Archives: டிசம்பர் 2017

நன்றிகளைக் கூறும் நாட்குறிப்பு

நான் இயேசுவில் விசுவாசியான புதிதில், என் ஆவிக்குரிய வழிகாட்டி, நன்றி சொல்ல வேண்டியவற்றை எழுத ஒரு நாட்குறிப்பைப் பயன்படுத்தச் சொன்னார். அது ஒரு சிறிய புத்தகம். நான் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்லுவேன். சில வேளைகளில் நன்றி சொல்ல வேண்டியதை உடனேயே எழுதிவிடுவேன் அல்லது வாரக்கடைசியில் நினைவுபடுத்தி எழுதுவேன்.

துதிக்க வேண்டியவைகளை எழுதுவது ஓர் நல்ல வழக்கம். இதை நான் என் வாழ்க்கையில் மறுபடியும் செய்ய நினைக்கிறேன். அது தேவ பிரசன்னத்தையும், அவர் கரிசனையையும், அவர் அருளுபவைகளையும் எனக்கு நினைவுபடுத்தும்.

சங்கீதங்களிலே, மிகச்சிறியதான 117ம் சங்கீதத்தினை ஆக்கியோன், “ அவர் நம்மேல் வைத்த கிருபை பெரிதானதால்” (வச. 2) எல்லாரையும் கர்த்தரைத் துதிக்கச் சொல்லுகிறார்.

இன்று, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் தேவன் தம்முடைய அன்பை எப்படிக் காட்டினார் என்பதை நினையுங்கள். மகத்தானவைகளை மட்டும் நினையாமல், அன்றாட வாழ்க்கையில் செய்த சாதாரண காரியங்களையும் நினைத்துப் பாருங்கள். அதன் பின் உங்கள் குடும்பத்திற்கு, சபைக்கு, மற்றவர்களுக்கு அவர் காண்பித்த அன்பை எண்ணிப்பாருங்கள். நம்மெல்லாருக்கும் அவர் பாராட்டிய அன்பினால் நம் மனம் நிறைந்திருப்பதாக.

சங்கீதக்காரன் “கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது” (வச. 2) என்றும் சொல்லுகிறான். சற்று மாற்றிக் கூறினால், அவர் என்றென்றைக்கும் நம்மேல் அன்பு கூறுகிறார் என்பதேயாகும்! ஆகவே, வரும் நாட்களில் நன்றி சொல்ல அநேக காரியங்கள் நமக்கிருக்கும். அவருக்குப் பிரியமான அன்பு பிள்ளைகளாகிய நாம் தேவனைத், துதிப்பதும் நன்றி சொல்வதும்.

என்ன நடக்கிறது பூமியில்?

ஆன்ட்ரு சீட்டில், ஓர் இளைஞனின் செல்போன் கடற்கரையில் காணாமற்போன போது, அது தொலைந்தே போயிற்றென்று நினைத்தார். ஆனால், ஒருவாராம் கழித்து கிளென் கெர்லி என்ற ஓர் மீனவர் அவரை போனில் அழைத்தார். அந்த மீனவர் 25 பவுண்ட் எடையுள்ள “காட்” (COD) மீனின் வயிற்றிலிருந்து அதைத் தான் எடுத்ததாகவும், காய்ந்தவுடன் அது வேலை செய்ததாகவும் அவரிடம் கூறினார்.

வாழ்க்கை என்பது நம்பமுடியாத நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்டவற்றில் ஒரு சில வேதாகமத்தில் காணப்படுகிறது. ஒரு நாள் வரிவசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து “உங்கள் போதகர் வரி செலுத்துகிறதில்லையா?” என்று கேட்டனர் (மத், 17,24). இதை இயேசு போதிக்கிற நேரமாக மாற்றினார். தான் ராஜா என்பதை பேதுரு அறிந்துகொள்ள விரும்பினார். ராஜாவின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியது அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, “ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து அதின் வாயைத் திறந்து பார் ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்” (வச. 25-36). இது இக்கதையின் நம்பமுடியாத நிகழ்ச்சியின் ஒரு பகுதி.

