கைகயால் செய்யப்பட்டு என் மகன் சேவியரால் பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஆபரணங்களையும் பாட்டி அனுப்பிய வருடாந்தர, பொருந்தாத கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களைப் பார்க்கும்போது எனக்கு ஏன் இந்த அலங்காரம் திருப்தியாயிருக்க

வில்லை என்று அறிய முடியவில்லை. ஒவ்வொரு ஆபரணத்தின் படைப்பாற்றலையும் அதன் நினைவுகளையும் நான் எப்போதும் மிகவும் மதித்தேன். ஆகவே சில்லரை விற்பனை கடைகளின் காட்சிகளான சரியாக பொருந்திய பல்புகள், பளபளக்கும் உருண்டைகள் மற்றும் சாடின் ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மரத்தை வாங்குவதற்கு ஏன் என்னைத் தூண்டின?

எங்கள் தாழ்மையான அலங்காரத்திலிருந்து நான் விலகிச் செல்ல தொடங்கியப் போது, ஒரு சிவப்பு இதய வடிவிலான ஆபரணம், அதன் மேல் எளிய சொர்க்களான இயேசு என் இரட்சகர் என்று எழுதியிருப்பதை பார்ர்தேன். என் குடும்பமும் நான் இயேசுவில் வைத்திருக்கும் நம்பிக்கையுமே நான் கிறிஸ்மஸ் கொண்டாட விரும்புவதற்கான காரணங்கள் என்பதை நான் எப்படி மறந்தேன்? எங்கள் எளிய மரம் கடை முனைகளில் வைக்கப்பட்ட மரங்களைப் போல இல்லை, ஆனால் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் பின்னால் உள்ள அன்பு அதை அழகாக மாற்றியது.

எங்களுடைய அடக்கமான மரத்தைப் போலவே, மேசியாவும் இவ்வுலகத்தின் எந்த எதிர்பார்ப்புகளையும் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை (ஏசா. 53:2). இயேசு அசட்டைப் பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார் (வச. 3). ஆனாலும் அன்பின் அற்புதமான வெளிப்பாட்டாய், அவர் ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்” (வச. 5). நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார் (வச. 5). அதைவிட அழகானது எதுவுமில்லை. புதுப்பிக்கப்பட்ட நன்றியறிதலோடு நம்முடைய குறையுள்ள அலங்காரத்திற்காகவும், நம்முடைய பரிபூரண மீட்பருக்காகவும், நான் பகட்டுக்காக ஏங்குவதை நிறுத்திவிட்டு தேவனுடைய மகிமையான அன்பிற்காக அவரைத் துதித்தேன். பளபளக்கும் அலங்காரங்கள் தேவனுடைய அழகான தியாக பரிசாகிய இயேசுவுக்கு ஒருபோதும் பொருந்தாது.