோ அல்லது பாடலாகவோ ஏறெடுக்கப்பட்டது. அந்த நெருக்கடியின் தருணத்தில் அவர்கள் பாடவேண்டியிருந்தது. ஆனால் ஏதோ ஒரு பாடல் அல்ல, தேவன் யார் என்றும் அவர் என்ன செய்கிறார் என்றும் பாடவேண்டியிருந்தது. அவர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்பதை நினைவுகூற 103ம் சங்கீதம் உதவுகிறது (வச. 8). ஒருவேளை நம் பாவத்தின் தீர்ப்பு இன்னும் நம் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்தால், தேவன் கோபமடையவில்லை, அவர் மன்னித்துவிட்டார், அவர் இரக்கமுள்ளவர் என்று சங்கீதம் நமக்கு அறிவிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருண்ட இரவுகளில் நாம் பாடுவதற்கு அவைகளே நல்ல விஷயங்கள்.
ஒரு இருண்ட மற்றும் கடினதான இடத்தில் நீங்கள் இருப்பதாக காணலாம். தேவன் உண்மையாகவே நல்லவரா என்று அவருடைய அன்பை கேள்விக்குரியாக்குகிறீர்களா? அப்படியானால், ஜெபித்து அன்பு நிறைந்தவரைப் பாடுங்கள்.
யாருக்கு நான் தேவை
வாஷிங்டன் டிசியில் ரெட்-ஐ விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தப்போது, கருத்து எழுத்தாளர் ஆர்தர் புருக்ஸ் ஒரு வயதான பெண்மணி தன் கணவனிடம் 'நீங்கள் யாருக்கும் தேவையில்லை என்பது உண்மை அல்ல" என்று கிசுகிசுப்பதைக் ஒட்டுக் கேட்டார். அந்தக் கணவர் தான் இறந்துவிட்டால் நலமாயிருக்கும் என்று முணுமுணுப்பதைக் கேட்ட அவள் 'ஓ! அப்படிச் சொல்வதை நிறுத்துங்கள்" என்று கூறினாள். விமானப் பயணம் முடிந்தவுடன் புருக்ஸ் திரும்பிப் பார்த்து உடனடியாக அந்த நபரை அடையாளம் கண்டுக்கொண்டார். அவர் ஒரு உலகப் புகழ்ப்பெற்ற கதாநாயகன். மற்றப் பயணிகள் அவரோடு கைக்குலுக்கினர். பல தசாப்தங்களுக்கு முன் அவர் காட்டிய தைரியத்திற்கு பைலட் நன்றி தெரிவித்தார். இப்படிப்பட்ட பேராற்றல் வாய்ந்தவர் எப்படி விரக்தியில் மூழ்க முடியும்?
எலியா திர்க்கதரிசி தைரியமாகவும், தனியாகவும் நின்று 450 பாகால் திர்க்கதரிசிகளை தோற்கடித்தார் (1 இரா. 18). என்றாலும் அவர் அதைத் தனியாகச் செய்யவில்லை. தேவன் அவரோடே கூட இருந்தார்! ஆனால் பின்னர் தனிமையாக உணர்ந்த அவர் தேவனிடம் தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படி கேட்டார்.
தேவன் எலியாவை தன்னுடைய பிரசன்னத்தில் கொண்டுவந்து, அவரைச் சேவிக்க புதிய மனிதர்களைக் கொடுத்து, அவருடைய ஆவியை உயிர்ப்பித்தார். அவர் போய் “ஆசகேலை சீரியாவின் மேல் இராஜாவாகவும்", 'யெகூவை இஸ்ரவேலின் மேல் இராஜாவாகவும்", 'எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு" என்று தேவன் கூறினார் (19:15-16). புதிய நோக்கத்தால் பலப்படுத்தப்பட்டு எலியா தன்னுடைய வாரிசைக் கண்டுபிடித்து வழிநடத்தினார்.
