ஓவ்வொரு கிறிஸ்மஸிற்கும், உலகெங்கிலும் உள்ள, கிறிஸ்துவின் பிறப்பிடம் பற்றிய காட்சிகளால் எங்கள் வீட்டை அலங்கரிக்கிறோம். எங்களிடம் ஒரு ஜெர்மன் பிறப்பிட பிரமிட் உள்ளது. பெத்லெகேமிலுள்ள ஒலிவ மரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட முன்னணைக் காட்சி மற்றும் பிரகாசமான வண்ண மெக்ஸிகன் நாட்டுப்புற பதிப்பும் உள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து விசித்திரமாய் நுழைந்தது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரம்பரியமான ஆடுகள் மற்றும் ஒட்டகங்களுக்கு பதிலாக, ஒரு நீர்யானை குழந்தை இயேசுவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு தனித்துவமான பாரம்பரிய முன்னோக்கு இந்த பிறப்பிடக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்தது. இயேசுவின் பிறப்பு ஒரு தேசத்திற்கோ அல்லது கலாச்சாரக்திற்கோ மட்டுமல்ல என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது ஒவ்வொரு அழகான நினைவூட்டலும் என் இதயத்தை அன்பினால் நிறப்புகிறது. இது பூமி முழுதுக்கும் ஒரு நல்லச் செய்தி, ஒவ்வொரு நாட்டினரும், இனத்தவரும் மகிழ்ந்திருக்க ஒரு காரணம். நம்முடைய ஓவ்வொரு பிறப்பிடக்காட்சியிலும் சித்தரிக்கப்பட்ட சிறு குழந்தை, தேவனுடைய இதயத்தின் உண்மையை இந்த முழு உலகத்துக்கும் வெளிப்படுத்தியது. ஆர்வமிக்க பரிசேயனான நிக்கோதேமுவுடன் கிறிஸ்து உரையாடுவதைக் குறித்து யோவான் ‘தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாhர்” (யோவா. 3:16) என்று எழுதுகிறார்.

இயேசுவாகிய பரிசு அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. உலகத்தில் எந்த இடத்தை நீங்கள் இருப்பிடமாய் கொண்டிருந்தாலும்,, இயேசுவின் பிறப்பு தேவன் உங்களுக்கு கொடுக்கும் சலுகை, அன்பு மற்றும் சமாதானமே. கிறிஸ்துவில் புதிய வாழ்வைக் கண்ட யாவரும் ‘சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களும், ஜாதிகளிலுதிருந்து” ஒருநாள் தேவனுடைய மகிமையை என்றென்றைக்கும் கொண்டாடுவார்கள் (வெளி. 5:9).