இங்கே இயேசு என்ன செய்கிறார்? இன்னும் சற்று தெளிவாகக் கூறினால், “இயேசு தேவனுடைய ராஜ்யத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” அநேகர் அவரை யார் என்று புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அவரை நம் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும்பொழுது , நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம்.

வாழ்க்கையில் நமக்குப் பல தேவைகளுண்டு, அனால், அவை எல்லாலற்றையும் இயேசு நமக்கு அளிக்கிறார். முன்னாள் போதகர் டேவிட் பாம்போ, சென்னதுபோல, “நாம் இயேசுவுக்காக மீன்பிடிக்கும்போது, நம்முடைய எல்லாத் தேவைகளுக்கும் அவரை சார்ந்திருக்கலாம்.”

கிறிஸ்துமஸும் பாரம்பரியங்களும்

குடைக் கைப்பிடிபோல் வளைந்த மூங்கிலில் சிவப்பும் வெள்ளையும் கலந்த மிட்டாயை சுவைக்கும் பொழுது ஜெர்மானியர்களுக்கு ‘நன்றி சொல்லுங்கள்’ (Danke Schon).  ஏனென்றால், அது ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில்தான் முதலில் செய்யப்பட்டது. பாய்ன்செட்டியா செடியை ரசிக்கும் பொழுது மெக்சிக்கோவுக்கு “கிரேசியாஸ்: (GRACIAS) சொல்லுங்கள். அங்குதான் அது முதலில் வளர்ந்தது. “நோயெல்” என்ற வார்த்தையை பிரான்சு நாட்டிற்கு (merci beaucoup) மெர்சி பியூகேப் என்று சொல்லுங்கள். MISTILETOE இங்கிலாந்து நாட்டிற்கு கூரியதால் “சியர்ஸ்” என்றும் சொல்லூங்கள்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் பாரம்பரியங்களைக் கிறிஸ்துமஸ் காலங்களில் கொண்டாடும்பொழுது, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நம்முடைய நல்ல, இரக்கமுள்ள அன்பான தேவனுக்கு உண்மை மனதுடனே செலுத்த வேண்டும். அவர்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குக் காரணகர்த்தா.  ஏனென்றால், அவர்தான் பெத்லகேம் பாலகன் 2000 வருடங்களுக்கு முன் யூதேயாவிலுள்ள முன்னணையில் பிறந்தார். இந்த தெய்வீக ஈவை அறிவித்த தூதர்கள் “இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன். உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11) என்றனர்.

மின்னிடும் கிறிஸ்துமஸ் மர விளக்குகளிலல்ல, பிரிக்கப்பட்ட பரிசுகளிலுமல்ல, தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க வந்த இயேசு பாலனை (மத். 1:21) பார்க்கும் பொழுது மட்டுமே கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி உண்டாகும். அவருடைய பிறப்பு பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்டது. சொல்லிமுடியாத இந்த கிறிஸ்மஸ் பரிசிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நன்றி சொல்வதே கிறிஸ்துமஸின் உண்மையான மையக் கருபொருள்.

மனக்கிழர்ச்சியை உண்டாக்கும் நம்பிக்கை

கம்பியில்லாமல் ரேடியோ தொடர்பு ஏற்படுத்த, ரெஜினால்ட் ஃபெசன்டன் பல வருடங்களாக முயன்று கொண்டிருந்தார். பிற விஞ்ஞானிகள், அவருடைய எண்ணங்கள் வித்தியாசமாகவும் வழக்கமான முறைகளுக்கு மாறுபட்டதாகவும் இருந்ததால் வெற்றி பெற மாட்டார் என்று சந்தேகித்தனர். ஆனால் 1906, டிசம்பர்  24ம் தேதியில், ரேடியோவில் இசையை ஒலிபரப்பிய உலகின் முதல் மனிதன் நான் என்று அறிவித்தார்.