உங்கள் பெரிய வெற்றிகள் பின்பக்க கண்ணாடியில் தோற்றமளிக்கலாம். உங்கள் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்நதாக உணரலாம். பரவாயில்லை, சுற்றிப்பாருங்கள். போர்கள் சிறியதாகத் தோன்றலாம், பங்குகள் ஆழம் குறைவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவைப்படும் மற்றவர்கள் இருக்கிறார்கள். இயேசுவினிமித்தம் அவர்களுக்கு நன்றாக சேவை செய்யவும், அது கணக்கில் கொள்ளப்படும். அவர்கள் தான் உங்களுடைய நோக்கம் - நீங்கள் இன்னும் இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.
உலகத்துக்கு மகிழ்ச்சி
ஓவ்வொரு கிறிஸ்மஸிற்கும், உலகெங்கிலும் உள்ள, கிறிஸ்துவின் பிறப்பிடம் பற்றிய காட்சிகளால் எங்கள் வீட்டை அலங்கரிக்கிறோம். எங்களிடம் ஒரு ஜெர்மன் பிறப்பிட பிரமிட் உள்ளது. பெத்லெகேமிலுள்ள ஒலிவ மரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட முன்னணைக் காட்சி மற்றும் பிரகாசமான வண்ண மெக்ஸிகன் நாட்டுப்புற பதிப்பும் உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து விசித்திரமாய் நுழைந்தது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரம்பரியமான ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுக்கு பதிலாக, ஒரு நீர்யானை குழந்தை இயேசுவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரு தனித்துவமான பாரம்பரிய முன்னோக்கு இந்த பிறப்பிடக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்தது. இயேசுவின் பிறப்பு ஒரு தேசத்திற்கோ அல்லது கலாச்சாரக்திற்கோ மட்டுமல்ல என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது ஒவ்வொரு அழகான நினைவூட்டலும் என் இதயத்தை அன்பினால் நிறப்புகிறது. இது பூமி முழுதுக்கும் ஒரு நல்லச் செய்தி, ஒவ்வொரு நாட்டினரும், இனத்தவரும் மகிழ்ந்திருக்க ஒரு காரணம். நம்முடைய ஓவ்வொரு பிறப்பிடக்காட்சியிலும் சித்தரிக்கப்பட்ட சிறு குழந்தை, தேவனுடைய இதயத்தின் உண்மையை இந்த முழு உலகத்துக்கும் வெளிப்படுத்தியது. ஆர்வமிக்க பரிசேயனான நிக்கோதேமுவுடன் கிறிஸ்து உரையாடுவதைக் குறித்து யோவான் 'தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாhர்" (யோவா. 3:16) என்று எழுதுகிறார்.
இயேசுவாகிய பரிசு அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. உலகத்தில் எந்த இடத்தை நீங்கள் இருப்பிடமாய் கொண்டிருந்தாலும்,, இயேசுவின் பிறப்பு தேவன் உங்களுக்கு கொடுக்கும் சலுகை, அன்பு மற்றும் சமாதானமே. கிறிஸ்துவில் புதிய வாழ்வைக் கண்ட யாவரும் 'சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களும், ஜாதிகளிலுதிருந்து" ஒருநாள் தேவனுடைய மகிமையை என்றென்றைக்கும் கொண்டாடுவார்கள் (வெளி. 5:9).
சமாதானம் உடைக்கப்படும்போது
1914 ல், பெல்ஜியத்தில் ஒரு குளிர்ந்த கிறிஸ்மஸ் ஈவ் அன்று வீரர்கள் தோண்டிய ஒரு பதுங்கு குழியிலிருந்து பாடல் சத்தம் மிதந்துக் கொண்டிருந்தது. 'சைலன்ட் நைட்" என்ற பாடல் ஜெர்மன் மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் ஒலித்தன. முந்தய நாளில் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய போர் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அகழிகளிலிருந்து வெளியே வந்து அவர்களுக்கு இடையே இருந்த யாருக்கும் சொந்தமல்லாத நிலத்தில், கைக்குலுக்கவும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும், எதிர்பாராத பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். போர் நிறுத்தம் அடுத்த நாள் வரை தொடர்ந்தது. வீரர்கள் பேசுவதும், சிரிப்பதும், ஒன்றாக சேர்ந்து கால்பந்து போட்டிகளையும் ஏற்பாடு செய்தனர்.
