நம்பிக்கையைத் தேர்ந்தேடுத்தல்
உலகில் எஸ் ஏ டி (SAD) எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில் நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில் காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.
மீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது --- அது வசந்த காலத்தின் அறிகுறி - தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”
(மீகா 7:2)
அந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும் கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார்.
நாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா?” (வச. 7)
தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.
கடற்கரையில் ஜெபங்கள்
எங்கள் இருபத்தைந்தாவது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாட நாங்கள் பயணித்த போது, நானும் எனது கணவரும் ஒரு கடற்கரையில் எங்கள் வேதாகமங்களைப் படித்திக்கொண்டிருந்தோம். சுற்றிலும் விற்பனையாளர்கள் கடந்து சென்று தாங்கள் விற்கும் பொருட்களின் விலைகளை கூவிக்கொண்டிருந்தனர். நாங்கள் ஒன்றும் வாங்கவில்லையென்றாலும் யாவருக்கும் நன்றி சொன்னோம். ஆனால் பெர்னாண்டோ என்னும் ஒரு விற்பனையாளர் என்னுடைய நிராகரிப்பை கண்டுகொள்ளாமல் சிரித்துக்கொண்டு எங்களுடைய நண்பர்களுக்காக நாங்கள் ஏதேனும் வாங்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டு அவன் புறப்படும்போது “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றேன்.
அவர் திரும்பி என்னைப்பார்த்து “இயேசுவே என் வாழ்வை மாற்றினார்” என்றார். எங்களுடைய நாற்காலிகள் நடுவில் அவர் முழங்காலிட்டு “கர்த்தருடைய பிரசன்னத்தை நான் இங்கே உணருகிறேன்” என்று சொல்லி, ஆகாத மருந்து, குடி பழக்கங்களிலிருந்து ஆண்டவர் தம்மை எப்படி 14 ஆண்டுகளுக்கு முன்னால் விடுவித்தார் என்று பகிர்ந்து கொண்டார்.
சங்கீதங்களில் இருந்து அவர் பாராமல் பாடல்கள் ஒப்புவித்தபோது என் கண்களில் கண்ணீர் மல்கியது. அவரோடு சேர்ந்து நாங்களும் கர்த்தருடைய சமூகத்தை உணர்ந்து அவரைத் துதித்தோம்.
சங்கீதம் 148 ஒரு துதிப்பாடல். அவருடைய கிரியைகள் எல்லாமே கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் ஊக்குவிக்கிறார்; “அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 5) ..... அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”(வச. 13).
ஆண்டவரை நம்பி நம் தேவைகளை அவருக்கு முன்பாக வைக்க அவர் நம்மை அழைத்தாலும், அவர் நம்முடைய நன்றியுள்ள துதிகளையும் விரும்புகிறார் - நாம் கடற்கரையில் இருந்தாலும்கூட.
பலமும் தைரியமும்
ஒவ்வொரு இரவும் தன்னுடைய கண்களை மூடும்போது இருள் தன்னை சூழ்வதை காலேபு உணருவான். கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் இருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட அவனுடைய வீடு அவ்வப்போது உராய்வதினால், அந்த அறையின் நிசப்தம் கெடும். பிறகு பலகணிகளில் உள்ள வவ்வால்கள் ஆட்டம் பிடிக்கும். அவனுடைய அம்மா அவன் அறையில் ஒரு சிறிய விளக்கை வைத்திருந்தார்கள். ஆனாலும் அவன் இருட்டுக்கு பயப்படுவான். ஒருநாள் இரவில் அவன் அப்பா அவனுடைய படுக்கை கால்மாட்டில் ஒரு வேத வசனத்தை மாட்டி வைத்தார். அது யோசுவா 1:9: “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” அந்த வசனங்களை ஒவ்வொரு ராத்திரியும் படிப்பான் காலேபு. அவன் கல்லூரி சேர்கிறவரை அந்த வசனத்தை வைத்திருந்தான்.
யோசுவா முதலாம் அதிகாரத்தில், மோசே இறந்தபின் தலைமை யோசுவாவுக்கு மாறுவதை பற்றி படிக்கிறோம். “பலங்கொண்டு திடமனதாயிரு” என்ற கட்டளை திரும்பத் திரும்ப – அவர்கள் அதன் முக்கியத்தை உணரத்தக்கதாக - யோசுவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கொடுக்கப்பட்டது (வச. 6,7,9). எதிர்காலம் நிலையற்றது போல் காணப்பட்டதால் இஸ்ரவேலர் கலங்கினார்கள். அப்பொழுது தேவன் அவர்களுக்கு உறுதி அளிக்கும் வகையாக “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்றார்..
பயப்படுவது இயற்கைதான் என்றாலும் நீடிய பயம் நம்முடைய சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதிக்கும். அந்த காலத்தில் ஆண்டவர் தம்முடைய ஊழியக்காரர்களை ஊக்குவித்தது போலவே நாமும் அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பினால் பலங்கொண்டு திடமனதாயிருக்கலாம்.
