எனது சிநேகிதி டேவிட்டினியின் கணவர் இறந்த பின், வந்த முதல் கிறிஸ்மஸ் நாட்களில், இயேசு இப்பூமியில் பிறந்த பொழுது பரலோகத்தில் எப்படி இருந்திருக்கும் என்று அவள் கற்பனை பண்ணி அழகான கடிதம் ஒன்று எழுதினாள். “இது தான் நடக்கும் என்று தேவனுக்கு தெரிந்த காரியம் தான்” என்று அவள் எழுதினாள். “பிதா, குமாரன் பரிசுத்தாவி மூவரும் பரலோகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த மூவரும் ஒன்றாக இணைந்திருந்த விலை மதிப்பற்ற ஐக்கியத்தை, தேவன் நமக்காக முறிக்க ஒப்புக் கொண்டார். ஆகவே பரலோகத்தில் தேவகுமாரனுடைய இடம் வெறுமையாக காலியாக இருந்தது” என்று எழுதினாள்.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது ஜனங்களுக்கு உபதேசித்து சுகமளித்தார். அப்பொழுது அவர் “என் சித்தத்தின்படியல்ல என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்தி இறங்கி வந்தேன்… குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.” (யோவான் 6:38, 40) என்று அவர் கூறினார்.

இயேசு பெத்தலேகேமில் பிறந்த பொழுது தேவனுடைய அன்பை செயல்படுத்திக் காண்பிக்க வேண்டிய அவரது பணி ஆரம்பமானது. பாவத்தின் வல்லமையினால் நமக்கு ஏற்பட்ட மரண தண்டனையிலிருந்து நம்மை விடுவிக்க அவர் தமது ஜீவனை சிலுவையிலே கொடுப்பதற்கான ஆரம்பமாக அது இருந்தது.

“நான் நேசிக்கும் ஒருவரை என்னில் ஒருவராக இருக்கும் ஒருவரை, யாருக்காகவும் இழப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை.” என்று டேவிட்டினி தன் கடிதத்தை முடிந்திருந்தாள். ஆனால் தேவன் அதைச் செய்தார். நான் அவருடைய வீட்டில் அவரோடு கூட நித்திய காலமாய் வாழ்வதற்காக, என்னுடைய கணவர் இல்லாமல் என்னுடைய வீடு காலியாக இருந்ததைவிட அவருடைய வீடு (பரலோகம்) காலியாக இருந்ததை தேவன் ஏற்றுக் கொண்டார்”.

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ…அவரைத்தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3: 16)