முதலாம் உலகப் போரின் வெஸ்டர்ன் ஃபிரன்டில் 1914ம் ஆண்டு நிகழ்ந்த கிறிஸ்மஸ் போர்நிறுத்தம், நீண்ட காலத்திற்கு முன்பு கிறிஸ்மஸ் ஈவ் அன்று தேவதூதர்கள் அறிவித்த சமாதானத்தின் சுருக்கமாக காட்சியளித்தது. பயந்துப்போன மேய்ப்பர்களிடம் ஒரு தூதன் 'பயப்படாதிருங்கள்; இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" என்ற உறுதியளிக்கும் வார்த்தைகளால் பேசினார் (லூக். 2:10-11). அப்பொழுது பரமசேனைத் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்றுச் சொல்லி தேவனைத் துதித்தனர் (வச. 13-14).
இயேசு சமாதானக் காரணர் - நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டவர் (ஏசா. 9:6). சிலுவையில் அவர் செய்த தியாகத்தினிமித்தம் அவர் பாவமன்னிப்பையும், அவரை நம்புகிற அனைவருக்கும் தேவனோடு சமாதானத்தையும் கொடுக்கிறார்.
பகட்டு இல்லை, மகிமை மட்டும்
கைகயால் செய்யப்பட்டு என் மகன் சேவியரால் பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஆபரணங்களையும் பாட்டி அனுப்பிய வருடாந்தர, பொருந்தாத கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களைப் பார்க்கும்போது எனக்கு ஏன் இந்த அலங்காரம் திருப்தியாயிருக்க
வில்லை என்று அறிய முடியவில்லை. ஒவ்வொரு ஆபரணத்தின் படைப்பாற்றலையும் அதன் நினைவுகளையும் நான் எப்போதும் மிகவும் மதித்தேன். ஆகவே சில்லரை விற்பனை கடைகளின் காட்சிகளான சரியாக பொருந்திய பல்புகள், பளபளக்கும் உருண்டைகள் மற்றும் சாடின் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தை வாங்குவதற்கு ஏன் என்னைத் தூண்டின?
எங்கள் தாழ்மையான அலங்காரத்திலிருந்து நான் விலகிச் செல்ல தொடங்கியப் போது, ஒரு சிவப்பு இதய வடிவிலான ஆபரணம், அதன் மேல் எளிய சொர்க்களான இயேசு என் இரட்சகர் என்று எழுதியிருப்பதை பார்ர்தேன். என் குடும்பமும் நான் இயேசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையுமே நான் கிறிஸ்மஸ் கொண்டாட விரும்புவதற்கான காரணங்கள் என்பதை நான் எப்படி மறந்தேன்? எங்கள் எளிய மரம் கடை முனைகளில் வைக்கப்பட்ட மரங்களைப் போல இல்லை, ஆனால் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் பின்னால் உள்ள அன்பு அதை அழகாக மாற்றியது.
எங்களுடைய அடக்கமான மரத்தைப் போலவே, மேசியாவும் இவ்வுலகத்தின் எந்த எதிர்பார்ப்புகளையும் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை (ஏசா. 53:2). இயேசு அசட்டைப் பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் (வச. 3). ஆனாலும் அன்பின் அற்புதமான வெளிப்பாட்டாய், அவர் 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்" (வச. 5). நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார் (வச. 5). அதைவிட அழகானது எதுவுமில்லை. புதுப்பிக்கப்பட்ட நன்றியறிதலோடு நம்முடைய குறையுள்ள அலங்காரத்திற்காகவும், நம்முடைய பரிபூரண மீட்பருக்காகவும், நான் பகட்டுக்காக ஏங்குவதை நிறுத்திவிட்டு தேவனுடைய மகிமையான அன்பிற்காக அவரைத் துதித்தேன். பளபளக்கும் அலங்காரங்கள் தேவனுடைய அழகான தியாக பரிசாகிய இயேசுவுக்கு ஒருபோதும் பொருந்தாது.