ஐஸ்லாந்து என்று சிறிய நாடு வாசிப்பவர்களின் நாடு. உண்மையில் இந்த நாட்டில், ஒரு நபருக்கு, ஒவ்வொரு வருடமும், மற்றெந்த நாடுகளையும் விட அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டு வாசிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்லாந்து மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் புத்தகங்களைக் கொடுப்பதும் பிறகு இரவு முழுவதும் நீண்ட நேரம் வாசிப்பதும் ஒரு பாரம்பரியம். இந்தப் பாரம்பரியம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தையது, இறக்குமதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் காகிதம் மலிவாயிருந்தது. இலையுதிர் பிந்தய காலத்தில் ஐஸ்லாந்து வெளியீட்டாளர்கள் புதிய தலைப்புகளுடன் சந்தையை புத்தகங்களினால் நிரப்பினர். இப்போது நாட்டினி புதிய வெளியீடுகளின் பட்டியல் நவம்பர் நடுப்பகுதியில் ஒவ்வொரு ஐஸ்லாந்திய வீட்டிற்கும் அனுப்பப்படுகிறது. இந்தப் பாரம்பரியம் கிறிஸ்மஸ் புத்தக வெள்ளம் என்று அழைக்கப்படுகிறது.

ஓரு நல்ல கதையை உருவாக்கும் திறனையும் அதனை கற்பிக்கவும், அவர்களுடைய வார்த்தைகளின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கவும் தேவன் அனேகரை ஆசீர்வாதமாக வைத்திருப்பகற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியும். ஒரு நல்ல புத்தகம் போல் எதுவும் இல்லை! எல்லாவற்றிலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம், பைபிள், பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட, கவிதை மற்றும் உரைநடை, சில மாபெரும் கதைகள்-சில அவ்வாறு இல்லை, ஆனால் அவையனைத்தும் ஊக்கமளித்தன. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டியது போல ‘வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துக்கொள்ளுகலுக்கும், சீர்த்திருத்தலுக்கும், நீதியை படிப்பிக்கிறதற்கும், பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கிறது” (2 தீமோ. 3:16-17). வேத வாசிப்பு நம்மைக் கண்டித்து உணர்த்துகிறது, ஊக்குவிக்கிறது, அவருக்காக வாழ உதவி செய்கிறது மற்றும் சத்தியத்திற்குள்ளாக நம்மை வழிநடத்துகிறது (2:15).

நம்முடைய வாசிப்பில், எல்லாவற்றிலும் மகத்தான புத்தகமான பைபிளை வாசிக்க நேரத்தை கடைப்பிடிக்க மறந்துவிடக்கூடாது.