கடுமையாக குரல் கொடுக்கும் கேப்டன் மற்றொரு தாமதத்தை அறிவித்தார். ஏற்கனவே இரண்டு மணி நேரம் அசையாமல் அமர்ந்திருந்த விமானத்தில், நெரிசலான என் ஜன்னல் இருக்கையில் விரக்தியுடன் துடித்தேன். நீண்ட வேலை வாரத்திற்குப் பிறகு வீட்டில் கிடைக்கும் ஆறுதலுக்கும் ஓய்வுக்கும் நான் ஏங்கினேன். இன்னும் எவ்வளவு காலம்? மழைத்துளி மூடிய ஜன்னலுக்கு வெளியே நான் பார்த்தப்போது, ஓடுபாதைகள் சந்தித்த சிமென்ட் இடைவெளியில் பச்சைப் புல் ஒரு தனிமையான முக்கோணமாக வளர்வதை நான் கவனித்தேன். அத்தனை கான்கிரீட்டுக்கும் நடுவில் ஒரு விசித்திரமான காட்சி.

அனுபவம் மிக்க மேய்ப்பரான தாவீது தன் ஆடுகளுக்கு பசுமையான மேய்ச்சலை கட்டும் தேவையை நன்கு அறிந்திருந்தார். சங்கீதம் 23ல், தான் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கும்போது சோர்வுற்ற நேரங்களில் அவரை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் ஒரு முக்கியமான பாடத்தை அவர் எழுதினார். ‘கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து … நீதியின் பாதைகளில் நடத்துகிறார்” (வச. 1-3).

ஒரு விமான நிலையத்தின் தார்ச் சாலையின் கான்கிரீட் காட்டில், எனது இலக்கிலிருந்து தாமதமாகி, ஆறுதலும் ஓய்வும் இல்லததை உணர்ந்தப்போது, என்னுடைய நல்ல மேய்ப்யரான தேவன், ஒரு பச்சையான ஒட்டுக்கு நேராய் என் கண்களைத் திருப்பினார். அவருடனான உறவில், அவர் கொடுக்கும் ஓய்வை, நான் எங்கிருந்தாலும், அதை கவனித்து நுழைந்தால் அதைப் கண்டுக்கொள்ள முடியும்.

பசுமையானதைத் தேடுங்கள் – பாடம் பல ஆண்டுகளாக நிடித்தது. அது அங்கு இருக்கிறது. தேவன் நம் வாழ்க்கையில் இருக்கும்போது நாம் குறைவுபடுவதில்லை. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார்.