மரியாள் சுமந்துக்கொண்டிருக்கும் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருக்கும்போது யோசேப்பிடம் இது ஒரு தேவைப்படாத உரையாடலாயிருந்தது: ‘யோசேப்பு, நாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” பிரசவத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்களைப் போல அல்லாமல், இந்தக் குழந்தையை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

மரியாளையும் யோசேப்பையும் சந்தித்த தேவதூதர்கள் குழந்தையின் பெயர் இயேசு என்பதை அவ்விருவருக்கும் அறிவித்தனர் (மத். 1:20-21, லூக். 1:30-31). யோசேப்புக்குத் தோன்றின தூதன் இயேசு என்ற பெயருக்கு ‘அவர் தம்முடைய ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அர்த்தம்” எனக் கூறினார்.

அவர் இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுவார் (ஏசா. 7:14), அதற்கு ‘தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தம். ஏனென்றால் மனித உருவில் தேவன் – துணிகளில் சுற்றப்பட்டிருக்கும் தெய்வம். ‘ஆலோசனைக் கர்த்தா”,; ‘வல்லமையுள்ள தேவன்”, ‘நித்தியப் பிதா” (9:6) என்னும் அனேக பெயர்களையும் ஏசாயா தீர்க்கதரிசி சூட்டியுள்ளார். ஏனென்றால் அவர் அவை அனைத்திற்கும் உரியவர்.

புதிய குழந்தைக்கு பெயரிடுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஆனால் ‘மேசியா என்று அழைக்கப்படும் இயேசு” (மத். 1:16) போன்ற வல்லமையுள்ள, ஆச்சரியமான, உலகத்தையே மாற்றக் கூடிய பெயர் வேறு எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை. ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக்” கூப்பிடுவது நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).

இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவரைத் துதித்து, அவர் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.