“உன்னுடைய பெயரென்ன?” அர்மான் என்ற ஈரானிய மாணவன் கேட்டான். நான் அவனிடம் என் பெயர் எஸ்டரா என்றேன். அவன் முகமலர்ச்சியோடு, “எங்களுடைய பெர்சியாவிலும் இத்தகைய ஒரு பெயருண்டு. அது ஸெட்டரே” என்றான். இந்த ஒரு சிறிய தொடர்பு ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவகுத்தது. நான் அவனிடம் வேதாகமத்திலுள்ள ஒரு நபர் எஸ்தர். அவள் பெர்சியாவிலிருந்த ஒரு யூத அரசி (தற்சமயம் ஈரான்) அவளுடைய கதையில் ஆரம்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி வரைக்கும் அவனுக்குச் சொன்னேன். எங்களுடைய உரையாடலின் விளைவாக அர்மான் எங்களுடைய வாரந்திர வேதாகம பாட வகுப்பிலும் கலந்து கொண்டு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள முற்பட்டான்.

இயேசுவின் சீடனான பிலிப்பு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ரதத்தில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அது ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” (அப். 8:30) என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கான அர்த்தம் விளங்கவில்லை. அப்பொழுது பிலிப்புவினுடைய கேள்வி சரியான நேரத்தில் வந்தது. அவன் உடனே பிலிப்புவை தன்னுடனே ரதத்தில் அமருமாறு அழைக்கின்றான். தாழ்மையோடு கவனிக்கின்றான். இது எத்தனை ஆச்சரியமான வாய்ப்பு என்பதை பிலிப்பு உணர்ந்துகொண்டு, பேசத் தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான் (வச. 35).

பிலிப்புவைப் போன்று நாமும் நற்செய்தியைச் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம். நாம் வேலை செய்யுமிடத்தில், கடைகளில் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படவும் நம்மை வழிநடத்தவும் தேவையான வார்த்தைகளை நமக்குத் தரவும் நாம் வேண்டுவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும், நாம் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.