ஒரு சனிக்கிழமை மாலையில் எங்கள் ஆலயத்திலுள்ள சில இளைஞர்கள் பிலிப்பியர் 2:3-4ல் குறிப்பிட்டுள்ளவற்றைக் குறித்து ஒருவரையொருவர் சில கடினமான கேள்விகளைக் கேட்கும்படி கூடி வந்திருந்தனர். “நீங்கள் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” சில கடினமான வாதங்கள் என்னவென்றால். எவ்வளவு அடிக்கடி நீ மற்றவர்கள் மீது கரிசனையுடையவனாயிருக்கின்றாய்? மற்றவர்கள் உன்னைக் குறித்து எப்படி விமர்சிக்கின்றனர்? பெருமையானவனென்றா? தாழ்மையானவனென்றா? ஏன்?

நான் அதனை கவனித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய வெளிப்படையான பதில்கள் என்னுடைய ஆர்வத்தை ஈர்த்தன. இளைஞர்கள் தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களை மாற்றிக் கொள்வது கடினமான காரியம் என ஒத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் மாற வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது. ஓர் இளைஞன், “தன்னலம் என்பது என்னுடைய இரத்தத்திலேயேயுள்ளது” எனப் புலம்பினான்.

இயேசு கிறிஸ்துவின் ஆவி நமக்குள்ளே வாசம் பண்ணினால், அவர் மூலமாக நமக்குள்ளேயுள்ள தன்னலமான எண்ணங்கள் மறைந்து, பிறருக்குப் பணி செய்பவராக நம்மை மாற்ற முடியும். எனவேதான் பவுல், பிலிப்பி சபையினரிடம் தேவன் அவர்களுக்குச் செய்துள்ளவற்றையும், அவர்களை தேவன் மாற்றியுள்ளதையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கின்றார். தேவன் அவர்களை கிருபையாக ஏற்றுக் கொண்டார். தமது அன்பினால் அவர்களைத் தேற்றினார். அவர்களுக்கு உதவும்படி பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் கொடுத்துள்ளார் (பிலி. 2:1-2). அவர்களும், நாமும், நம்மைத் தாழ்த்துவதேயன்றி, வேறெவ்வாறு அந்த கிருபையை பெற பதில் செய்ய முடியும்?

ஆம், நம்முடைய மாற்றத்திற்குக் காரணமானவர் தேவனே. அவராலேயே நம்மை மாற்றமுடியும். ஏனெனில் தேவனே நம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (வச. 13) நாமும் நம்மீது கவனம் செலுத்துவதை விட்டு, தாழ்மையோடு பிறருக்குப் பணிசெய்வோம்.