ஏமாற்றத்தைத் தருகின்றது, நான் இன்னும் அதிக அர்த்தமுள்ள வாழ்வை வாழ விரும்புகின்றேன் என்று கூறி, நிதித்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த லியோன், தன் வேலையை ராஜினாமா செய்தான். ஒரு நாள், “இரக்கம் தான் சிறந்த மருந்து” என்ற ஒரு வாசகத்தைக் கையில் பிடித்தவனாக, வீடற்ற ஒருவன் தெரு முனையில் பிச்சைக் கேட்பதைப் பார்த்தான்.” இந்த வார்த்தைகள் என்னை நேரடியாகத் தாக்குகின்றன, இவை என்னை உணர்த்தும் வார்த்தைகள்” என்றான்.

இரக்கத்தைக் காட்டும் அகில நாடுகளின் நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம், லியோன் ஒரு புது வாழ்வைத் தொடங்கத் தீர்மானித்தார். அவர் பிறரைச் சார்ந்து வாழ்ந்து, அவர்கள் தரும் உணவையும், எரிபொருளையும், தங்கும் இடத்தையும் சார்ந்து கொண்டு, உலகம் முழுவதும் பயணம் செய்தார். பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தின் மூலம், அநாதைகளுக்கு உணவளிப்பது, வசதியற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களைக் கட்டுவித்தல் போன்ற நற்செயல்கள் மூலம் அவர்களை கெளரவித்தார்.    “இதனை சில வேளைகளில் மென்மையான குணம் கொண்டிருத்தல் என்பதாகப் பார்ப்பதுண்டு, ஆனால், இரக்கம் என்பது மிகவும் வலிமையானது” என்கின்றார்.

கிறிஸ்துவிடமிருந்து இயற்கையாகப் பொங்கி வரும் நன்மைசெய்யும் பண்பும், அவருடைய இரக்கமும், அவரை தேவனாகக் காண்பித்தது. ஒரு விதவையின் ஒரே மகனின் சரீரத்தை அடக்கம் செய்யும் படி சென்று கொண்டிருந்த கூட்டத்தை இயேசு சந்தித்த போது, (லூக்.7:11-17) அவர் காட்டிய இரக்கத்தின் கதை எனக்கு மிகவும் விருப்பமானது. அந்த கவலை தோய்ந்த விதவை, அந்த மகனையே சார்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். அங்கு, இதனைச் செய்யும்படி, இயேசுவை யாருமே கட்டாயப் படுத்தினதாக நாம் வாசிக்கவில்லை. முழுவதும் அவருடைய நற்பண்பினால் (வ.13), அவர் மனதுருகி, அவளுடைய மகனை உயிரோடு எழுப்பினார். ஜனங்கள், “தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்” என்று சொல்லி தேவனை மகிமைப் படுத்தினார்கள் (வ.16).