Archives: ஜூலை 2020

முட்டாள்தனமான புதிய வாழ்க்கைமுறை

சில காரியங்களை நாம் அநுபவித்தால் மட்டும் தான், நம்மால் புரிந்து கொள்ள முடியும். நான் என்னுடைய முதல் குழந்தையைக் கருவில் சுமந்த போது,  மகப்பேறு பற்றி அநேகப் புத்தகங்களை வாசித்தேன், அநேகப் பெண்களிடம் பேறுகால வேதனையைப் பற்றியும், பிள்ளை பெறுதலைப் பற்றியும் கேட்டறிந்தேன். ஆனாலும் அதனைக் குறித்து முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சரீரம்  நிறைவேற்றக் கூடிய அந்தக் காரியம், என்னுடைய பார்வைக்கு முடியாததாகத் தோன்றியது!

கிறிஸ்துவின் மூலம் தேவன் அருளிய இரட்சிப்பின் மூலம், தேவனுடைய இராஜியத்தில் பிறப்பதைக் குறித்து, பவுல், 1 கொரிந்தியரில் எழுதுகின்றார். அதனை அநுபவியாதவர்களால், அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது. அவமானத்தாலும், தோல்வியினாலும், பெலவீனத்தாலும், இயேசு சிலுவையில் அடைந்த மரணம் நமக்கு இரட்சிப்பைத் தரும் என்ற செய்தி “முட்டாள்தனமாக” தோன்றலாம். ஆனாலும் இந்த முட்டாள்தனத்தைக் குறித்தே பவுல் பிரசங்கம் செய்தார்!

அது இவ்வாறு இருக்கும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வலிமையான அரசியல்வாதியின் மூலம் இரட்சிப்பு வரும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் ஏதோவொரு அடையாளத்தின் மூலம் இரட்சிப்பு வரும் என நினைத்தனர். சிலர் தங்களுடைய ஞானத்தினாலும் அறிவினாலும் அடையும் சாதனையை இரட்சிப்பு என நினைத்தனர் (1 கொரி. 1:22). ஆனால் தேவன் தம்மை விசுவாசிக்கின்றவர்களும், அதனை அநுபவிக்கின்றவர்களும் மட்டுமே உணரத்தக்கதாக, ஆச்சரியப்படும் வகையில், இரட்சிப்பைக் கொண்டுவந்தார்.

தேவன் அவமானத்துக்கு உரியதையும், பலவீனமானதையும், சிலுவை மரணத்தையும் தெரிந்துகொண்டார், அதனையே ஞானத்திற்கும், வல்லமைக்கும் அடிப்படையாக்கினார். நாம் நினைத்துப் பார்க்கமுடியாததை தேவன் முடித்தார். அவர் பெலவீனரையும், பைத்தியமானவைகளையும் தெரிந்து கொண்டார் (வ.27).

நாம் எதிர் பார்ப்பதற்கு மாறாக, அவர் தெரிந்துகொண்ட ஆச்சரியமான வழிகளே எப்பொழுதும் சிறந்தவை.

ஆபத்தில் உதவும் நண்பன்

கருத்து வசனம்: பவுலோ, அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து, நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். அப்போஸ்தலர் 15:38

1939 ஆம் ஆண்டு, நவம்பர் 27 ஆம் நாள், புதையல்களைத் தேடும் மூன்று பேர், புகைப்பட நபர்களோடு, “ஹாலிவுட்” என்ற பிரசித்திப் பெற்ற திரைபடம் தயாரிக்கும் இடத்திற்கு வெளியேயுள்ள குப்பைகளைத் தோண்ட ஆரம்பித்தனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவ்விடத்தில் பொன்னும், வைரமும் முத்துக்களும் நிறைந்த பொக்கிஷம் புதையுண்டு போயிற்று என்ற பேச்சை நம்பி, அவர்கள் இந்த வேலையில் இறங்கினர்.

