எதையாகிலும் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய இருதயத்தினுள் எப்பொழுதும் இருக்கும். நான் குழந்தையாக     இருந்த போது, தபால் தலைகள், நாணயங்கள், காமிக் புத்தகங்கள் போன்றவற்றைச் சேகரித்தேன். இப்பொழுது, ஒரு தகப்பனான போது, அதே ஆசைகளை என்னுடைய குழந்தைகளிடம் காண்கின்றேன். சில வேளைகளில், உனக்கு இன்னும் ஒரு டெடி கரடி பொம்மை வேண்டுமா? என்று கூட நான் ஆச்சரியத்தோடு நினைப்பதுண்டு.

ஆனால், அது தேவையைக் குறிப்பதல்ல. ஏதாகிலும் புதியனவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அல்லது மிகப் பழமை வாய்ந்த அல்லது அரிய வகையான பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆவல். நம்முடைய மனதை கவர்வது எதுவாக இருந்தாலும் நாம் அதை அடைந்தால் தான், நம்முடைய வாழ்வு நன்றாக இருக்கும் என்று நம்மை நினைக்கச் செய்யும். அப்போது தான் நாம் மகிழ்ச்சியாகவும் நிறைவோடும் வாழ முடியும் என்பதாகவும் நினைப்போம்.

உலகப் பொருட்கள்  நிரந்தரமான மன நிறைவைக் கொடுப்பதல்ல, ஏனெனில், நம்முடைய உள்ளம் தேவனால் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, தேவன் நம்மைப் படைத்தார். நம்மைச் சுற்றியுள்ள உலகப் பொருட்களால், ஏக்கம் நிறைந்த நம்முடைய இருதயத்தை திருப்தி படுத்த முடியாது.

இத்தகைய மனஅழுத்தம் புதுமையானது அல்ல. இரண்டு வகை எதிர் மாறான வாழ்வுகளை நீதிமொழிகள் நமக்குக் காட்டுகின்றது. ஒன்று ஐசுவரியத்தைச் சம்பாதிப்பதற்காக வாழ்வைச் செலவிடுவது, மற்றொன்று, தேவன் மீதுள்ள அன்பில் வாழ்வை அமைத்துக் கொண்டு, தாராளமாகக் கொடுப்பது. “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்” என்பதாக நீதி. 11:28 கூறுகின்றது.

எத்தனை அருமையான காட்சி! இரண்டு வகையான வாழ்வு, ஒன்று செழிப்பும் கனிகள் நிறைந்ததுமான வாழ்வு, மற்றொன்று, வெறுமையும் கனியற்றதுமான வாழ்வு. உலகப் பொருட்களை மிகுதியாகச் சேகரிப்பதே “நல்ல வாழ்வு” என்று உலகம் வலியுறுத்துகின்றது. மாறாக, நாம் அவரில் வேர்கொண்டு வளர்ந்து, அவர் தரும் நன்மையை அநுபவித்து, செழித்து வளர்ந்து கனிதரும்படி தேவன் அழைக்கின்றார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில் பக்குவப்படும் போது, தேவன் நம் இருதயத்தையும் அதின் ஆசைகளையும் திருத்தி, நம்மை     உள்ளிருந்து வெளி நோக்கி, மாற்றம் பெறச் செய்கின்றார்.