வறட்சியில் பிழைப்பது
2019-ல் பருவமழையின் தோல்வி காரணமாக சென்னை நகரில் ஒரு மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீர் வண்டிகளில் இருந்து நீர் பிடிப்பதற்காக தெருவெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள். பசுமையாய் இருக்கவேண்டிய புறநகர் பகுதிகளில் கூட புல்களும் செடிகளும் காய்ந்து கிடந்தன.
இவ்விதமான உலர்ந்த செடிகளும், களைகளும், “கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன்” (எரே. 17:5) என்னும் எரேமியாவின் விவரிப்பை மனதிற்கு கொண்டு வருகின்றன. அவர் சொல்வதென்னவென்றால், “மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொள்கிறவன், அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணமாட்டான்” (வச. 5-6). மாறாக தேவன் மேல் நம்பிக்கை வைத்து தங்களுடைய பலத்த, நீண்ட வேர்களால் அவரிடமிருந்து சக்தியைப் பெருகிறவர்கள் பஞ்ச காலத்திலும் கூட செழித்து ஒங்குவார்கள்.
செடிகளுக்கும் மரங்களுக்கும் - இரண்டிற்குமே - வேர் இருந்தால்கூட செடிகள் தங்கள் வாழ்க்கை ஆதாரங்களோடு இணைந்திராவிட்டால் அவை உலர்ந்து அழியும். மரங்களோ தங்களுடைய வேர்களை நன்றாக ஊன்றி கடினமான நாட்களில் கூட தங்களை பராமரிக்கும் ஆதாரத்தில் நங்கூரம் பாய்ச்சி செழிக்கின்றன. தேவனைப் பற்றிக் கொண்டு அவருடைய பலத்தையும், சத்துவத்தையும், வேதாகமத்திலிருந்து ஞானத்தையும், அவரோடு ஜெபத்தின் மூலம் உறவு கொள்ளுகிறதினால் பெற்றுக் கொள்ளும்போது நாமும் கூட அவர் தரும் வாழ்வாதாரத்தில் தழைக்கலாம்.
செம்ம குறி?
வால்ட் டிஸ்னி அமைப்பின் பம்பி என்னும் சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ( ஒரு குட்டி மானை பற்றியது) மீண்டும் வெளியானபோது அனேக பெற்றோர் தம் தம் பிள்ளைகளோடு தங்களுடைய குழந்தை பருவத்தை மீண்டும் அனுபவித்தார்கள் . இவர்களில் ஒரு பெண்ணின் கணவர் வேட்டையில் வல்லுநர். அனேக கோப்பைகள் பெற்றவர். அவளுடைய பிள்ளைகள் அருகில் இருக்க அந்த பெண், பம்பி ஒரு வேட்டைக்காரனாலே தன்னுடைய தாயை இழந்த காட்சியை, சற்றே கண் கலங்கின விதமாக பார்த்தாள். அப்பொழுது அவளுடைய மகன் அப்பாவித்தனமாக “செம்ம குறி” என்று கத்தினான். இன்னும் கூட அப்போது அவளுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை குடும்பத்தார் நினைவூட்டுவர்!
நாட்கள் கடந்தபின் நம்முடைய பிள்ளைகள் சொல்லும் தர்மசங்கடமான காரியங்களைக் குறித்து நாம் சிரிக்க முடிகிறது. ஆனால் சங்கீதம் 136 –ல் காணும் ஜனங்கள் இப்படி செய்யும்போது நாம் என்ன சொல்வோம்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை இறைவன் தெரிந்துகொண்டு, மீட்டு அவர்களுக்கு காட்டிய அன்பை நித்தம் கொண்டாடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களுக்கு அது கொண்டாட்டம் அல்லவே அல்ல. இந்த சங்கீதம் அப்படிப்பட்டது: “எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்”; என்கிறது. (சங். 136:10, யாத். 12:29).
மற்றவர்கள் தங்கள் தாயார், சகோதரி, தந்தை, சகோதரன் – இவர்களை இழக்கும்போது ‘நல்ல குறி’ என்று சொல்வது போல அல்லவா இருக்கிறது?
இதற்காகத்தான் நாம் முழு கதையையும் படிக்க வேண்டும். இயேசுவின் உயிர்த்தெழுதளின் ஒளியை நாம் காணும் போதுதான் நம்முடைய குடும்பத்தின் கதைகள் - அவைகளுடைய கண்ணீர், சிரிப்பு உட்பட - அர்த்தங்கள் கொடுக்கும். இயேசுவை நாம் ஏற்றுக் கொண்டு புத்துயிர் பெற்றுக்கொள்ளும்போதுதான் அவர் தம்முடைய சொந்த ஜீவனை நமக்காக கொடுத்த அன்பை புரிந்துகொள்ள முடியும்.