
சுவாசமும் அதின் சுருக்கமும்
மரண படுக்கையில் படுத்திருக்கும் எனது தந்தையின் சுவாச காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இறுதியில் ஒரு நாள் அது நின்று போவதை நானும் என் சகோதரியும் அம்மாவும் அழுகையுடன் பார்த்தோம். அவருடைய மரணம் எங்கள் வாழ்க்கையை வெறுமையாக்கினது. எங்களோடு கூட எப்போதும் இருந்த அவர் இப்போது அவருடைய நினைவுகளை மட்டுமே வைத்து சென்றுவிட்டார். இருப்பினும் அவரோடு மறுபடியும் ஒன்றிணைக்க படுவோம் என்கிற விசுவாசம் எங்களுக்கு இருக்கிறது.
அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனென்றால் அவர் தேவனை அறிந்தவரும் தேவன் மேல் அன்புவைத்தவராகவும் இருந்தார். என் தந்தையின் முதல் சுவாசத்தை தேவன் அவர் நாசியிலே ஊதினார். அவர் முதல் சுவாசத்திலிருந்து அதை தொடர்ந்து எல்லா சுவாசத்திலும் தேவனுடைய நெருக்கமான ஈடுபாடு அவரோடு இருந்தது. அதைப்போல் தான் அவர் நம் வாழ்விலும் எல்லா சுவாசத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேவனே நாம் கருவிலிருக்கும் போது பிரமிக்கத்தக்க அதிசயமாய் நம்மை உருவாக்கினார் (வச. 14). அதுமுதல் இருந்து என் தந்தை போல் நம் இறுதி சுவாசம் வரையில் தேவனே நம்மோடு இருந்து நம்மை அன்போடும் அரவணைப்போடும் மறுபடி அவரோடு சேர்த்துக் கொள்வார்.
எல்லா தேவ பிள்ளைகளுக்கும் இது உண்மையாக இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். ஆகையால் சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக என்கிற வசனத்தின்படி, நமக்கு மீதமுள்ள ஒவ்வொரு நாளும் அவரை துதிப்போம்.

எதிர்கொள்ளும் சவால்கள்
சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.
தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்"(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.
“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார்.
நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.

எப்போதும் நன்றி சொல்லவேண்டும்
பதினேழாம் நூற்றாண்டில் மார்ட்டின் ரிங்கிட், ஜெர்மனியிலுள்ள சாக்சனி மாநிலத்தில் போதகராய் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பணியாற்றி வந்தார். அப்போது ஜெர்மனி முழுவதும் போர் நடந்து வந்தது, அதோடு கூட கொள்ளை நோயும் பரவி கொண்டு வந்தது. அந்த வருடமே அவர் மனைவி அடக்க ஆராதனையை சேர்த்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆராதனைகளை நடத்திவைத்தார். பஞ்சத்தின் மிகுதியால் அவர் குடும்பத்திற்கு ஆகாரமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவர் விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருந்து தேவனுக்கு விடாமல் நன்றி கூறி பிரபல ஆங்கில பாடலான "Now thank we all our God" இயற்றினார்.
தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் துதி செலுத்தி சோர்வான நேரத்திலோ, எதிராளி அவர்களை கொடுக்கும் போது, எப்போதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏசாயா கூறியதற்கு ரின்கார்ட் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தேவ நாமத்தை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணினார்கள் (வச. 4).
நம்மை சுற்றி நன்மைகள் நடக்கும் போது, நமக்கு உண்ண உணவு இருக்கும் போது தேவனுக்கு நன்றி சொல்வது கடினம் அல்ல. ஆனால் நம் நெருங்கிய உறவு நம்மை விட்டு பிரிந்திருக்கும் போதும் நமக்கு உண்ண உணவு இல்லாமல் இருக்கும் போதும் தேவனுக்கு நன்றி செலுத்த முடியுமா?
நாமும் போதகர் ரின்கார்டுடன் சேர்ந்து நம் இருதயத்தை ஒன்றிணைத்து தேவனுக்கு துதிகள் செலுத்தி அவரை கீர்த்தனம் பண்ணுவோம். பூமியெங்கும் அவர் நாமம் அறியப்படக்கடவது (வச. 5).

யாவருக்கும், அனைவருக்கும்
எள் சேல்வடார் தேசத்தில் இயேசுவை கணப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலை நகரத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில இருந்ததாலும் அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. "உலக இரட்சகர்" என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படி அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டதுகிறது.
அவரே உலக இரட்சகர் என்று 1 யோவான் 4:14 கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அவர் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதோ, படிப்போ, செல்வமோ தேவையில்லை. தம்மை பக்தியுடன் ஆர்வமாய் தேடுபவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார் மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும், யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று எல்லாவித மக்களுக்கும் அறிவித்தார். ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோம. 10:9). அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். (வச.11, 13).
இயேசு தூரமாக வைக்கப்பட்டு வழிபடபடுபவர் அல்ல. விசுவாசத்தினால் இணைந்து அவரோடு உறவு கொள்ளும் படி அழைக்கிறார். அவர் நமக்கு தரும் இரட்சிப்பை உணர்ந்துகொண்டு பரிசுத்த உறவுக்குள்ளாக இன்றைக்கே செல்வோம்.
