அவர் நம்மை விடமாட்டார்
ஜூலியோ என்ற மனிதன் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின்மேல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாலம் நியூயார்க் நகரத்தையும் நியூஜெர்ஸி மாகாணத்தையும் இணைக்கும் ஒரு பாலம்; போக்குவரத்து நெரிசல் அதிகம். அப்போது அங்கே வாழ்வா சாவா என்கிற நிலையில் இருந்த ஒரு மனிதனை பார்த்தான். அந்த மனிதன் பாலத்திலிருந்து நதிக்குள் குதிக்க தயாராக இருந்தான். போலீஸ் வருவதற்கு நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஜூலியோ தன்னுடைய சைக்கிளிலிருந்து விரைவாக இறங்கி, கைகளை விரித்துக்கொண்டு அந்த மனிதனை அணுகி “நீ குதிக்காதே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று சொல்லி கலக்கத்தில் இருந்த அவனை இறுகப் பிடித்துக் கொண்டு அப்பாதையில் சென்றுகொண்டிருந்த இன்னொரு மனிதனோடு சேர்ந்து அவனை பாதுகாப்பாக கொண்டுவந்தான். அபாயம் கடந்த போதும் கூட ஜூலியோ அந்த மனிதனை விடவில்லை.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இதே விதமாக, வாழ்வு அல்லது மரணம் என்ற நிலையில் மனித வர்க்கம் இருக்கும்போதுதான் நல்ல மேய்ப்பராகிய இயேசு தம்முடைய ஜீவனையே பலியாக கொடுத்து தம்மேல் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் விட்டு விடுவதில்லை என்றார். தம்மில் நம்பிக்கை வைத்த ஆடுகளை இவ்விதமாக ஆசீர்வதிப்பேன் என்றும் சொன்னார்: “அவர்கள் அவரை சொந்தமாக அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு என்றும் அழியாத நித்திய ஜீவனை கொடுப்பார், அவருடைய கவனிப்பில் பாதுகாப்பாக இருப்பார்கள்”. இந்த பாதுகாப்பு அந்த பலவீனமான, வலிமையற்ற ஆடுகளினால் அல்ல; அந்த வலிமை மிக்க மேய்ப்பருடைய போதுமான தன்மையில் அது காணப்பட்டது. “அவர்களை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29).
நாம் நம்பிக்கையற்று பரிதாபமாக இருக்கும் போது, இயேசு நம்மை மீட்டுக்கொண்டார். நாம் இப்பொழுது பாதுகாப்பாக அவருடைய சொந்தத்தில் இருக்கலாம். அவர் நம்மை நேசிக்கிறார், தேடிக் கண்டுபிடிக்கிறார் இரட்சிக்கிறார், எப்பொழுதும் நம்மை கைவிடார் என்று வாக்களிக்கிறார்.

கிறிஸ்துவை எப்படி பிரதிபலிப்பது?
பிரான்ஸ் நாட்டில் லீசியு என்ற ஊரைச் சேர்ந்த தெரெஸ் என்னும் கன்னியாஸ்திரி, சிறுமியாக இருந்தபோது மகிழ்ச்சியுடனும் கவலையற்றும் இருந்தாள். ஆனால் அவளுக்கு நான்கு வயதானபோது அவளுடைய அம்மா இறந்துவிட்டார்; அப்பொழுது மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகவும் எளிதில் கலங்குகிறவளாகவும் மாறிவிட்டாள். பல வருடங்களுக்கு பின்னர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தினநாள் ஒரு திருப்பம் காணப்பட்டது. தன்னுடைய சபையோடு பண்டிகையை அனுசரிக்கும்போது, ஒரு மாற்றத்தை அவள் உணர்ந்தாள். இறைவன் அவளை பயத்தினின்று விடுவித்து மகிழ்ச்சியை அளித்தார். இந்த மாறுதல், இறைவன் வானத்தை விட்டு பூமிக்கு வந்து இயேசு என்னும் மானிடனாக அவளுக்குள் வாசம் செய்த வல்லமையால் தான் உண்டாயிற்று என்ற மாற்றத்திர்கான காரணத்தை அவள் பகர்ந்தாள்.
இறைவன் நமக்குள் வாசம் செய்வது என்றால் என்ன? அது ‘ஒரு ரகசியம்’ என்று பவுல் கொலோசெயருக்கு எழுதினார். அது “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டது” (கொலோசெயர் 1:25) என்கிறார். “இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 1:27). இப்பொழுது கிறிஸ்து கொலோசெயர் நடுவே வாசம் செய்கிறதினாலே அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய சந்தோஷத்தை அனுபவித்தார்கள். பழைய பாவத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.
நாமும் இயேசுவை நமக்கு இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் நம்மில் வாசம் பண்ணுகிற இந்த ரகசிய வாழ்வை அனுபவிப்போம். அவருடைய ஆவியின் மூலமாக திரெசை போலவே அவர் நம்முடைய பயத்தினின்றும் நம்மை விடுவிப்பார். ஆவியின் கனி - சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை போன்றவை - ( கலாத்தியர் 5:22-23) நம்மில் வளரும்.
‘கிறிஸ்து நமக்குள் வாசமாயிருக்கும் இந்த அருமையான ரகசியத்தை இறைவன் நமக்கு தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்.