எங்கு, வாழைப்பழங்கள் அறுவடையாகிறது, எங்கு விற்கவேண்டும் என்று தன் கப்பல்களுக்குத் தெரிவிக்க, யுனைட்டட் பழக் கம்பெனி, பன்னிரண்டு கப்பல்களில் ரேடியோ பொருத்தியிருந்தது. ஃபசன்டன் இந்தக் கம்பெனியோடு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். கிறிஸ்துமஸூக்கு முந்தின நாளில் ரேடியோ அறிவிப்பை கவனமாய்க் கேட்கச் சொல்லி இருந்தார். இரவு 9 மணிக்கு அவர் சத்தத்தைக் கப்பலிலுள்ளவர்கள் அனைவரும் கேட்டனர்.

பின் அவர் ஓர் நீண்ட இசைப் பாடலுக்குப் பின் தன் வயலினை எடுத்து “ஓ ஹோலி நைட்”
(O HOLY NIGHT) என்ற பாடலை இசைத்துக் கொண்டே பாடினார். கடைசியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, லூக்கா 2ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்து, பெத்லகேமில் பிறந்ததை தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்த பகுதியை வாசித்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெத்லகேம் மேய்ப்பர்களும் 1906ல் யுனைட்டெட் கம்பெனி கப்பல்களிலிருந்தவர்களும், அந்த இருண்ட இரவில் எதிர்பாராத நம்பிக்கையூட்டும் ஓர் செய்தியைக் கேட்டனர். இன்றும் அதே நம்பிக்கையூட்டும் செய்தியை தேவன் நமக்கும் சொல்லுகிறார். நமக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்… ஆண்டவராகிய கிறிஸ்து! (லூக். 2:11) நாமும் வானதூதர்களோடும், நமக்கு முன் சென்ற விசுவாசிகளோடும் சேர்ந்து, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி,” தேவனைத் துதிப்போம் (வச. 14).

தேவன் நம்மோடு

“கிறிஸ்து என்னோடும், கிறிஸ்து என்னுள்ளும், கிறிஸ்து முன்னும், கிறிஸ்து பின்னும் கிறிஸ்து என்கீழும், கிறிஸ்து என்மேலும், கிறிஸ்து என்வலமும், கிறிஸ்து என் இடமும்…”

மத்தேயு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து எழுதியதை வாசிக்கும்பொழுது, 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த செல்ட்டிக் கிறிஸ்தவறான பரி. பேட்ரிக் என்பவர் எழுதிய இப்பாடலின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். அவை என்னை அனலுறத்தழுவி, ஒருபோதும் நீ தனியனில்லையென்று சொல்வது போல இருக்கும்.

தேவன் தம் ஜனங்களோடு வாசம்பண்ணுவதே கிறிஸ்துமஸின் மையக் கருத்து என்று மத்தேயு சுவிசேஷம் சொல்லுகிறது.

ஒரு குழந்தை, “தேவன் நம்மோடு” எனும் அர்த்தமுள்ள இம்மானுவேல் எனும் பேரால் அழைக்கப்படும் (ஏசா. 7:14) என்று ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பரிசுத்தாவியினால் பிறந்த இயேசுவின் பிறப்பில் முழுமையாய் நிறைவேறினதையே மத்தேயு இங்கே சொல்லியிருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் மையமாயிருப்பதால், இதை வைத்தே தன் சுவிசேஷத்தை மத்தேயு ஆரம்பித்தும் முடித்தும் இருக்கிறார். தன் சீஷர்களிடம் இயேசு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார் (மத். 28:20).

தேவனுடைய ஆவி நமக்குள் வாசம் பண்ணுவதால் கிறிஸ்து எப்பொழுதும் விசுவாசிகளோடு இருக்கிறார் என்பதை, பரி. பேட்ரிக்கின் பாடல் எனக்கு நினைவுறுத்துகிறது. நான் தளர்ச்சியடைந்திருக்கிற போதும், பயப்படும்போதும் “நான் உன்னைவிட்டு விலகுவதில்லை” என்கிற அவருடைய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு தைரியமடையலாம். நான் தூங்கமுடியாமல் கஷ்டப்படும்பொழுது, உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும் என்று கேட்கலாம். நான் சந்தோஷத்தால் நிறைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் பொழுது. அவர் என் வாழ்வில் கிருபையாய் செய்த காரியங்களை நினைத்து நன்றி சொல்லலாம்.