வகை  |  odb

உடைந்து போகக்கூடிய பரிசு

உடைந்து போகக் கூடிய பரிசை பிறருக்கு நாம் அளிக்கும் பொழுது, அப்பொருள் உள்ள பெட்டியின் மேல் ‘கவனமாக கையாளுங்கள் உடையக் கூடியது’ என்ற குறிப்பு எழுதப்பட்டுள்ளதா என்று நிச்சயப்படுத்திக் கொள்வோம். உள்ளேயுள்ள பொருள் யாராலும் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை நாம் விரும்புவதால் வெளியே உடையக் கூடியது என்ற வார்த்தை பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகிறது.

தேவன் நமக்கு அளித்த பரிசு மிகவும் பெலவீனமான பாலகன் வடிவில் வந்தது. சில சமயங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் பார்க்கும் அழகான கிறிஸ்மஸ் காட்சியைப் பார்த்து, கிறிஸ்மஸ் மிகவும் மகிழ்ச்சியூட்டும் நாள்…

கிறிஸ்மஸ் புதிர்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ள கிறிஸ்மஸ் கேரல் என்ற நாவலின ஆரம்பத்தில் அக்கதையில் வரும் எபினேசர் ஸ்குரூஜ் என்பவருடைய வாழ்க்கை ஒரு புதிராகவே உள்ளது. ஏன் அவர் அற்பப் புத்தியுடையவராக இருக்கிறார்? அவர் எப்படி மிகவும் மோசமான சுய நலக்காரராக மாறினார் என்பது புதிராகவே இருந்தது. பின்பு கதையில் வரும் கிறிஸ்மஸ் உற்சாகம் ஸ்குரூஜின் கடந்தகால அனுபவத்தின் வழியாக அவனை நடத்திச் சென்ற பொழுது அவரது செயல்பாடுகள் பற்றி தெளிவு உண்டாகிறது, மகிழ்ச்சியான வாலிபனாக வாழ்ந்த ஸ்குரூஜ் தன்னலம் வாய்ந்த போலியாக மாற, அவனில் ஏற்பட்ட…

ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும்

அநேக சிறு பிள்ளைகளைப் போல நானும் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன். மிகவும் எதிர்பார்ப்புடன் கிறிஸ்மஸ் மரத்தின் அடியிலிருந்து எனக்கு என்ன விளையாட்டுச் சாமான், பொம்மை கிடைக்குமென்று ஆவலுடன் தொட்டுப் பார்ப்பேன். ஆகவே எனக்கு வயதானவுடன் சட்டையும், கால்சட்டையும் எனக்கு பரிசாக கிடைக்க ஆரம்பித்தவுடன் மனம் சோர்ந்து போனேன். பெரியவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தராது. சென்ற ஆண்டு கிறிஸ்மஸிற்கு எனது பிள்ளைகள் பிரகாசமான நிறங்களும், அலங்கார வடிவமைப்பு கொண்ட மிக நேர்த்தியான காலுறைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தார்கள் நான் மிகவும் இளம்…

டிரம் அடிக்கும் சிறுவன்

1941ல் எழுதப்பட்ட “டிரம் அடிக்கும் சிறுவன்” கிறிஸ்மஸ் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ஆரம்ப நாட்களில் டிரம்மின் கிறிஸ்மஸ் பாடல் என்று அழைக்கப்பட்டது. அது செக் நாட்டின் பாரம்பரிய கிறிஸ்மஸ் பாடலைச் சார்ந்து மத்தேயு 1-2, லூக்கா 2 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் டிரம் அடிக்கும் சிறுவனைப் பற்றி எதுவும் கூறப்படாவிட்டாலும், கிறிஸ்மஸ் பாடல்கள் ஆராதனையின் உண்மையான அர்த்தம் என்னவென்று விளக்குகின்றன. அந்தக் கிறிஸ்மஸ் பாடலில் கிறிஸ்து பிறந்த இடத்திற்கு வரும்படி மூன்று சாஸ்திரிகள் அந்த சிறுவனைக் கேட்டுக் கொண்டார்கள் அந்த சாஸ்திரிகள்…

