சொல்ல வேண்டிய நற்செய்தி
“உன்னுடைய பெயரென்ன?” அர்மான் என்ற ஈரானிய மாணவன் கேட்டான். நான் அவனிடம் என் பெயர் எஸ்டரா என்றேன். அவன் முகமலர்ச்சியோடு, “எங்களுடைய பெர்சியாவிலும் இத்தகைய ஒரு பெயருண்டு. அது ஸெட்டரே” என்றான். இந்த ஒரு சிறிய தொடர்பு ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவகுத்தது. நான் அவனிடம் வேதாகமத்திலுள்ள ஒரு நபர் எஸ்தர். அவள் பெர்சியாவிலிருந்த ஒரு யூத அரசி (தற்சமயம் ஈரான்) அவளுடைய கதையில் ஆரம்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி வரைக்கும் அவனுக்குச் சொன்னேன். எங்களுடைய உரையாடலின் விளைவாக அர்மான் எங்களுடைய வாரந்திர வேதாகம பாட வகுப்பிலும் கலந்து கொண்டு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள முற்பட்டான்.
இயேசுவின் சீடனான பிலிப்பு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ரதத்தில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அது ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” (அப். 8:30) என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கான அர்த்தம் விளங்கவில்லை. அப்பொழுது பிலிப்புவினுடைய கேள்வி சரியான நேரத்தில் வந்தது. அவன் உடனே பிலிப்புவை தன்னுடனே ரதத்தில் அமருமாறு அழைக்கின்றான். தாழ்மையோடு கவனிக்கின்றான். இது எத்தனை ஆச்சரியமான வாய்ப்பு என்பதை பிலிப்பு உணர்ந்துகொண்டு, பேசத் தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான் (வச. 35).
பிலிப்புவைப் போன்று நாமும் நற்செய்தியைச் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம். நாம் வேலை செய்யுமிடத்தில், கடைகளில் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படவும் நம்மை வழிநடத்தவும் தேவையான வார்த்தைகளை நமக்குத் தரவும் நாம் வேண்டுவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும், நாம் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
எதிர்பாராத வெற்றியாளர்கள்
2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.
லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.
உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.
தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.
மாற்றம் வரலாம்
ஒரு சனிக்கிழமை மாலையில் எங்கள் ஆலயத்திலுள்ள சில இளைஞர்கள் பிலிப்பியர் 2:3-4ல் குறிப்பிட்டுள்ளவற்றைக் குறித்து ஒருவரையொருவர் சில கடினமான கேள்விகளைக் கேட்கும்படி கூடி வந்திருந்தனர். “நீங்கள் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” சில கடினமான வாதங்கள் என்னவென்றால். எவ்வளவு அடிக்கடி நீ மற்றவர்கள் மீது கரிசனையுடையவனாயிருக்கின்றாய்? மற்றவர்கள் உன்னைக் குறித்து எப்படி விமர்சிக்கின்றனர்? பெருமையானவனென்றா? தாழ்மையானவனென்றா? ஏன்?
நான் அதனை கவனித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய வெளிப்படையான பதில்கள் என்னுடைய ஆர்வத்தை ஈர்த்தன. இளைஞர்கள் தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களை மாற்றிக் கொள்வது கடினமான காரியம் என ஒத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் மாற வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது. ஓர் இளைஞன், “தன்னலம் என்பது என்னுடைய இரத்தத்திலேயேயுள்ளது” எனப் புலம்பினான்.
இயேசு கிறிஸ்துவின் ஆவி நமக்குள்ளே வாசம் பண்ணினால், அவர் மூலமாக நமக்குள்ளேயுள்ள தன்னலமான எண்ணங்கள் மறைந்து, பிறருக்குப் பணி செய்பவராக நம்மை மாற்ற முடியும். எனவேதான் பவுல், பிலிப்பி சபையினரிடம் தேவன் அவர்களுக்குச் செய்துள்ளவற்றையும், அவர்களை தேவன் மாற்றியுள்ளதையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கின்றார். தேவன் அவர்களை கிருபையாக ஏற்றுக் கொண்டார். தமது அன்பினால் அவர்களைத் தேற்றினார். அவர்களுக்கு உதவும்படி பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் கொடுத்துள்ளார் (பிலி. 2:1-2). அவர்களும், நாமும், நம்மைத் தாழ்த்துவதேயன்றி, வேறெவ்வாறு அந்த கிருபையை பெற பதில் செய்ய முடியும்?
ஆம், நம்முடைய மாற்றத்திற்குக் காரணமானவர் தேவனே. அவராலேயே நம்மை மாற்றமுடியும். ஏனெனில் தேவனே நம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (வச. 13) நாமும் நம்மீது கவனம் செலுத்துவதை விட்டு, தாழ்மையோடு பிறருக்குப் பணிசெய்வோம்.
சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.
இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).
ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.
ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.
ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.
புது இருதயம் தேவையா?
என்னுடைய தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவருடைய மருத்துவர், அவருடைய இருதயத்தை நன்கறிய ஒரு சோதனை செய்தார். விளைவு? மூன்று இரத்த நாளங்களிலே அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் நாள் மூன்று இடங்களில் துணைப்பாதை அமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய நிர்ணயிக்கப்பட்டது. என்னுடைய தந்தை அந்த நாளை ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் நாளாக எதிர்பார்த்தார். “வாலன்டைன்ஸ் தினத்தன்று நான் ஒரு புதிய இருதயத்தைப் பெற்றுக் கொள்வேன்” என்றார். அதுவும் நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை நன்றாகச் செய்யப்பட்டது. போராடிக் கொண்டிருந்த அவருடைய இருதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் நடைபெறும்படி புதுப்பிக்கப்பட்ட புது இருதயத்தைப் பெற்றுக் கொண்டார்.
என்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை, தேவன் நமக்குக் கொடுக்கின்ற புதிய வாழ்வை நினைவுபடுத்தியது. ஆவிக்குரிய குழாய்களை பாவம் அடைத்துக் கொள்வதால் நாம் தேவனோடு உறவுகொள்ள தடுமாறுகின்றோம். இந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தேவை.
எசேக்கியேல் 36:26ல், தேவன் இதனையே தமது ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து… கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” மேலும், “நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்” (வச. 25), “உங்கள் உள்ளத்தில் என் ஆவியை வைத்து… (வச. 27). நம்பிக்கையிழந்த ஒரு ஜனத்திற்கு ஒர் புதிய துவக்கத்தைத் தருகின்றார். வாழ்வைப் புதிதாக்குகின்றார்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இந்த வாக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. நாம் அவரை விசுவாசிக்கும் போது புதிய ஆவியுள்ள இருதயத்தைப் பெற்றுக் கொள்வோம். அந்த ஆவியானவர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நீக்கி, நம்மைச் சுத்தமாக்கி புதிய இருதயத்தைத் தருகின்றார். தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட நம்முடைய புதிய இருதயம், வாழ்வுதரும் கிறிஸ்துவின் புதிய இரத்தத்தினால் இயங்குகின்றது. நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாய் வாழ்வோம் (ரோம. 6:4)