ஆனால் அவர்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. 24 நாட்கள் தோண்டிய பின்னர், ஒரு கடின பாறையால் தடுக்கப் பட்டு, வேலையை நிறுத்தினர். 90 அடி அகலமும், 42 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைத் தான் அவர்களால் தோண்ட முடிந்தது. ஏமாற்றம் அடைந்தவர்களாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

தவறு செய்வது மனித இயல்பு. நாம் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திப்போம். ஊழியப் பிரயாணத்தில், இளைஞனான மாற்கு, பவுலையும் பர்னபாவையும் விட்டுப்       பிரிந்தான், அதன் பின்னர் அவர்களோடு, அதிக நாட்கள் பணிசெய்யவில்லை என வேதாகமத்தில் காண்கின்றோம். இதனாலேயே, அவனுடைய அடுத்த பயணத்தில் அவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என பவுல் கூறுகின்றார் (15:38). இதனால், பவுலுக்கும் பர்னபாவுக்கும் மன வேறுபாடு தோன்றுகின்றது. ஆனாலும் அவனுடைய ஆரம்ப தோல்வியையும் தாண்டி, பல ஆண்டுகளுக்குப் பின்னர், வியத்தகு வகையில் செயல்பட்டதைக் காண்கின்றோம். பவுல் தன்னுடைய கடைசி காலத்தில் சிறையில், தனிமையில் இருந்தபோது, மாற்குவை அழைக்கின்றார். “மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனம் உள்ளவன்” (2 தீமோ. 4:11) என்கின்றார். தேவன் மாற்குவைத் தூண்டி, அவனுடைய பெயரால் ஒரு சுவிசேஷத்தையும் எழுதவைக்கின்றார்.

 நாம் தவறுகளையும், தோல்விகளையும் தனியே சந்திக்கும்படி தேவன் நம்மை விடமாட்டார் என்பதை மாற்குவின் வாழ்வு நமக்குக் காட்டுகின்றது. எல்லாத் தவறுகளையும் விட மேலான நண்பனாகிய தேவன் நமக்கு இருக்கின்றார். நாம் நமது இரட்சகரைப் பின்பற்றும் போது, அவர் நமக்குத் தேவையான பெலனையும், உதவியையும் தருவார்.

ஜெபிக்கும் முட்டைகள்

எங்களது சமையல் அறைக்கு வெளியே, தாழ்வாரத்தின் அடிப்பக்கம் ஒரு புறா கூடு அமைத்தது. அது புற்களைக் கொண்டு வந்து, கட்டையின் இடைவெளியில், ஒரு பாதுகாப்பான இடத்தில் திணித்து, கூடு அமைப்பதைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பின்னர் அது முட்டையிட்டு அடைகாத்தது. ஒவ்வொரு காலையும் அதன் முன்னேற்றத்தைக் கவனிப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் அதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை. அந்த புறாவின் முட்டைகள் பொரிப்பதற்கு சில வாரங்கள் ஆயின.

இத்தகைய பொறுமை எனக்கொன்றும் புதியதல்ல. நான் ஜெபத்தில் காத்திருக்கப் பழக்கப் பட்டவள். நானும் என்னுடைய கணவனும் எங்களுடைய முதல் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்தோம். இதேப் போன்று, பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் கேத்தரின் மார்ஷல்,  “அடைகாக்கப் படும் முட்டைகள் சில நாட்களிலேயே பொரித்து விடுவதைப் போல, ஜெபத்தைற்கான பதில் உடனே வந்து விடாது” என்றார்.

ஆபகூக் தீர்க்கதரிசியும் ஜெபத்தில் காத்திருப்பதை அனுபவித்தவர். யூதாவின் தெற்கு இராஜியத்தில், பாபிலோனியரின் வன்மையான நடத்துதலைக் குறித்து, தேவன் அமைதியாக இருப்பதால், விரக்தியடைந்த ஆபகூக் தீர்க்கதரிசி, “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டு, அவர் எனக்கு என்ன சொல்வாரென்று………… கவனித்துப் பார்ப்பேன்” ( ஆப.2:1) என்கின்றார். குறித்த காலம் வரும் வரைக்கும் ஆபகூக் காத்திருக்க வேண்டும் என தேவன் பதிலளிக்கின்றார். அத்தோடு, தேவன், “நீ தீர்க்க தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” (வ.2) என்று வழிகாட்டுகின்றார்.