அதிசயமான அன்பு

எனது சிநேகிதி டேவிட்டினியின் கணவர் இறந்த பின், வந்த முதல் கிறிஸ்மஸ் நாட்களில், இயேசு இப்பூமியில் பிறந்த பொழுது பரலோகத்தில் எப்படி இருந்திருக்கும் என்று அவள் கற்பனை பண்ணி அழகான கடிதம் ஒன்று எழுதினாள். “இது தான் நடக்கும் என்று தேவனுக்கு தெரிந்த காரியம் தான்” என்று அவள் எழுதினாள். “பிதா, குமாரன் பரிசுத்தாவி மூவரும் பரலோகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த மூவரும் ஒன்றாக இணைந்திருந்த விலை மதிப்பற்ற ஐக்கியத்தை, தேவன் நமக்காக முறிக்க ஒப்புக் கொண்டார். ஆகவே பரலோகத்தில் தேவகுமாரனுடைய இடம் வெறுமையாக…

ரோமருடைய சமாதானம்

யுத்தத்திற்கான கிரயத்தை யாராலும் செலுத்த இயலாது. 64 தேசங்கள் இப்பொழுது ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு இணையதளம் அறிவித்துள்ளது. அவை எப்பொழுது எவ்வாறு முடியும்? நாம் சமாதானத்தை விரும்புகிறோம், ஆனால் நீதியை விலைக்கிரயம் செலுத்தி அல்ல.

இயேசு சமாதானக் காலத்தில் பிறந்தார். ஆனால் அந்த சமாதானம் வன்முறையினாலும் அடக்கு முறையினாலும் ஏற்படுத்தப்பட்டது. ரோமர்கள் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை உடையவர்களை அடக்கு முறையினால் ஒழித்துக் கட்டினதினால், ரோமர்களின் ஆட்சியில் சமாதானம் இருந்தது.

சமாதானம் இருந்தது போல காணப்பட்ட அந்த நாட்களுக்கு, ஏழுநூற்றாண்டுகளுக்கு முன்பு,…

செய்யுளின் ஏழாவது சரணம்

1861ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஹென்ரி வர்ட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோவின் மனைவி பிரான்செஸ் ஒரு தீ விபத்தில் சிக்கி மரித்துவிட்டாள். அவர் மனைவி இறந்தபின் முதல் கிறிஸ்மஸ்ஸில் சொல்லமுடியாத வருத்தமான உணர்வுகளால் இந்த விடுமுறை நிறைந்துள்ளது” என்று அவர் அவரது நாட்குறிப்பேட்டில் எழுதினார். அடுத்த ஆண்டிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி எனக்கு இனிமேல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
1863ம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போர் மெதுவாக ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. லாங்ஃபெல்லோவின் மகன் அவரது விருப்பத்திற்கு மாறாக…

இருளில் தேடுதல்

வெஸ்ட் ஹைலேண்ட் வகையைச் சேர்ந்த எங்களது வயது சென்ற வெண்மை நிற நாய் எங்களது காலருகே படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும். கடந்த 13 ஆண்டுகளாக அதுதான் அதனுடைய இடம். பொதுவாக அது அமைதியாக அங்கும், இங்கும் அசையாமல் படுத்திருக்கும். ஆனால் சமீபகாலமாக நடு இரவில் அதன் கால்களால் மெதுவாக எங்களைத் தட்டிப்பார்க்கும். அது வெளியே போவதற்குத்தான் அப்படி செய்கிறதென்று முதலில் எண்ணி அதை வெளியே விட்டோம். பின்பு நாங்கள் எங்களது படுக்கையில் இருக்கிறோமா இல்லையா என்று பார்ப்பதற்குத்தான் அப்படிச் செய்கிறது என்று அறிந்து கொண்டோம்.…

கிறிஸ்மஸ் ஓய்வு

நான் சிறுவனாக இருந்தபொழுது பணம் சம்பாதிப்பதற்காக வீடுகளில் செய்தித்தாள் போட்டேன். அது காலை வெளியீடாக இருந்தபடியினாலும், நான் போட வேண்டிய 140 செய்தித்தாள்களையும் அந்தந்த வீடுகளிலே காலை 6 மணிக்கு சேர்க்க வேண்டியதிருந்தாலும், வாரம் 7 நாட்களிலும் நான் அதிகாலை 3 மணிக்கு எழும்ப வேண்டியதிருந்தது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் ஒருநாள் வேறுபட்டதாக இருந்தது. கிறிஸ்மஸ் நாளுக்குரிய காலை செய்தித்தாளை, கிறிஸ்மஸ்க்கு முந்தின நாள் மாலையே போட்டு விடுவோம். ஆகவே கிறிஸ்மஸ் அன்று மட்டும்தான் நான் மற்றவர்களைப் போல காலையில் நன்றாக உறங்கி…