அன்பில் வேரூன்றி
“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.
அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).
ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை - தேவனின் அன்பில் வேரூன்றுவதும், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!

பார்ப்பதற்கு கண்கள்
‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.
வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது. ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.
கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன. அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள் அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16). கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது – வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).
ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.

ஒருபோதும் போதாது
சந்திரனை வட்டமிட்ட முதல் விண்வெளி பயணத்தை ஃபிராங்க் போர்மேன் நடத்திச் சென்றார். அவருக்கு அது திருப்திகரமாய் இல்லை. போய் வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது. ஃபிராங்குக்கு பயண நோய் வந்ததினால் இதை கைவிட்டுவிட்டார். முப்பது நிமிடங்கள் எடை இல்லாமல் இருந்தது நன்றாகவே இருந்தது என்று அவர் கூறினார். பிறகு அதற்கு பழக்கப்பட்டுவிட்டார். அருகில் சென்ற போது நிலவு மங்கியிருப்பதையும் குழி குழியாய் இருப்பதையும் கண்டார். அவரது குழுவினர் சாம்பல் நிற தரிசு நிலத்தை படமெடுத்த பின்னர் சலித்துவிட்டனர்.
இதற்கு துன்பு வேறு யாரும் போகாத இடத்திற்கு ஃபிராங்க் சென்றார். அது போதாததாயிருந்தது. இந்த உலகத்திற்கு வெளியே நடந்த அனுபவத்தால் அவர் விரைவில் சோர்வடைந்ததால் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமிக்குரிய எந்த அனுபவமும் நமக்கு இறுதியான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று பிரசங்கியை எழுதியவர் கவனித்தார். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (1:8). நாம் பரவசத்தின் தருணங்களை உணரலாம் ஆனால் அந்த உற்சாகம் தொய்ந்துப்போய் அடுத்த உணர்ச்சியூட்டும் காரியத்தை நாடுகிறோம்.
சந்திரனுக்குப் பின்னால் இருளிலிருந்து பூமி எழுவதைக் கண்ட காட்சி, ஃபிராங்கிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாயிருந்தது. நீல மற்றும் வெள்ளை சுழல் பளிங்கு போல நம் உலகம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதே போல உண்மையான மகிழ்ச்சி நம்மேல் பிரகாசிக்கும் குமாரன் - நம்முடைய ஜீவன், நம் வாழ்வின் மூலாதாரணம், அன்பு, மற்றும் அழகிற்கு இறுதி ஆதாரமயிருக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது. நம்முடைய ஆழ்ந்த திருப்தி இந்த உலகத்தின் வெளியிலிருந்து வருகிறது. நம்முடைய பிரச்சனை? நாம் இங்கிருந்து சந்திரனுக்கு செல்லலாம், ஆனாலும் நாம் வெகு தூரம் செல்லவில்லை.