பிறருக்குப் பணிசெய்பவர்கள் தங்களின் ஆற்றலை இழந்து போவதில், ஒரே மாதிரியாக இருப்பதை, ஒரு மன நல மருத்துவர் கண்டார். அதற்கான முதல் அடையாளம் சோர்வு. அடுத்து வருவது, பிறர் மீது வெறுப்பு, எந்த ஒரு முன்னேற்றமும் காட்டாத மக்கள் மீது வெறுப்பு, அதன் பின் கசப்பு, விரக்தி, மனஅழுத்தம்- கடைசியாக வலுவிழந்து போவர்.

உடைந்து போன கனவுகளிலிருந்து மீளல் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர், மக்களோடு, கூட்டங்களில் பேசுகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பின்னர், நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும்படி உதவுவது நன்கு பலனளிப்பதாக இருந்தது, ஆனால் அதன் விளைவையும் சந்தித்தேன். ஒரு நாள், நான் மேடையில் ஏற முயற்சித்த போது மயங்கி விழ இருந்தேன். அன்று இரவு நான் சரியாகத் தூங்கவில்லை. விடுமுறை நாட்கள் என்னுடைய சோர்வை நீக்கவில்லை. மற்றவர்களின் பிரச்சனைகளைக் கேட்பது என்ற எண்ணம் என்னை வெறுப்படையச் செய்தது. அந்த மன நல மருத்துவர் குறிப்பிட்டிருந்த, நிலைக்குள் தள்ளப்பட்டேன்.

சோர்வுகளை விரட்டியடிக்க இரு வழிமுறைகளை வேதாகமம்  குறிப்பிடுகின்றது. ஏசாயா 40 ஆம் அதிகாரத்தில், தேவன் மீதுள்ள நம்பிக்கை சோர்ந்து போகின்ற ஆத்துமாவிற்கு பெலன் கொடுக்கின்றது என்று கூறுகின்றது (வ.29-31). என்னுடைய நிலையற்ற பெலத்தோடு நான் ஓட முயற்சிப்பதைக் காட்டிலும்  தேவன் பேரிலுள்ள நம்பிக்கையோடு அவரில் சார்ந்து இருப்பதே மேலானது. தேவன் நன்மையால் நம்முடைய வாயை திருப்தியாக்குகிறார் என சங்கீதம் 103:5 கூறுகின்றது. இதில் அவர் தருகின்ற மன்னிப்பும், விடுதலையும் அடங்கும் (வ.3-4). மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருபவை யாவும்   அவரிடமிருந்தே வருகின்றது. நான் என்னுடைய கால அட்டவணையை சற்று மாற்றி அமைத்து, ஜெப நேரத்தை அதிகரித்து, ஓய்வுக்கும் படமெடுத்தல் போன்ற சில பொழுது போக்கு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, மீண்டும் சுகத்தை உணர ஆரம்பித்தேன்.

சோர்விலிருந்து தான் பெலவீனம் ஆரம்பிக்கின்றது. அது மேலும் அதிகரிக்காமல், இத்தோடு நிறுத்திவிடுவோம். நம்முடைய வாழ்வில் தேவனை ஆராதிப்பதோடு ஓய்வும் சேரும் போது, நாம் பிறருக்குச் சிறப்பாக பணிசெய்ய முடியும்..