டிசம்பர் 30, 2019 அன்று, மருத்துவரான லீ வென்லியாங் அவர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சமூக வலைத் தள குழுவில் ஒரு செய்தியை வெளியிட்டார். சீனாவின், வுஹான் பகுதியிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்குள்ளான ஏழு நபர்களும், “எந்த வகையைச் சார்ந்தது என்று இதுவரையிலும் குறிப்பிட்டு வகைப்படுத்தப்படமுடியாத” நூதனமானதொரு கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்திருந்தார். ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் மாத்திரம் அவர் கேட்டிருந்தார். அதிகாரிகள் அதிருப்தியடைந்தவர்களாய், “வதந்தி பரப்புதல்", மற்றும் அனாவசியமான பயத்தை மக்கள் மத்தியில் பரப்பினார்…
நல்ல செய்தி
மைக் என்பவரோடு பணிபுரியும் அநேகர், கிறிஸ்தவத்தைப் பற்றி சிறிதே அறிந்திருந்தனர், அவர்கள் அதற்காக வருத்தப்படவும் இல்லை. ஆனால், மைக் தேவனை அறிவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்து உயிர்த்தெழுதல் பண்டிகை நெருங்கி வந்த போது ஒரு நாள் ஒருவர், உயிர்த்தெழுதலுக்கும் பஸ்காவிற்கும் ஒரு தொடர்பு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் அது என்ன என்பதை அறியேன், “ஹே, மைக்! இந்த நல்ல காரியத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா? பஸ்கா என்பது என்ன?” என்று கேட்டார்.
எனவே, மைக் விளக்கினார். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார் என்பதையும், 10 வாதைகளைப் பற்றியும், ஒவ்வொரு வீட்டிலும் நடைபெற்ற தலைப் பிள்ளைச் சங்காரத்தைப் பற்றியும் விளக்கினார். ஒவ்வொரு வீட்டின் நிலைக்கால்களிலும் பலிசெலுத்தப்பட்ட ஆட்டின் இரத்தம் பூசப்பட்டிருந்தால், சங்கார தூதன் அவற்றைக் கடந்து சென்று விடுவான் என்பதையும் விளக்கினார். பின்னர், அதே பஸ்கா நாட்களில், இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் பலியாக்கப் பட்ட ஆட்டுக் குட்டியானார் என்றும் விளக்கினார், திடீரென மைக், ஹே, நான் சாட்சியாக இருக்கின்றேன்! என்று உணர்ந்தார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனைப் பற்றி அறியாத ஒரு சபைக்கு ஆலோசனை கொடுக்கும் போது, “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1 பேதுரு 3:15) என்கின்றார்.
மைக் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து தெளிவாக இருந்தபடியால், அவன் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து இயல்பாக “சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” (வ.15) கூற முடிந்தது.
நாமும், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எளிய முறையில் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான முக்கியமான செய்தியான, தேவனைக் குறித்த நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம்
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததும், பதினான்கு வயது நிரம்பிய சந்தீப், ஒவ்வொரு மாலையும் பஸ்ஸிலிருந்து குதித்து, தன்னுடைய வீட்டினை அடையும் வரை நடனமாடிக் கொண்டேச் செல்வான். அவனுடைய தாயார் அதனை பதிவு செய்து, அதனை, பள்ளிக்கு பின் நடன நேரம், என்று நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார். அவன் நடனமாடுகின்றான் ஏனெனில், அவன் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றான், தன்னுடைய ஒவ்வொரு அசைவினாலும் “மற்றவர்களையும் மகிழ்ச்சியாக்குகின்றான்”. ஒரு நாள், குப்பை சேகரிக்கும் பணியிலிருந்த இரண்டு பேர், தங்களுடைய பரபரப்பான வேலையின் மத்தியிலும், இந்த இளைஞனோடு சுழன்று, அசைந்து, நடனமாடி மற்றவர்களையும் நடனமாட அழைத்தனர். இம்மூவரும் சேர்ந்து, ஒருவரையொருவர் தொற்றிக் கொள்ளும் உண்மையான மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.
நிலைத்திருக்கும், முழுமையான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் தேவன் ஒருவரே என்பதை சங்கீதம் 149 விளக்குகின்றது. தேவனுடைய பிள்ளைகள் இணைந்து “கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்” (வ.1) என்று சங்கீதக்காரன் உற்சாகப் படுத்துகின்றார்.
அவர் இஸ்ரவேல் ஜனங்களை “தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்”, “தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (வ.2) என்று அழைக்கின்றார். அவர் நம்மை நடனத்தோடும், இசையோடும் தேவனை ஆராதிக்கும்படி அழைக்கின்றார் (வ.1-3). ஏனெனில், “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (வ.4).
நாம் ஆராதிக்கும் நம்முடைய தந்தை, நம்மைப் படைத்தார், அவரே இந்த உலகத்தையும் காத்து வருபவர். அவர் நம்மில் மகிழ்ச்சியடைகின்றார், ஏனெனில் நாம் அவருடைய நேசப் பிள்ளைகள். அவரே நம்மை வடிவமைத்தவர், நம்மை அறிந்திருக்கின்றார், அவரோடு உறவாடும்படி நம்மை அழைக்கின்றார். இது எத்தனை பெரிய கனம்! என்றும் உயிரோடிருக்கின்ற, நமது அன்பின் தேவனே நம்முடைய மாறாத மகிழ்ச்சிக்குக் காரணர். நம்மைப் படைத்தவர், ஒவ்வொரு நாளையும் நமக்கு ஈவாகத் தந்து, நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றதற்காக நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
உண்மையான தாழ்மை, உண்மையில் பெரியது
எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர் புரிந்துகொண்டார்.
இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின் நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.
ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின் சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல் தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.
மீட்கப்பட வேண்டும்
ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான் சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.
ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25). இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம், தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான், தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.
இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய் அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.