பாபிலோனின் வீழ்ச்சிக்காக “குறித்த காலம்” இன்னும் அறுபது ஆண்டுகள் தள்ளி இருக்கின்றது என்பதை தேவன் குறிப்பிடவில்லை. அவருடைய வாக்குத் தத்தத்திற்கும் அதின் நிறைவேறலுக்கும் இடையே இருக்கின்ற நீண்ட இடைவெளியைப் பற்றி குறிப்பிடவில்லை. முட்டைகளைப் போன்று, ஜெபம் உடனடியாக பதில் கொண்டு வருவதில்லை, ஆனால் தேவன் இவ்வுலகிற்கும், நமக்கும்  நிறைவேற்றும்படி வைத்திருக்கும் திட்டத்தினுள், நம்முடைய ஜெபங்களும் பலனைத் தரும்படி காத்திருக்கும்.

ஒரு செழிப்பான மரம்

எதையாகிலும் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய இருதயத்தினுள் எப்பொழுதும் இருக்கும். நான் குழந்தையாக     இருந்த போது, தபால் தலைகள், நாணயங்கள், காமிக் புத்தகங்கள் போன்றவற்றைச் சேகரித்தேன். இப்பொழுது, ஒரு தகப்பனான போது, அதே ஆசைகளை என்னுடைய குழந்தைகளிடம் காண்கின்றேன். சில வேளைகளில், உனக்கு இன்னும் ஒரு டெடி கரடி பொம்மை வேண்டுமா? என்று கூட நான் ஆச்சரியத்தோடு நினைப்பதுண்டு.

ஆனால், அது தேவையைக் குறிப்பதல்ல. ஏதாகிலும் புதியனவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அல்லது மிகப் பழமை வாய்ந்த அல்லது அரிய வகையான பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆவல். நம்முடைய மனதை கவர்வது எதுவாக இருந்தாலும் நாம் அதை அடைந்தால் தான், நம்முடைய வாழ்வு நன்றாக இருக்கும் என்று நம்மை நினைக்கச் செய்யும். அப்போது தான் நாம் மகிழ்ச்சியாகவும் நிறைவோடும் வாழ முடியும் என்பதாகவும் நினைப்போம்.

உலகப் பொருட்கள்  நிரந்தரமான மன நிறைவைக் கொடுப்பதல்ல, ஏனெனில், நம்முடைய உள்ளம் தேவனால் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, தேவன் நம்மைப் படைத்தார். நம்மைச் சுற்றியுள்ள உலகப் பொருட்களால், ஏக்கம் நிறைந்த நம்முடைய இருதயத்தை திருப்தி படுத்த முடியாது.

இத்தகைய மனஅழுத்தம் புதுமையானது அல்ல. இரண்டு வகை எதிர் மாறான வாழ்வுகளை நீதிமொழிகள் நமக்குக் காட்டுகின்றது. ஒன்று ஐசுவரியத்தைச் சம்பாதிப்பதற்காக வாழ்வைச் செலவிடுவது, மற்றொன்று, தேவன் மீதுள்ள அன்பில் வாழ்வை அமைத்துக் கொண்டு, தாராளமாகக் கொடுப்பது. “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்” என்பதாக நீதி. 11:28 கூறுகின்றது.

எத்தனை அருமையான காட்சி! இரண்டு வகையான வாழ்வு, ஒன்று செழிப்பும் கனிகள் நிறைந்ததுமான வாழ்வு, மற்றொன்று, வெறுமையும் கனியற்றதுமான வாழ்வு. உலகப் பொருட்களை மிகுதியாகச் சேகரிப்பதே “நல்ல வாழ்வு” என்று உலகம் வலியுறுத்துகின்றது. மாறாக, நாம் அவரில் வேர்கொண்டு வளர்ந்து, அவர் தரும் நன்மையை அநுபவித்து, செழித்து வளர்ந்து கனிதரும்படி தேவன் அழைக்கின்றார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில் பக்குவப்படும் போது, தேவன் நம் இருதயத்தையும் அதின் ஆசைகளையும் திருத்தி, நம்மை     உள்ளிருந்து வெளி நோக்கி, மாற்றம் பெறச் செய்கின்றார்.

புதுப்பிக்கப்பட்ட பெலன்

பிறருக்குப் பணிசெய்பவர்கள் தங்களின் ஆற்றலை இழந்து போவதில், ஒரே மாதிரியாக இருப்பதை, ஒரு மன நல மருத்துவர் கண்டார். அதற்கான முதல் அடையாளம் சோர்வு. அடுத்து வருவது, பிறர் மீது வெறுப்பு, எந்த ஒரு முன்னேற்றமும் காட்டாத மக்கள் மீது வெறுப்பு, அதன் பின் கசப்பு, விரக்தி, மனஅழுத்தம்- கடைசியாக வலுவிழந்து போவர்.

உடைந்து போன கனவுகளிலிருந்து மீளல் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர், மக்களோடு, கூட்டங்களில் பேசுகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பின்னர், நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும்படி உதவுவது நன்கு பலனளிப்பதாக இருந்தது, ஆனால் அதன் விளைவையும் சந்தித்தேன். ஒரு நாள், நான் மேடையில் ஏற முயற்சித்த போது மயங்கி விழ இருந்தேன். அன்று இரவு நான் சரியாகத் தூங்கவில்லை. விடுமுறை நாட்கள் என்னுடைய சோர்வை நீக்கவில்லை. மற்றவர்களின் பிரச்சனைகளைக் கேட்பது என்ற எண்ணம் என்னை வெறுப்படையச் செய்தது. அந்த மன நல மருத்துவர் குறிப்பிட்டிருந்த, நிலைக்குள் தள்ளப்பட்டேன்.

சோர்வுகளை விரட்டியடிக்க இரு வழிமுறைகளை வேதாகமம்  குறிப்பிடுகின்றது. ஏசாயா 40 ஆம் அதிகாரத்தில், தேவன் மீதுள்ள நம்பிக்கை சோர்ந்து போகின்ற ஆத்துமாவிற்கு பெலன் கொடுக்கின்றது என்று கூறுகின்றது (வ.29-31). என்னுடைய நிலையற்ற பெலத்தோடு நான் ஓட முயற்சிப்பதைக் காட்டிலும்  தேவன் பேரிலுள்ள நம்பிக்கையோடு அவரில் சார்ந்து இருப்பதே மேலானது. தேவன் நன்மையால் நம்முடைய வாயை திருப்தியாக்குகிறார் என சங்கீதம் 103:5 கூறுகின்றது. இதில் அவர் தருகின்ற மன்னிப்பும், விடுதலையும் அடங்கும் (வ.3-4). மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருபவை யாவும்   அவரிடமிருந்தே வருகின்றது. நான் என்னுடைய கால அட்டவணையை சற்று மாற்றி அமைத்து, ஜெப நேரத்தை அதிகரித்து, ஓய்வுக்கும் படமெடுத்தல் போன்ற சில பொழுது போக்கு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, மீண்டும் சுகத்தை உணர ஆரம்பித்தேன்.

சோர்விலிருந்து தான் பெலவீனம் ஆரம்பிக்கின்றது. அது மேலும் அதிகரிக்காமல், இத்தோடு நிறுத்திவிடுவோம். நம்முடைய வாழ்வில் தேவனை ஆராதிப்பதோடு ஓய்வும் சேரும் போது, நாம் பிறருக்குச் சிறப்பாக பணிசெய்ய முடியும்..